Sunday, September 6, 2020

166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது.

 தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து அதிகாலை முதல் தொடங்கியுள்ளது

166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று பஸ் போக்குவரத்து தொடங்கியது
பஸ் போக்குவரத்து - கோப்புப்படம்


















தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 8-ம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒவ்வொரு கட்ட ஊரடங்கு உத்தரவின் போதும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஏற்கனவே தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னை மண்டலம் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலம் ஆகிய 2 மண்டலங்களையும் தவிர்த்து பிற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து ஜூன் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட்டது. எனினும் பஸ்கள் அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

பின்னர், ஜூன் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சென்னை மண்டலம் தவிர்த்து ஏனைய மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவியதால், ஜூலை 1-ந் தேதி முதல் அனைத்து பஸ் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.

அதன் பிறகு, கடந்த 1-ந் தேதி முதல் மாவட்டங்களுக்குள் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது.


இந்நிலையில் தமிழகத்தில் 166 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து அதிகாலை முதல் தொடங்கியுள்ளது

ஏற்கனவே மாவட்டங்களுக்குள் அரசு பேருந்து சேவை தொடங்கிய நிலையில் மாவட்டங்களுக்கிடையே அரசு பேருந்து, தனியார் பேருந்து சேவை தொடங்கியது.

தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத, முகக்கவசம் அணியாத பயணிகள் பேருந்துகளில் ஏற அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 400 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை என நீண்டதூர இடங்களுக்கு 1,100 பஸ்களை இயக்கி வருகிறது.

மேலும் விழுப்புரம், கும்பக்கோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இன்று முதல் தொடங்கியது. இதில் சென்னையில் இருந்து மட்டும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 260 பஸ்கள் உள்பட பிற அரசு போக்குவரத்து கழக பஸ்களையும் சேர்த்து 800 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கோயம்பேடு பணிமனையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பஸ்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், என்ஜின்கள், பேட்டரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. பஸ்களின் இருக்கைகளும் சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அரசு பஸ்களில் முன்பதிவு விவரம் குறித்து அரசு விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய இதுவரை 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர். அதில், இன்று மட்டும் பயணம் செய்ய 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படும். நள்ளிரவு 12 மணி முதல் பஸ்கள் இயக்கப்படும். ஆனால், பயணிகள் வந்தால் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். பெரும்பாலும், கோயம்பேட்டில் இருந்து தலா 24 பயணிகளுடன் பஸ்கள் புறப்படும். சமூக இடைவெளியை கடைபிடித்து பஸ்சில் இருக்கைகள் இருந்தால் நடுவழியில் பயணிகளை ஏற்றிக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகாளய பட்சம் என்றால் என்ன?

 புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்னதாக உள்ள 14 நாட்களே மகாளயபட்சத்தில் அடங்கும்.

மகாளய பட்சம் என்றால் என்ன?
மகாளய பட்சம்


















இந்த உலகத்திலுள்ள நோய்களிலேயே கடுமையானது பசி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பர். இருப்பவர்கள், இல்லாதவர்களின் பசியைத் தீர்ப்பதற்கென்றே உருவான காலம் தான் மகாளயபட்சம்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு முன்னதாக உள்ள 14 நாட்களே மகாளயபட்சத்தில் அடங்கும்.

குருசேத்ர யுத்தத்தின் முடிவில், கர்ணனைக் கொல்லும் நேரம் வந்தது. அவன் தர்மங்கள் பல செய்த மாபெரும் வள்ளல் என்றாலும் கூட, அதர்மத்துக்கு துணை போன துரியோதனனுடன் சேர்ந்திருந்ததால், அவனை அழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் கிருஷ்ண பரமாத்மா.

அர்ஜுனன், மீது விட்ட சில அம்புகள், அவனைக் காயப்படுத்தி சாய்த்தன. ஆனால், உயிரைப் பிரிய விடாமல் அவன் செய்த தர்மம் காத்து நின்றது. அப்போது, அந்தணராக வேடமணிந்து, அவன் செய்த தர்மத்தை தாரை வார்த்துப் பெற்றார் கிருஷ்ணர். அதற்காக, அவனுக்கு மோட்சம் அளித்தார்.

சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த பொன், நவரத்தின தானத்துக்கு பலனாக தங்க மாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது. பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன; ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை.

