Friday, May 1, 2020

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்..விவசாயத்தை அழித்த திட்டம்..

இந்த அரசியல்வாதிகளும் மற்றும் அரசியல் செய்யும் அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு பதிவு மற்றும் செய்தி
நீங்கள் எல்லோரும் விவசாயம் செய்து இருந்தால் உங்களுக்கு விவசாயம் இடையே ( கஷ்டம், நஷ்டம், கண்ணீர், வேதனை, ) மற்றும் சொல்ல முடியாத பல பிரச்சனைகள் தெரியவரும் உங்களுக்கு
அரசாங்கத்திற்கு ஒரு வேண்டுகோள் எதுக்கு இந்த நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் அதற்குதான் நவீன இயந்திரங்கள் JCB மற்றும் பலமேம்படுத்தப்பட்ட நவீன உபகரணங்கள் இருக்கிறது அதனை வைத்து நொடிப்பொழுதில் அந்த வேலையை முடித்து விட்டுப் போகலாமே
நல்ல திட்டம் என்ற பெயரில் சோம்பேறி வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்கும்
ஒரு திட்டம் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்று பெயர் சூட்டி செயல்படுவது இந்திய அரசாங்கத்திற்கு இது தேவையில்லாத ஒரு திட்டமாக நான் கருதுகிறேன்.
குறிப்பு அரசாங்கத்திற்காக.
தயவுசெய்து பல நவீன இயந்திரங்கள் உள்ளது அதை வைத்து அந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக இந்தியாவிலிருந்து அகற்றுங்கள் அப்பொழுதுதான் விவசாயம் செழித்து வளரும்.
உங்களிடம் நோட்டு அடிக்கும் இயந்திரம் உள்ளதால் நீங்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற சோம்பேறிகளுக்கு கூலியை அதிகப்படுத்தி கொடுத்து விட்டீர்கள்.
நாங்கள் எந்த இயந்திரத்தை வைத்து பணத்தினை அச்சடித்துக் கொடுக்க முடியும். எங்களால் ஒரு உற்பத்தி செய்த விவசாய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடிகிறதா ? அதற்கான சுதந்திரத்தை தான் எங்களிடம் ஒப்படைத்து உள்ளீர்களா ?
சர்வாதிகார ஆட்சி பலநூறு ஆண்டுகளாக விவசாயிகள் மீது திணித்து வருகிறீர்கள் இது உங்களுக்கே புரியவில்லையா அல்லது தெரியவில்லையா இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டுகிறேன் நன்றி.

சத்தான கொள்ளு லட்டு.

சத்தான கொள்ளு லட்டு
கொள்ளு லட்டு

தேவையான பொருட்கள்

கொள்ளு - ஒரு கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
நெய் - சிறிதளவு.
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்

கொள்ளு லட்டு

செய்முறை :
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு கொள்ளுவை போட்டு இளம்பதமாக வறுத்து எடுத்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும்

பிறகு நீரை நன்கு வடித்து… பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து சாப்பிடக் கொடுக்கவும்.

சுவையான கொள்ளு லட்டு தயார்.

17 வரை! நாடு முழுதும் பொது ஊரடங்கு நீட்டிப்பு...

 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கு, வரும், 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, சென்னை போன்ற சிவப்பு மண்டலங்களில், கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும். பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு மற்றும் கடந்த, 21 நாட்களாக புதிதாக, ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத பச்சை மண்டலங்களில், நிபந்தனைகளுடன், சில தளர்வுகளை அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச், 24ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, ஏப்ரல், 14ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், தொற்று அதிகரித்தபடி இருந்ததால், மே, 3 ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. விவசாயம், மீன்பிடித்தல், கால்நடை உள்ளிட்ட சில தொழில்கள் மட்டும், நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஊரடங்கை, வரும், 17 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு, நேற்று இரவு அறிவித்தது.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலின் வேகம் இன்னும் குறையவில்லை. மருத்துவ நிபுணர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களிடம், இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில், 2005ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தற்போதுள்ள ஊரடங்கை, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஊரடங்கு காலத்தில், எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டும் குறிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், சிவப்பு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஓரளவு பாதிப்புள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாகவும், கடந்த, 21 நாட்களாக புதிதாக, ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படாத பகுதிகள் பச்சை மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின் பொது அம்சங்கள்

