கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொது ஊரடங்கு, வரும், 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள, சென்னை போன்ற சிவப்பு மண்டலங்களில், கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும். பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு மற்றும் கடந்த, 21 நாட்களாக புதிதாக, ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத பச்சை மண்டலங்களில், நிபந்தனைகளுடன், சில தளர்வுகளை அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச், 24ல், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, ஏப்ரல், 14ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், தொற்று அதிகரித்தபடி இருந்ததால், மே, 3 ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. விவசாயம், மீன்பிடித்தல், கால்நடை உள்ளிட்ட சில தொழில்கள் மட்டும், நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஊரடங்கை, வரும், 17 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு, நேற்று இரவு அறிவித்தது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் பரவலின் வேகம் இன்னும் குறையவில்லை. மருத்துவ நிபுணர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களிடம், இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில், 2005ம் ஆண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தற்போதுள்ள ஊரடங்கை, மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊரடங்கு காலத்தில், எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டும் குறிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், சிவப்பு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஓரளவு பாதிப்புள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாகவும், கடந்த, 21 நாட்களாக புதிதாக, ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படாத பகுதிகள் பச்சை மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின் பொது அம்சங்கள்
* விமானம், ரயில், மெட்ரோ ரயில் சேவைகளுக்கான தடை தொடரும். மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளவர்களுக்கு மட்டும் போக்குவரத்து சேவை கிடைக்கும்
* பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட எந்த கல்வி நிறுவனங்களும், வரும், 17 வரை, தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஓட்டல், சினிமா, ஷாப்பிங் மால், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். விருந்தோம்பல் துறைக்கும் தடை நீடிக்கிறது
* சமூக, அரசியல், கலாசார நிகழ்ச்சிகள், மதம் சார்ந்த கூட்டு வழிபாடு ஆகியவற்றுக்கும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது
* மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, அத்தியாவசியமற்ற நடவடிக்கைகள், காலை, 7:00லிருந்து, மாலை, 7:00 மணி வரை தடை செய்யப்படுகின்றன
* அதிக அளவில் மக்கள் கூடுவதை தடை செய்யும், 144 தடை உத்தரவு, அமலில் இருக்கும்
* அனைத்து மண்டலங்களிலும், 65 வயதுக்கு மேற்பட்டோர், நோய் பாதிப்பு உள்ளோர், கர்ப்பிணி, 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், உள்ளிட்டோர், மிக அத்தியவாசிய தேவைகளை தவிர, மற்ற நேரங்களில் கண்டிப்பாக வெளியில் வரக் கூடாது
* மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவு, கிளினிக் ஆகியவை அனைத்து மண்டலங்களிலும் செயல்படலாம். ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், இந்த சேவைகள், சமூக விலகல், முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்பட வேண்டும்
* தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில், அத்தியாவசிய சேவைகள் தவிர, பிற சேவைகளுக்கு அனுமதியில்லை
* அத்தியாவசிய பொருட்களுக்கான சரக்கு போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையே இயங்கலாம். இதற்கு, அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை

சிவப்பு மண்டலம்
* கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களில், சைக்கிள் ரிக் ஷா, ஆட்டோ, வாடகை கார், முடி திருத்தும் நிலையம், அழகு நிலையம், மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து ஆகியவற்றுக்கான தடை தொடரும்
* அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டும், கார்களில் இரண்டு பேர் செல்ல அனுமதி உண்டு. டிரைவரையும் சேர்த்து, மூன்று பேர் செல்லலாம். இரு சக்கர வாகனங்களில் தனி நபர் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. பின் இருக்கையில், யாரும் செல்ல அனுமதி இல்லை; இதுவும், அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும்
* மருந்து மற்றும் மருத்துவ உபரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஹார்டுவோர் பணியில் ஈடுபட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், சணல் தொழிற்சாலை ஆகியவை, சமூக விலகல் விதிமுறைகளுடன் செயல்படலாம்
* கட்டுமான தொழில்கள், குறைந்த தொழிலாளர்களுடன் செயல்படலாம். வேறு இடங்களில் இருந்து, தொழிலாளர்களை அழைத்து வரக் கூடாது
* குடியிருப்பு பகுதிகளில் தனித் தனியாக செயல்படும் அனைத்து கடைகளும் இயங்கலாம்
* இணைய வர்த்தக சேவை மூலம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் மட்டுமே ஈடுபட வேண்டும். தனியார் நிறுவனங்கள், 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்; மற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்த வேண்டும்
* வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள், மின்சாரம், தண்ணீர், தொலை தொடர்பு சேவைகள், தபால், கூரியர் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது
* அச்சு ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தொழில்கள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும், பிளம்பர், எலெக்ட்ரீஷியன் போன்ற சுய வேலை பார்ப்போர் ஆகியோருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது

ஆரஞ்சு மண்டலம்
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில், வாடகை டாக்சிகள், ஒரு பயணியுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைக்கு மட்டுமே இந்த தளர்வு பொருந்தும். மாவட்டங்களுக்கு இடையோன தனி நபர் நகர்வு மற்றும் வாகன இயக்கம் ஆகியவை, அனுமதி அளிக்கப்பட்ட நடவடிக்கைளுக்கு மட்டும் இயங்கலாம்
* கார்கள், டிரைவர் மற்றும் இரண்டு பயணியருடன் இயங்கலாம். இரு சக்கர வாகனங்களில், இருவர் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது

பச்சை மண்டலம்
* கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில், அனைத்து விதமான தொழில் நடவடிக்கைகளும் செயல்படலாம். ஆனாலும், நாடு முழுவதும் அமலில் உள்ள பொதுவான கட்டுப்பாடுகள், இந்த பகுதிகளிலும் தொடரும். 50 சதவீத இருக்கை வசதியுடன் பஸ்களை இயக்கலாம். பஸ் டெப்போக்களில், 50 சதவீத பஸ்கள் வந்து செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வேலை 12 மணி நேரம் அதிகரிப்பு:
ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட ஆறு மாநில அரசுகள், தொழிலாளர்களின் வேலை நேரத்தை, எட்டு மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரமாக அதிகரித்து, சட்டம் இயற்றியுள்ளன. குறைவான தொழிலாளர்களை வைத்து வேலை பார்க்க வேண்டியுள்ளதாலும், 'ஷிப்ட்' குறைக்கப்பட்டுள்ளதாலும், தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, அதிகரிக்கப்பட்டுள்ள நான்கு மணி நேர வேலையை, கூடுதல் வேலை நேரமாக கருதி, அதற்கான ஊதியம் கொடுக்கப் போவதாக, ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த, 12 மணி நேர வேலை நேரத்தில், ஆறு மணி நேரத்துக்குப் பின், சிறிய ஓய்வு தரப்படும் என, குஜராத் அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்ட அமைச்சரவை குழு, இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள், பிரதமர் மோடியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

No comments:
Post a Comment