Friday, July 12, 2019

வேலூர் தேர்தல்... களத்தில் நந்தினி!

கல்யாணம் முடிந்த கையோடு பிரச்சாரம் வந்துவிட்டார் நந்தினி என்று செய்தி.
நக்கீரன்-திமுக கூட்டணியில் அடுத்த வேலை ஆரம்பம். தெரு தெருவாகச் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேலூர் வந்துவிட்டதாக நந்தினி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இன்று மாலை நக்கீரன் - நந்தினி தந்தை - திமுக கூட்டணி சார்ந்து என்பக்க விவரங்களை மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் வைக்கிறேன். நான் கொடுக்கும் ஆதாரங்கள் சரியா என்பதைத் தேடி பின் அந்த ஆதாரத்தை நக்கீரன் பத்திரிக்கைக்குக் கொடுத்து அதை வெளியிடத் திராணி இருக்க என்று கேட்கவும். அதே போல் நந்தினி அவர் தந்தை இருவரிடமும் கொடுத்து அதற்குப் பதில் வெளியிடக் கூறவும்.
இங்கே கச்சிதமாகப் போராட்டம் போராளி என்ற போர்வையில் வெறுப்பு அரசியலைச் சரியாகச் செய்து ஒரு வெற்றியை மக்களை ஏமாற்றிப் பெற்றுள்ளார்கள் திமுகவினர். வெற்றி தோல்வி அல்ல விசயம் இங்கே. ஆனால் அது மக்களை ஏமாற்றி பெற்றதாக இருக்கக் கூடாது என்பதுவே எமது நோக்கம்.
வெற்றி தங்கள் மீது மக்கள் நம்பிக்கையில் கிடைக்காது என்பது திமுகவிற்கு நன்கு தெரியும் எனவே எதிரிக்கு எதிராக போராளி என்ற பெயரில் போலிகளை உருவாக்கி தந்திரமாக அரசியல் செய்கிறது திமுக என்பது தான் என் குற்றச்சாட்டு.
எனவே இன்று மாலை நந்தினி , நந்தினி தந்தை, நக்கீரன் இவர்களுக்காக ஒரு சிறப்பு வீடியோ வெளியிடப்படும்.
{இந்த தந்திரத்தை மக்கள் உணரவில்லை என்றால் இங்கே திராவிட அரசியலுக்கு மாற்று அரசியல் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் வீடியோ வெளியிடுகிறேன்.}

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...