Friday, February 1, 2019

ஒன்றை ஒன்று மிஞ்சியது..

ஒரு நகரத்தில் ஒரு செல்வந்தர் ஒரு நாள் ஒரு இலட்சம் ரூபாயை தர்மம் செய்யப்போவதாக விளம்பரம் செய்தார். விளம்பரத்தை அறிந்த மக்கள் கிட்டத்தட்ட இலட்சம் பேர் குழுமி விட்டனர். யாரையும் வெறுங்கையோடு அனுப்ப விரும்பாத செல்வந்தர் இலட்ச ரூபாயையும் பிரித்து குறைந்தது ஒரு ரூபாயாவது தந்தனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஒற்றை ரூபாயைத் தானமாக பெற்றவர்கள் 'இந்த ஒற்றை ரூபாய் தர்மத்திற்காகவா இவ்வளவு விளம்பரம்! ஆர்ப்பாட்டம்' என்று தூற்றினர். செல்வந்தருக்கு வருத்தம்.
இரண்டாவது முறை மற்றுமொரு இலட்சரூபாயை தர்மத்துக்காக ஒதுக்கி குறைவாக மனிதர்கள் வந்தால் நிறைவாக இருக்கும் என்று அளவாக அறிவிப்பு செய்தார். அப்பொழுதும் ஆயிரம் பேர் குவிந்து விட்டனர். ஆளுக்கு நூறு ரூபாய் வீதம் பிரித்துக் கொடுத்தனுப்பினார். பெற்றவர்கள் பெரிய மகிழ்ச்சி ஒன்றும் அடையவில்லை. மீண்டும் செல்வந்தருக்கு ஏமாற்றம்.
மூன்றாவது முறையாக ஒரு இலட்சம் ரூபாயை ஒதுக்கி விளம்பரமாக இல்லாமல் தகவல்களைச் சொல்லி தர்மத்துக்கு நாள் குறித்தார். அன்றைக்கு சுமார் நூறு பேர்கள் கலந்து கொண்டு ஆளுக்கு ஆயிரம் பெற்றுச் சென்றனர். ஆயிரம் பெற்றவர்களும் ஆசீர்வாதம் செய்யாமல் இதென்ன பெரிய தர்மமோ என்று ஏதும் சொல்லாமல் சென்று விட்டனர். மீண்டும் செல்வந்தருக்கு ஏமாற்றம்.
நான்காவது முறையாக அறிந்த தெரிந்த ஏழைகள் பத்துப் பேரை அழைத்து ஆளுக்கு பத்தாயிரம் வீதம் பகிர்ந்து கொடுத்ததுப் பார்த்தார். பெற்றவர்கள் “பரவாயில்லை” என்றார்களே தவிர பரவசமாய் பாராட்ட வில்லை.
முறை ஒரு இலட்சம் ரூபாயையும் ஒருவருக்கே உதவினால் நலம் பயக்கும் என்று முடிவு செய்தார்.
முன்னேற வேண்டும் என்று முனைப்பாயுள்ள, ஒரு இளைஞரை அழைத்து இலட்ச ரூபாயையும் தந்தார். இலட்சத்தைப் பெற்ற இளைஞர் முன்னேற வழி பிறந்தது என்று மகிழ்ந்தார். செல்வந்தரை நன்றியோடு வாழ்த்தினார்.
எண்ணிக்கையை குறைக்க குறைக்க பெறுபவர்களின் 'பணச்சக்தி' அதிகரிக்கிறது.
அதுபோல மனித மனத்தில் உருவாகிற இலட்சம் வகையான எண்ணங்களையும் இலட்சம் விசயங்களில் செலுத்தினால் 'ஒற்றை ரூபாய் சக்தி' தான். மனோ சக்தியும் மலிந்தும் நலிந்தும் போகிறது.
பதவி வேண்டும், வீடு வேண்டும், நிலம் வேண்டும், வாகனம் வேண்டும், பணம் வேண்டும், புகழ் வேண்டும் என்று பல இலட்சியங்களையும் அடைய வேண்டும் என்று எண்ணங்களை சிதறடிப்பதைவிட எல்லாவற்றிற்கும் அடிப்படையான ஒன்றை மனதிலே நினைத்து அந்த ஒன்றில் மட்டுமே எண்ணத்தைக் குவித்தால் வலிமையான எண்ணம் உருவாகும். எண்ணியதை எண்ணியவாறு அடையும் சூட்சுமம் இரகசியம் இதுதானே.
எண்ணச் சிதறல் எண்ணியதை அடைய உதவாது. எண்ணக் குவிப்பு (Concentration) திண்ணிய மனிதராக்கும்.