* விமானம், ரயில், மெட்ரோ ரயில் சேவைகளுக்கான தடை தொடரும். மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளவர்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை கிடைக்கும்

* பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட எந்த கல்வி நிறுவனங்களும், வரும், 17 வரை, தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஓட்டல், சினிமா, ஷாப்பிங் மால், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். விருந்தோம்பல் துறைக்கும் தடை நீடிக்கிறது

* சமூக, அரசியல், கலாசார நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டு வழிபாடு ஆகியவற்றுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது

* மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள், காலை, 7:00லிருந்து, மாலை, 7:00 மணி வரை தடை செய்யப்படுகின்றன

* அதிக அளவில் மக்கள் கூடுவதை தடை செய்யும், 144 தடை உத்தரவு, அமலில் இருக்கும்

* அனைத்து மண்டலங்களிலும், 65 வயதுக்கு மேற்பட்டோர், நோய் பாதிப்பு உள்ளோர், கர்ப்பிணி, 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், உள்ளிட்டோர், மிக அத்தியவாசிய தேவைகளை தவிர, மற்ற நேரங்களில் கண்டிப்பாக வெளியில் வரக் கூடாது

* மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு, கிளினிக் ஆகியவை அனைத்து மண்டலங்களிலும் செயல்படலாம். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், இந்த சேவைகள், சமூக விலகல், முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட வேண்டும்

* தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில், அத்தியாவசிய சேவைகள் தவிர, பிற சேவைகளுக்கு அனுமதியில்லை

* அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையே இயங்கலாம். இதற்கு, அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை

சிவப்பு மண்டலம்
* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில், சைக்கிள் ரிக் ஷா, ஆட்டோ, வாடகை கார், முடி திருத்தும் நிலையம், அழகு நிலையம், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து ஆகியவற்றுக்கான தடை தொடரும்

* அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டும், கார்களில் இரண்டு பேர் செல்ல அனுமதி உண்டு. டிரைவரையும் சேர்த்து, மூன்று பேர் செல்லலாம். இரு சக்கர வாகனங்களில் தனி நபர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. பின் இருக்கையில், யாரும் செல்ல அனுமதி இல்லை; இதுவும், அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்

* மருந்து மற்றும் மருத்துவ உபரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஹார்டுவோர் பணியில் ஈடுபட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சணல் தொழிற்சாலை ஆகியவை, சமூக விலகல் விதிமுறைகளுடன் செயல்படலாம்

* கட்டுமான தொழில்கள், குறைந்த தொழிலாளர்களுடன் செயல்படலாம். வேறு இடங்களில் இருந்து, தொழிலாளர்களை அழைத்து வரக் கூடாது

* குடியிருப்பு பகுதிகளில் தனித் தனியாக செயல்படும் அனைத்து கடைகளும் இயங்கலாம்

* இணைய வர்த்தக சேவை மூலம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் மட்டுமே ஈடுபட வேண்டும். தனியார் நிறுவனங்கள், 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்; மற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்த வேண்டும்

* வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், மின்சாரம், தண்ணீர், தொலை தொடர்பு சேவைகள், தபால், கூரியர் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது

* அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தொழில்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், பிளம்பர், எலெக்ட்ரீஷியன் போன்ற சுய வேலை பார்ப்போர் ஆகியோருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது

ஆரஞ்சு மண்டலம்
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில், வாடகை டாக்சிகள், ஒரு பயணியுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மட்டுமே இந்த தளர்வு பொருந்தும். மாவட்டங்களுக்கு இடையோன தனி நபர் நகர்வு மற்றும் வாகன இயக்கம் ஆகியவை, அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைளுக்கு மட்டும் இயங்கலாம்

* கார்கள், டிரைவர் மற்றும் இரண்டு பயணியருடன் இயங்கலாம். இரு சக்கர வாகனங்களில், இருவர் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது

பச்சை மண்டலம்
* கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில், அனைத்து விதமான தொழில் நடவடிக்கைகளும் செயல்படலாம். ஆனாலும், நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுவான கட்டுப்பாடுகள், இந்த பகுதிகளிலும் தொடரும். 50 சதவீத இருக்கை வசதியுடன் பஸ்களை இயக்கலாம். பஸ் டெப்போக்களில், 50 சதவீத பஸ்கள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் வேலை 12 மணி நேரம் அதிகரிப்பு:
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட ஆறு மாநில அரசுகள், தொழிலாளர்களின் வேலை நேரத்தை, எட்டு மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரமாக அதிகரித்து, சட்டம் இயற்றியுள்ளன. குறைவான தொழிலாளர்களை வைத்து வேலை பார்க்க வேண்டியுள்ளதாலும், 'ஷிப்ட்' குறைக்கப்பட்டுள்ளதாலும், தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, அதிகரிக்கப்பட்டுள்ள நான்கு மணி நேர வேலையை, கூடுதல் வேலை நேரமாக கருதி, அதற்கான ஊதியம் கொடுக்கப் போவதாக, ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த, 12 மணி நேர வேலை நேரத்தில், ஆறு மணி நேரத்துக்குப் பின், சிறிய ஓய்வு தரப்படும் என, குஜராத் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்ட அமைச்சரவை குழு, இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள், பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல மாவட்டங்கள் விவரம்.

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில், சிவப்பு மண்டலத்தில் அதிக கட்டுப்பாடுகள் தொடர உள்ளது. ஆரஞ்சு, பச்சை மண்டலத்தில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளரத்த்ப்பட உள்ளன.

சிவப்பு நிற மண்டலங்கள்:

1. சென்னை
2. மதுரை
3. நாமக்கல்
4. தஞ்சாவூர்
5. செங்கல்பட்டு
6. திருவள்ளூர்
7. திருப்பூர்
8. ராணிப்பேட்டை
9. விருதுநகர்
10. திருவாரூர்
11. வேலூர்
12.காஞ்சிபுரம்

latest tamil news

ஆரஞ்சு நிற மண்டலங்கள்:

1. தேனி
2. தென்காசி
3. நாகப்பட்டினம்
4. திண்டுக்கல்
5. விழுப்புரம்
6. கோவை
7. கடலூர்
8. சேலம்
9. கரூர்
10.தூத்துக்குடி
11. திருச்சிராப்பள்ளி
12. திருப்பத்தூர்
13. கன்னியாகுமரி
14. திருவண்ணாமலை
15. ராமநாதபுரம்
16. திருநெல்வேலி
17. நீலகிரி
18. சிவகங்கை
19. பெரம்பலூர்
20. கள்ளக்குறிச்சி
21. அரியலூர்
22. ஈரோடு
23. புதுக்கோட்டை
24. தருமபுரி

பச்சை நிற மண்டலம்:

1. கிருஷ்ணகிரி
tamilnadu,red_zone,orange_zone,green_zone,சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலம்,

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்...

உல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்!
உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிபழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.
முதலில் நன்கு பழுத்த அன்னாசி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காயவைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாசி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.
தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும்.
இவ்வாறாக இர‌ண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும். பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும்
பொதுவாகவே அன்னாசிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும். குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாசிபழத்திற்கு உள்ளது.

மஹாலக்ஷ்மியின்_வாகனம்_ஆந்தையா?#முட்டை_கண்_ஆந்தையாரை_வழிபட்டால்_நடக்கும்_அதிசயங்களை_தெரிந்து_கொள்ளுங்கள்.

பார்ப்பதற்கே அச்சுறுத்தலாக இருக்கும் ஆந்தையை பல்வேறு கோணங்களில் மக்கள் பார்க்கின்றனர். முந்தைய காலங்களில் ஆந்தையை மரணத்தின் அறிகுறியாக பார்த்து வந்தனர். ஆந்தையின் அலறல் சத்தம் கேட்டாலே அந்த ஊரில் யவரேனும் இறக்க நேரிடும் என்று அவர்கள் கருதினர். இதனால் சிலர் ஆந்தையை வெறுத்தனர். ஆந்தையை கண்டால் கல்லை கொண்டு எரிந்து விரட்டி அடித்தனர். ஆந்தை சொந்தமாக கூடு கட்டுவதைவிட மற்ற பறவைகளின் ஆதரவற்ற கூட்டை அதிகம் விரும்புகின்றன. தேவி மஹாலக்ஷ்மியின் வாகனமாக இருப்பது ஆந்தை தான். வட இந்திய மக்கள் ஆந்தையை வாகனமாக கொண்ட லக்ஷ்மியை அதிகளவு வழிபாடு செய்கின்றனர். இதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

விவசாயிகளின் உற்ற நண்பனாக ஆந்தை கருதப்படுகிறது. வயல்களை சேதபடுத்தும் எலிகளை சாப்பிட்டு விவசாயத்திற்கு பெரிதும் உதவி செய்கின்ற ஆந்தையை அபசகுணமாக கருதவும் செய்கின்றனர். லட்சுமி மகாவிஷ்ணுவிற்கு வாகனமாக கருடன் உள்ளது போல் லக்ஷ்மிக்கென்று பிரத்யேகமாக ஆந்தை வாகனமாக இருக்கின்றது. இது பலரும் அறியாமல் இருக்கலாம். வட இந்திய மக்கள் தங்களின் வீட்டு கூரையில் ஆந்தை கூடு கட்டி அலறல் சத்தம் கொடுத்து கொண்டே இருந்தால் சுப சகுணமாக கருதுகின்றனர்.
சுபகாரியம் நடத்தவிருக்கும் வீட்டில் ஆந்தை சத்தம் கேட்டால் லக்ஷ்மியின் சம்மதம் கிடைத்து விட்டதாகவே அவர்கள் எண்ணுகின்றனர். வெளியில் கிளம்பும் போது ஆந்தையை காண நேர்ந்தால் உறுதியாக போகும் காரியம் அமோக வெற்றி தான் என்கின்றனர். தென்னிந்திய மக்களோ இதை அபசகுணமாக கூறுகின்றனர். வடக்கே ஆந்தை அலறினால் சுபமாகவும், மற்ற திசைகளில் ஆந்தை குரல் கேட்டால் அபசகுனம் என்றும் ஆருடம் பார்க்கின்றனர்.
ஆந்தையின் பார்வை திறன் அதிகம் என்பதால் அதனால் வெகு தொலைவில் இருக்கும் இரையை கூட தெள்ள தெளிவாக பார்க்க முடியும். ஆனால் அதன் முட்டை வடிவ கண்கள் பெரிதாக இருப்பதால் மற்ற திசைகளை பார்க்க அதன் மொத்த தலையையும் 270 டிகிரி கோணம் வரை திருப்பி பார்க்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது. பகல் முழுவதும் தூங்கி இரவில் வேட்டையாடும் ஆந்தை வலுவான நகங்களால் வேட்டையாடி வாழ்கிறது. இதற்கு மூன்று இமைகள் உள்ளன. இமைக்க, தூங்க, கண்களை சுத்தம் செய்ய என்று தனித்தனியே 3 இமைகள் கொண்டுள்ளது. அதன் இறக்கை மென்மையானதாக இருப்பதால் இரையை நெருங்கும் வரை இரையால் அதனை உணர முடிவதில்லை.
இரவில் ஆந்தை அலறினால் சுப பலன்கள் கிட்டும் என்று நிச்சயமாக நம்புகின்றனர். எந்த வீட்டின் அருகே அமர்ந்து ஆந்தை அலறுகிறதோ அந்த வீட்டில் பொருளாதார நிலை உயருமாம். செல்வா வளமும் பெருகுமாம். கோவில் மரங்களில் இது போல் ஆந்தை அலறினால் அங்கிருக்கும் மக்களுக்கு நல்லது நடக்குமாம். ஆந்தை சத்தம் போடாமல் அமைதியாக இருந்தால் வேதனை படுவார்கள். ஆந்தை அலறும் எண்ணிக்கைக்கு ஏற்ப பலன்களும் கூறுகின்றனர். நவ கிரங்கங்களின் அடிப்படையில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்ணிக்கையில் ஆந்தை அலறும் பலன்கள் கூறப்படுகின்றன.
இத்தகைய பெருமை வாய்ந்த ஆந்தையாரை கிரக்கர்கள், ஐரோப்பிய மக்கள் அறிவின் கடவுளாக கருதுகின்றனர். ஆந்தை புத்திக் கூர்மையுள்ள பறவை என்றும் குறிப்பிடுகின்றனர். இரவின் அரசன், விவசாய நண்பன், லக்ஷ்மியின் வாகனம், செல்வம் தரும் பறவை என்று மக்களுக்கு நல்லதை செய்கின்ற ஆந்தையை அதன் விசித்திர முகம் காரணமாக வெறுப்பது சரியா? நீங்களே கூறுங்கள்.

இரட்டை இலை சின்னம் வழக்கு ; சசிகலா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.

ஜெயலலிதா அம்மையார் மறைவுற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார் சசிகலா. முதல்வர் பதவியை நோக்கி சசிகலா முன்னேற...
தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம்.
2017 பிப்ரவரி 5-ம் தேதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக்கூட்டம் கூடியது. அடுத்த முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வர் ஆவதற்காக பன்னீர்செல்வத்திடமிருந்த முதல்வர் பதவி தட்டி பறிக்கப்பட்டது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என அறிவிக்கப்பட்டது.
முதல்வர் பதவி ஏற்க அவசர அவசரமாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அடுத்த 48 மணி நேரத்தில், திடீரென ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து 'தர்மயுத்தம்' தொடங்கினார் ஓ. பன்னீர்செல்வம். மிரட்டப்பட்டேன்... 'அவமானப்படுத்தப்பட்டேன்.. கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள்'' என்று சொல்லி சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார். இதனால் சசிகலா அணி, பன்னீர் அணி என அ.தி.மு.க பிரிந்தது.
பயந்து போன சசிகலா தான் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற பல்லாண்டு கனவை நனவாக்க துடித்து அதிமுக எம்எல்ஏ க்களை கூவத்தூரில் கொண்டு போய் அடைத்து வைத்தார்...
கொள்ளைக் குற்ற வழக்கில் சசிகலா குடும்பத்தினர் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்தது.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்க உத்தரவு வந்தது...
கூவத்தூர் ஓடிப்போன சசிகலா கண்ணீர் விட்டு கதறி அழுதார். எடப்பாடி பழனிச்சாமி நமக்கு நல்ல அடிமையாக இருப்பார் தினகரனை முதல்வர் ஆக்கும் வரை இடைக்கால ஒரு பொம்மை முதல்வராக இருப்பார் என நம்பி...
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராகத் தேர்வுசெய்துவிட்டு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனார் சசிகலா. 'ஆட்சிக்கு எடப்பாடி... கட்சிக்கு டி.டி.வி. தினகரன்' எனத் திட்டம் வகுத்துக் கொடுத்துவிட்டுப் போனார். தினகரனிடம் கட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, அவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவியையும் சசிகலா தந்தார். அதன்பின், தினகரன் தலைமையில் செயல்பட்டது அ.தி.மு.க. அரசும்... கட்சியும்...
ஜெயலலிதா மறைக்கப்பட்ட தால் காலியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் வேட்பாளர் ஆக தானே நியமித்து கொண்டு போட்டியிட்டார்...
உடனே பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார் அதிமுக அவைத் தலைவர் மதுசூதன் தான் அவரே பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் கட்சிக்கு தலைவர் எனவே அதிமுக எங்களுக்கே சொந்தம் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என உரிமை கோர...
இருவருக்கும் இரட்டை இலை இல்லை என இரட்டை இலை சின்னத்தையும்... அதிமுக கட்சியின் பெயரையும் முடக்கியது தேர்தல் ஆணையம் .
பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளர் ஆக்கப்பட்டார். இரட்டை இலை முடக்கப்பட்டதால் தினகரனுக்கு தொப்பி சின்னமும் மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கும் அளித்தது தேர்தல் ஆணையம்.
தினகரன் ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றால், அவர் அடுத்து முதல்வர் ஆக முற்படுவார் என்பது தெரிந்தும், அவருக்காக எடப்பாடி ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அவர் மட்டுமல்ல, மொத்த அமைச்சரவையும் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தினகரனுக்காக ஓட்டு வேட்டையாடினார்கள்
பணமும் கோடி கோடியாக விளையாடியது...
இந்த நேரத்தில்தான் தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமானவரித் துறை 2017 ஏப்ரல் 7-ம் தேதி சோதனை நடத்தியது. நாலரை கோடி ரூபாய் ரொக்கம், 86 கோடிக்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரத்தை அதிகாரிகள் அள்ளினார்கள்.
சோதனையின்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ஆதாரங்களுடன் தப்பி ஓடிய டிரைவரைப் பிடித்தார்கள். ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தற்கான ஆதாரம் சிக்கியது. இதனால், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
2017 ஏப்ரல் 7-ம் தேதி,அன்று வருமான வரித்துறை விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய ரெய்டுக்குப் பிறகு,
அதுவரையில் தினகரனுக்கு விசுவாசியாக இருந்தவர்கள்,கொஞ்சம் கொஞ்சமாக தடம் மாற ஆரம்பித்தார்கள்.
அதற்கு காரணம் முதல்வராக இல்லாமலேயே முதல்வர் போல ஆணவத்துடன் நடந்து கொண்ட தினகரனின் ஆணவப்போக்கால்...
அதுமட்டுமின்றி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சசிகலா குடும்பத்தில் உள்ள சிலரின் எதிர்ப்பையும் மீறி தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டதாகப் புகார் எழுந்தது.
இதன் பிறகு தினகரன் அணி என்பது எடப்பாடி அணி தினகரன் அணி என இரண்டு அணியாக பிரிந்தது...
தினகரன் அணி, எடப்பாடி அணி, பன்னீர் செல்வம் அணி என அ.தி.மு.க மூன்று பிரிவுகள் ஆகின.
இந்நிலையில் EPS அணியினர்...
நாம் இப்படியே OPS அணி EPS அணி என இரு அணியாக இருந்தால் அது நமக்குதான் பாதகம் என EPS அணியினர் சிந்திக்க தொடங்கினர்.
இரு அணிகளும் இணைய... திரை மறைவில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்....
2017 ஏப்ரல் 17-ம் தேதி இரவு, அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில், பன்னீர்செல்வம் அணியுடன் ஒத்துப்போகும் முடிவை எடுத்தது எடப்பாடி தரப்பு. அடுத்த நாள் ஏப்ரல் 18-ம் தேதி, முதலமைச்சர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''கட்சியைக் காப்பாற்றுவதற்காக சசிகலா அணியை விலக்கி வைக்கிறோம். கட்சியைக் காப்பாற்றவும் இரட்டை இலையை மீட்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பத்தையும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்தையும் நிறைவேற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். இனி, எக்காலத்திலும் தினகரன் குடும்பத்தைச் சேர்க்கவே மாட்டோம்.. வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டுமென்றால், டி.டி.வி. தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்ற விருப்பம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க நிர்வாகிகளின் ஒட்டு மொத்த விருப்பம். அனைத்து அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து எடுத்த முடிவு'' என்றார்.
''துணை பொதுச்செயலாளர் தினகரனுக்குத் தெரியாமல் கூட்டம் நடத்த மற்றவர்களுக்கு அதிகாரம் இல்லை'' என்று சொன்னார் வெற்றிவேல். ஆனாலும் எந்தப் பலனும் இல்லை.
ஆர்கே இடைத்தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற ஆதாரங்கள் சிக்கியதின் அடிப்படையில் வழக்கு பதியப் பட்டு தினகரன் தினகரன் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடனே எதிர்வினை ஆற்றிய தினகரன், ''யாருக்கோ அவர்கள் பயப்படுகிறார்கள்'' என்றார். இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறையில் சில காலம் இருந்துவிட்டுத் திரும்பிய தினகரன், தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தார்.
2017 ஆகஸ்ட்டில் அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளான ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் 7 மாதங்களுக்குப் பிறகு இணைந்தன. துணை முதல்வர் ஆனார் ஓ.பன்னீர்செல்வம்.
இத்தனையும் பார்த்துக்கொண்டு தினகரன் சும்மா இருப்பாரா? பழி தீர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். எடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடிக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்களை ஊர் ஊராகச் அழைத்து சென்ற தினகரன் விரைவில் அதிமுக ஆட்சியைக் கவிழ்பேன் என சபதமிட்டார்...
இவர்கள் 18 பேரும் கவர்னரை சந்தித்து முதல்வர் பழனிச்சாமி க்கு எதிராக மனு கொடுக்க வைத்தார் தினகரன்.
எனவே சட்டப்படி செயல்பட்டு சபாநாயகர் தனபால் கட்சி தாவல் தடைசட்டப்படி அவர்களைத் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர்.
சபாநாயகர் தனபால் உத்திரவிற்கெதிராக உச்ச நீதிமன்றம் வரை மோதிப்பார்த்தார்
தினகரன்.
18 பேரும் கட்சி தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்திரவிட்டுள்ளது சட்டப்படி சரிதான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூக்குடைபட்டு திரும்பினார் தினகரன்.
தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 பேரும் எம்.எல்.ஏ பதவிகளைப் பறிகொடுத்து நின்றார்கள். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நேரத்தில்தான் சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் வருமானவரித் துறை மாபெரும் ரெய்டு நடத்தியது.
அதைச் சமாளித்த நேரத்தில்தான், ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்குள் இரட்டை இலை சின்னத்தை ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கு அளித்தது தேர்தல் ஆணையம்.
ஆர் கே இடைத்தேர்தலில் தினகரன்..
இருபது ரூபாய் டோக்கனாலும்..
தினகரன் வெற்றி பெற்று வந்தால் அதிமுக எம்எல்ஏ க்கள் எல்லாம் தினகரன் பின்னால் அணிவகுத்து வந்துவிடுவார்கள்..
தினகரன் அதிமுக ஆட்சியை கலைத்து விட்டார்... சுலபமாக ஆட்சியில் திமுக ஏறிவிடலாம் என்ற தினகரனின் வாக்குறுதி யை நம்பி ஏமாந்த திமுகவினர் தினகரனை வெற்றி பெற வைத்தனர்....
தி.மு.க வரலாற்றில் முதன்முறையாக சுயேச்சையான தினகரனிடம் தோற்று.. டெபாசிட் இழந்த திமுக என வரலாறு எழுதப்பட்டது.
அதன் பிறகு, ஆட்சியை கலைக்கும் முயற்சி யும்,
அ.தி.மு.க-வை கைப்பற்ற முயன்ற தினகரனின் முயற்சியும் இன்றுவரை பலிக்கவில்லை.
'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தனியாக கடை திறந்து செயல்பட்டுவந்தார். அவர் நடத்திய கூட்டங்களுக்கு பெரும் செலவில் அதிகமான தொண்டர்கள் திரட்டப்பட்டார்கள். அதனால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உருவெடுக்கலாம் எனும்
மாயையை ஏற்படுத்தினார் தினகரன். ஆனால், அது பொய்த்துப்போனது. 5.38 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
அ.தி.மு.க-வின் வெற்றியை அ.ம.மு.க. பாதிக்கும் என்கிற வாதம் வலுவிழந்தது. தென் மாவட்டங்களைத் தாண்டி பெரிய வாக்கு சதவிகிதத்தை வட மாவட்டங்களில் பெற முடியவில்லை. 95 சதவிகித அ.தி.மு.க தொண்டர்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய தினகரனால், அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை ஓரிரு தொகுதிகள் தாண்டி வேறெங்கும் பெரியதாகப் பிரிக்க முடியவில்லை.
தினகரனை ஒதுக்கிவைத்து மூன்றாண்டுகள் ஆன நிலையில், தினகரனின் முழு ஆட்டமும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கு பின்பு முடிந்துவிடும்...
இந்நிலையில்...
இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தினகரன் - சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை சீராய்வு செய்யக்கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கவும் தினகரன் - சசிகலா தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் “கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை மாற்றுவதற்கு அடிப்படை அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்த அம்சத்தை தேர்தல் கமிஷனும், டெல்லி ஐகோர்ட்டும் தங்கள் தீர்ப்பில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விஷயங்கள் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பரிசீலனைக்கு எடுக்கவில்லை. எனவே, இரட்டை இலை தொடர்பான டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த சீராய்வு மனுவை நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து, “வழக்கு தொடர்பான ஆவணங்களை பரிசீலனை செய்ததன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் தவறு எதுவும் இல்லை என்பதால் இந்த மனுவை சீராய்வு செய்ய முகாந்திரம் ஏதும் இல்லை” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளதாக சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார். ‘சீராய்வு மனு தள்ளுபடி செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குறை நிவர்த்தி மனுவை சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்படும். இந்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். அப்போது எங்கள் தரப்பின் நியாயத்தை மீண்டும் ஒரு முறை எடுத்துரைக்க வாய்ப்பு கிடைக்கும்’ என்று அவர் கூறினார்.
மக்களால் தூக்கி வீசப்பட்ட இந்த கொள்ளைக்கும்பல் எத்தனை நீதிமன்றங்களுக்கு சென்றாலும் வெற்றி பெற ப் போவதில்லை...
காரணம் இவர்களிடம் கொள்ளையடித்த நிதி நயாகரா நீர்வீழ்ச்சி போல கோடி கோடியாக குவிந்து ள்ளது...
ஆனால் நீதி இவர்களிடம் என்றுமே இருந்ததில்லை....
இராமச்சந்திர மூர்த்தி.பாஇரட்டை இலை சின்னம் வழக்கு ; சசிகலா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...