#1920-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராக இருந்த சர்.தியாகராயர் முதன்முதலாக குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கினார். இதை நான் சொன்னால் யாருக்கோ உள்ள புகழை குறைக்கப் பார்க்கிறேன் என்கிறார்கள்.
நல்ல திட்டம் என்று இருக்குமானால் அதனை இந்த ஆண்டு, இன்னார்தான் தொடங்கினார் என்று சொல்வது தவறில்லை-புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
_____________________________________
"ஒரு பரீட்சார்த்த முறையாக எஞ்சியுள்ள இந்த ஆண்டில் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி பிள்ளைகளுக்கு மதிய உணவாக டிபன் வழங்குவது. ஒரு பிள்ளைக்கு ஒரு அணாவுக்கு மேல் போகாமல் இருக்கவேண்டும்"என்ற தீர்மானம் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது.
அந்த நேரத்தில் அந்தப் பள்ளியில் இருந்த பிள்ளைகள் எண்ணிக்கை 65 தான்.
அடுத்த ஆண்டில் மேலும் 4 பள்ளிகளில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
1922-23-ம் ஆண்டில் மொத்தம் 811 பிள்ளைகள்.
1924-25-ம் ஆண்டில் 1671 ஆக உயர்ந்தது.
இந்த திட்டத்தினால் சென்னை மாநகராட்சிக்கு 1922-23-ம் ஆண்டுக்கு ரூ.4047 ஆக இருந்த செலவு 1924-25-ம் ஆண்டு ரூபாய் 11 ஆயிரமாக ஆனது.
1925-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
1927-ம் ஆண்டில் மீண்டும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு 25 மாநகராட்சி பள்ளிகளில் இருந்த பிள்ளைகள் இதன் மூலம் பயன் அடைந்தார்கள்.

No comments:
Post a Comment