வீட்டில் உள்ள டப்பாக்களில் சமையல் சோடா இருந்தால் அதிலிருந்து சிறிதளவு எடுத்துக்கொள்ளுங்கள்
ஒரு எலுமிச்சம்பழத்தை இரண்டாக அறுத்து, அதில் ஒரு பாதியை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு சமையல் சோடாவை இட்டு சமையல் சோடா நனையும்படி 4,5 சொட்டு எலுமிச்சை சாற்றினை இடுங்கள்
நனைந்த சமையல் சோடாவை உங்கள் ஆள் காட்டி விரலில் கொஞ்சமாக எடுத்து பற்களின் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் மெதுவாக தேயுங்கள்.
இதை 1 அல்லது 2 நிமிடங்கள் வரை மெதுவாக தேய்த்தால் போதுமானது.
அதிக நேரமோ அல்லது அதிக அழுத்தமோ கொடுத்து தேய்த்தால் பல்லின் எனாமல் அரிக்கப்பட்டு விடும்
மேற்சொன்ன படி 1,2 நிமிடங்கள் தேய்த்த பிறகு வாயை சாதாரண நீர் கொண்டு நன்றாக கொப்பளியுங்கள்.
சிறிது நேர இடைவெளி விட்டு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் பற்பசை, பல்துலக்கி கொண்டு பல் துலக்கலாம்.
இதை தினமும் செய்யக்கூடாது. வாரத்தில் 2 நாட்கள் செய்தால் போதும். சில நாட்களிலேயே மஞ்சள் கறை அகன்று விடும்.
எலுமிச்சை சாறு இல்லாமலும் பயன்படுத்தலாம்.
முகத்தில் இறந்த செல்களை நீக்கவும் (exfoliate)சமையல் சோடா உதவும்.
நான் செய்து பார்த்த வழிமுறைகளை தான் மேலே குறிப்பிட்டுள்ளேன்..
பிரச்சனைகள் வராது ஆனால் எல்லாம் அளவாக தான் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment