Wednesday, July 10, 2019

தமிழர்களுக்கும் காக்கைக்கும் உள்ள தொடர்பு.

 
ஒவ்வொரு நாளும் தமிழர்களின் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு வீட்டுக் காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. 'காகம் கரைதல்: வீட்டிற்கு உறவினர்கள் வருகையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இது. குறித்த nambikkaikalai.ithuthu.ithu
நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் பழங்காலத்தில். இருந்தே இருப்பதை சங்க இலக்கிய பாடல்களின் வழியே அறிய முடிகிறது.குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள். திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை ஐந்து ஏழு ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா………………….கா என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும். அப்படிச் சுவைக்கும்போது அந்தக் காக்கைகள் கா…………………கா,,,,,,,,,,,,,,,, என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. காக்கையின் இந்த குணமானது கூடி வாழ்வதின் சிறப்பினை உணர்த்த குறிப்பிடப்படுவது உண்டு.
Image may contain: bird
இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம் என்றும் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும் எனவும் தமிழர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...