Friday, July 12, 2019

“தினகரன் வசிப்பது கற்பகம் கார்டனா, போயஸ் கார்டனா?”

‘‘கற்பகம் கார்டனில் வசிக்கிறோம் என்பதை மறந்துவிட்டுப் பல நேரங்களில் போயஸ் கார்டனில் வசிப்பதாகவே தினகரன் எண்ணிக்கொள்கிறார்.
இரண்டுமே கார்டன் என்பதால் இவர் அம்மாவாகிவிட முடியுமா?” என்று நக்கலாகக் கேட்கிறார்கள் அ.தி.மு.க-வினர். திருப்புமுனையை ஏற்படுத்துவார் என்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அவர் பின்னால் அணி திரண்டவர்கள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திக்குத் தெரியாமல் திணறுகிறார்கள். தினகரனின் தளபதிகளாக இருந்த பலரும் அவரை விட்டுவிட்டு திக்குக்கு ஒருவராக ஓடுகிறார்கள். அணிமாறி வருகிறார்கள்.
தேர்தலில் ஏற்பட்ட தொய்வு மட்டுமே இத்தனைக்கும் காரணமா...
“உண்மையில் தினகரனுக்கு இது சோதனையான கட்டமே.
ஆர்.கே. நகர் தேர்தல் அவரை எந்த அளவுக்குச் செல்வாக்கின் உச்சத்துக்குக் கொண்டுசென்றதோ, அதற்கு நேர்மாறாக நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய செல்வாக்கு சரிந்ததுள்ளது. தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். ஆனால், தினகரன் பின்னால் சென்றவர்கள் பதவியை முன்வைத்தே அவரின் பின்னால் நின்றது இப்போது தெரிகிறது.
குறிப்பாக தினகரன் கட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டு பிரதான காரணங்களைச் சொல்ல முடியும். ஒன்று, அவரைச் சுற்றி அகழி போன்று மறித்துள்ள ஐந்து மண்டல பொறுப்பாளர்கள். இரண்டாவது தினகரனின் செயல்பாடுகள். அவரது சமீபத்திய நடவடிக்கைகள் அவருடைய கட்சியினரால் ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. எது நடந்தாலும் இவர் பின்னால் நிற்போம் என்று பதவியைப் பறிகொடுத்த 18 எம்.எல்.ஏ-க்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினால் அவர்கள் உள்ளக் குமுறலைப் புரிந்துகொள்ளலாம். தினகரனைச் சந்திப்பதே பெரிய விஷயமாக உள்ளது. அவருடைய உதவியாளர் ஜனா மனது வைத்தால் மட்டுமே சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்கும்.
தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா போன்றோர் வெளியேற இந்த மன அழுத்தமே காரணம். தினகரன் ஒருபுறம் என்றால் அவருடைய மனைவி அனுராதாவின் கெடுபிடி பல இடங்களில் இருக்கிறது. அவர் தன் கணவரை எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல மாபெரும் தலைவராகக் கருதவேண்டும் என்று நினைக்கிறார். பத்து ஆண்டுகள் அரசியலில் இருந்தே ஓடிப்போனவர் திடீரென உள்ளே வந்து உடனடியாக மக்கள் தலைவராக உருவாக முடியாது. போயஸ் கார்டன் போல தன் வீட்டையும் இரும்புக்கோட்டையாக மாற்றப் பார்த்ததன் விளைவாக, அவர் உருவாக்கிய கட்சி கொஞ்சம் கொஞ்சமாகச் சரிய ஆரம்பித்துவிட்டது.
தொண்டர்களோடு தொடர்பு இல்லாமல் ஒரு தலைவர் வளர முடியாது. கட்சிக்காரர்கள் திருமணத்துக்கு அழைத்தால்கூட, ‘வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வராமல் இருந்த கதை பலமுறை நடந்துள்ளது. யாரிடமும் தொடர்பு கொண்டு பேசுவதில்லை. தான் என்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கிவிட்டது. சசிகலா பெயரைச் சொல்லித்தான் கட்சியை ஆரம்பித்தார். ஆனால், சசிகலாவின் தீவிர விசுவாசிகளையே இவர் கண்டுகொள்வதில்லை. இதில் தவறு எங்கேயோ நடக்கிறது. இப்போது அவர், கட்சி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதுவும் சசிகலாவின் ஒப்புதலுடன் வெளியிடப் பட்டதாகச் சொல்கிறார். இந்தப் பட்டியலில் சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களைவிட, இவருக்கு நெருக்கமாக இருப்பவர்களே அதிகம் இடம் பிடித்துள்ளார்கள். உண்மையில் சசிகலாவின் ஒப்புதலுடன் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டதா என்பதற்கு சசிகலா வெளியே வந்தால்தான் விடை கிடைக்கும்”.
தினகரன் நிலைகுறித்து தங்க தமிழ்ச்செல்வன், “மாபெரும் தலைவராக தினகரன் தன்னை நினைத்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்ததுதான் இவருடைய வீழ்ச்சிக்குக் காரணம். தூக்கிவைத்துக் கொண்டாடிய தொண்டனைத் தூக்கிப்போடும் மனோபாவம் அவரிடம் அதிகரித்துவிட்டது. மந்திரம் போட்டதைப்போல சிலர் சொல்வதை மட்டுமே இவர் கேட்டுக்கொண்டு நடந்தால், கூடிய சீக்கிரமே அரசியல் களத்திலிருந்து காணாமல் போய்விடுவார். தினகரன் செய்த மிகப் பெரிய தவறே அ.தி.மு.க-க்குப் போட்டியாகக் கட்சி ஆரம்பித்ததுதான். அதை அ.தி.மு.க தொண்டர்களே ரசிக்கவில்லை. இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பு கிடையாது என்று இவர் சொன்னதை அவர் பின்னால் இருந்தவர்களே ரசிக்கவில்லை. கூடும் கூட்டம் எல்லாம் தனக்கே கூடுகிறது என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டார். அணியாக இவர் செயல்பட்டுக்கொண்டே அ.தி.மு.க சட்டப் போராட்டம் நடத்தியிருந்தால் இவருக்கு அரசியல் எதிர்காலம் இருந்திருக்கும்’’ என்றார்.
தினகரனுக்கு நிழலாக இருக்கும் மாணிக்க ராஜா மீதுதான் பலரும் குற்றம் சொல்கிறார்கள். ஆனால் அவரோ, “விலகிச் சென்ற தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா உள்ளிட்ட பலரை நீக்க வேண்டிய நிலையில்தான் அ.ம.மு.க இருந்தது. அவர்கள் பணம் வாங்குவதாகப் புகார் வந்த வண்ணம் இருந்தது. என் பேச்சை கேட்டுக்கொண்டு தினகரன் செயல்படுவதாகக் கூறுவது பொய். சில பச்சோந்திகள் வெளியேறுவதால் அ.ம.மு.க தூய்மை அடைகிறது. ஒருவர் போனால் நாற்பது பேர் வருகிறார்கள்” என்று கூலாகச் சொல்கிறார்.
ஒரு தலைவன் தொண்டர்களால் உருவாக வேண்டும்.
ஆனால் தினகரன் தொண்டர்களால் உருவானவர் அல்ல...
அமமுக கட்சி விரைவில் காணாமல் போவது உறுதி..!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...