மஹா சனிப்பிரதோஷம் : சிவன் கோவிலிற்கு செல்ல மறக்காதீர்கள் !!

சனி பிரதோஷம் !!
🌟 பிரதோஷங்களில் மிகவும் முக்கியமானது சனி பிரதோஷம் ஆகும். திரியோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது சனி பிரதோஷம். ஏனெனில் சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.
🌟 பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பது முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறுவார்கள். அவர்களைப் போலவே பிரதோஷ நேரத்தில் நாமும் சிவபெருமானை வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக்கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
🌟 அதேபோல் எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.
🌟 பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். அதேபோல் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள், சனி பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பங்கள் நீங்கும்.
🌟சனி பிரதோஷத்தன்று, மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களும் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது.
🌟 ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது ஆகும்.
🌟 சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்து நந்தியெம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். அன்றைய தினம் நந்திக்கும், சிவபெருமானுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவிப்பது நற்பலன்களை தரும்.

பாரம்பரியமாக நம் குலதெய்வத்திற்காக குழந்தைகளுக்கு மொட்டையடிப்பதின் பின்னணி தெரியுமா!!!!


Image may contain: 1 person, text

நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது.

உப்பில் இருப்பது அசுர குணம்
தேனில் இருப்பது தேவர் குணம்
சித்த மருத்துவம்.
உப்பின் தன்மை என்ன
சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள்
இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு
உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்து விடும்
இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது
இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள்
இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள்
.
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றல் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும் .
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும்
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு ,கைதேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள்
தேன்.
தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும் .
தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது .
. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது .
இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .
இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள் ..
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ:-
1.மாதம் 2 முறையாவது 3 வேளையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .
2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டாது .
3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .
உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள் )
இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணப்படுத்த
உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது இன்றைய மருத்துவம்(alaopathy )
இனிப்பை வைத்து வைத்யம் செய்வது homeopathi .
உப்பும் ,தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.
நல்ல தேனை எறும்பு தீண்டாது ,,உப்பையும் எறும்பு தீண்டாது
கருவாடு ,உறுகாய்,போண்டரைவைகள் உதாரணம் ...
நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே .
தேவ அமிர்தம் என்பது தேன்
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது
தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும்
உப்பு பூலோகத்தில் இருக்க வைக்கும் ..
இவைகள் உடல் சார்ந்த விவரம் ....
ஆகவே உப்பை குறைத்தும் ,தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம் ...

புழுகு!.புழுகு!... அண்டபுழுகு!. ஆகாசபுழுகு!...

ராகுல் காந்தி புற்று நோய் தாக்கிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கரைப் பார்த்து நலம் விசாரித்து விட்டு வெளியில் புழுகி தள்ளிய ராகூல்!.
கோவா முதல்வர் மனோகர்பாரிக்கர் ராகூலுக்கு கொடுத்த சாட்டையடி!.
எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து என்னைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தீர்கள்!.
என்னதான் வேறுபாடுகள் இருப்பினும் உடல்நிலை பற்றி விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்துவது அரசியல் நாகரிகமாதலால், உங்களை அந்த நல்ல நோக்கினை கருத்தில் கொண்டு வரவேற்றேன்!.

Image may contain: one or more people and people sitting
நாம் சந்தித்த ஐந்து நிமிடங்களில் ரஃபேல் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை!.
நான் விவாதிக்கவில்லை!.
ரஃபேல் குறித்து எதையுமே பேசவில்லை!.
இவ்வாறிருக்கையில், ரஃபேல் முடிவுகள்
எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது என்றும்
ரஃபேல் வாங்கும் விஷயத்தில் நான் பங்கு பெறவேயில்லை.
என்று நான் சொன்னதாக மீடியாவிடம் கூறி கேவலமான அரசியல் லாபத்துக்காக தங்கள் வருகையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்!.
அரசியல் லாபத்துக்காக மிக மட்டமான அளவுக்குக் கீழிறங்கி பொய்களைப் பேசியுள்ள நீங்கள், நாகரிகம் கருதி உங்களைச் சந்திக்க முன்வந்த என்னை ஏமாற்றியுள்ளீர்கள்!.
கடும் நோயால் துன்பப்படும் என்னைப் பார்த்து நல்வாழ்த்து சொல்ல வரவில்லை!.
இப்படி வேறு எண்ணத்துடன் வந்திருப்பீர்கள் என நான் சிறிதும் நினைக்கவில்லை!.
நோயுற்று அவதிப்படும் ஒரு மனிதனை நலம் விசாரிப்பதை அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக பயன்படுத்தாதீர்கள்!.
கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அநாகரிகம்!.
இழிவான நாடகங்களை அரங்கேற்றியும் பச்சைப்பொய்களை கூசாமல் தொடர்ந்து பேசியும் வரும் காங்கிரஸ் தலைவர் மிகவும் ஆபத்தான ஆசாமி!.
அரசியல் லாபத்துக்காக எந்த லெவலுக்கும் போவார்!.

நான் என்ன மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்றா பேசுகிறேன்???

திருப்பூரில் துறைமுகமா!!!

ஒன்பது கிரகணங்கள் உச்சத்தில் இருக்கும் ஒருவனால் தான் இந்த லெவலுக்கு யோசிக்க முடியும் ..



Image may contain: 1 person

முருங்கை கீரை.....


முருங்கைக் கீரை உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்க வல்லது. எழுவகைத் தாதுக்களின் சூட்டைத் தணிக்கவல்லது. சிறு நீரைப் பெருக்கித்தள்ளும் ஆற்றலுடையது . நரம்பு இசிவுகளைத் தடுத்து நிறுத்தும் வல்லமையுடையது.
சுக்கில உற்பத் தியைப் பெருக்கும். முருங்கைக் கீரை உண்பதால் சொறி சிரங்கு முதலிய நோய்கள் நீங்கும். கண் ஒளி பெருகும், முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்துச் சமைத்து உண்டுவர நீரிழிவு நோய் நீங்கும், உடல் வலுப்பெறும், காமாலை, மாலைக்கண் போன்ற நோய்களையும் நீக்கும்.
இக்கீரை இரத்தவிருத்திக்கும், தாது பலம் பெறவும் பெரிதும் பயன்படும் . முருங்கைப் பூவைப் பருப்புடன் வேக வைத்து உண்டுவந்தால் தலைக்கேறிய பித்தமும் வெப்பமும் தணிந்து கண்ணெரிச்சல் நீங்கும்.
முருங்கைப் பூவைப் பசுப் பாலில் சேர்த்து வேகவைத்துப் பாலையும் பருகிப் பூவையும் தின்றால் தாது பெருகும். ஆண்மைச் சக்தியும் உண்டாகும். முருங்கைக்காய்க் குழம்பு வகைகளை உண்பதால் மார்புச்சளி கபம் ஆகியன நீங்கும் . நரம்புகள் வலிமை பெறும் . அதிகமாக உண் டால் உஷ்ணவாய்வு நோய்கள் உண்டாகும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...