இதற்கு காரணம் தெரியாமல் அவன் தவித்தபோது, தேவர்கள் அவனிடம், “கர்ணா… நீ பூமியில் இருந்தபோது பொன்னும், மணியுமே தானம் செய்தாய்; அன்னதானம் செய்யவில்லை. எனவே, நீ இப்போது பூமிக்குச் செல். இப்போது மகாளயபட்ச காலம். பிதுர்கள் (மறைந்த முன்னோர்) பூமிக்குச் செல்லும் காலம்.

அவர்களை அவரவர் உறவினர் வரவேற்று, தர்ப்பணம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானமும் செய்வர். இக்காலத்தில், நீ மறைந்திருந்து அன்னதானம் செய்து வா. பின்பு இங்கு உணவும் கிடைக்கும்!” என்றனர்.

கர்ணன் அவ்வாறு பூமிக்கு வந்த காலமே மகாளய காலம் ஆனது. உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச.காலத்தில், நாம் எல்லாருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். தினமும் காலை யில் பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுக்க வேண்டும். காலை, மதியம் உணவிற்கு முன், காகங்களுக்கு சோறிட வேண்டும். 14 நாட்களும் தினமும் ஒரு ஏழைக்காவது உணவு கொடுக்க வேண்டும்.

ஏதாவது ஒருநாள் ராமேஸ்வரம், வேதாரண்யம், கன்னியாகுமரி கடற்கரையிலோ, கங்கை (காசி), தாமிரபரணி (பாபநாசம்), காவிரி (ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்) ஆகிய நதிக்கரைகளிலோ, குற்றாலம் அருவிக்கரையிலோ தர்ப்பணம் செய்து, அங்குள்ள கோவில்களில் வழிபட்டு வர வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகி லுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்…..

Wednesday, August 26, 2020

உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச்சட்டிணியா..

 எப்பா தினமலரு!!..

நீயே இப்டி பண்ணா மீம்ஸ் கிரியேட்டர்ஸலாம் எங்க போறது!!??👌👌

செம்ம..😂😂


Image may contain: text that says '35 வயதா... இடமில்லை...! தி.மு.க., இளைஞர் அணியில்... 41 வயது உதயநிதி அதிரடி -நமது சிறப்பு நிருபர்- 35 வயதை தாண்டியவர்களுக்கு திமுக இளைஞர் அணியில் இடமில்லை என்று 41 வயதான உதயநிதி, நேற்று தீர்மானம் நிறைவேற்றினார்.'

குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

 *பிரான்சில் நடந்தது, 18 வயது வாலிபன் ஒரு வீடியோ கேம் விளையாட்டுக்கு அடிமையாகின்றான். அந்த வீட்டில் வேலை செய்யும் பெண் தவறுதலாக Vacuum cleaner போடும் போது wifiஐ துண்டித்து விட்டார்.*

*அதனால் வாலிபன் சண்டையிட்டு, வீட்டில் இருந்த அனைவரையும் கொன்று போட்டான்.* *இவரது தாய், தந்தை, சகோதரர், சகோதரி, வீட்டு பணியாளர்..*

*குற்றம் நடந்த இடத்திற்கு போலீசார் வந்த பொழுது அவன் விளையாடுவதைக் கண்டனர். அவரது குடும்பத்தினர் சுற்றி கொல்லப்பட்டு இருந்தனர்.*
*அவன் காவல் துறையினரிடம் காத்திருக்க சொல்லி தொடர்ந்து விளையாட அனுமதிக்கும்படி கூறினான்.*
*மொபைல்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேஜேட்டுகளின் அதிகபடியான பயன்பாடு காரணமாக மனநோயாளியாக மாறுவதற்கு முன்பு, குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். கவனமாக இருக்கவேண்டும்..*

வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்....

 எஸ்பி பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் உள்ளார். உடல்நிலை சீராக உள்ளது. - மருத்துவமனை அறிக்கை....


Image may contain: text that says 'Print MGM HEALTHCARE Report MGMHC/SPB/11 August 26, 2020 6:30 PM Health Bulletin Thiru S P Balasubrahmanyam who had been admitted at MGM Healthcare due to COVID-19 continues be on Ventilator and EcMO support in the Intensive Care Unit (ICU). His current clinical condition is stable. He is conscious & responsive and continues to be closely monitored by our multidisciplinary clinical team. Anuradha. B Dr. Anuradha Baskaran Assistant Director- Medical Services MGM Healthcare MGM HEALTHCARE PVT LTD Aminjikarai Chennai 600029 info@mgmhealthcare.in mgmhealthcare.in'

Monday, August 10, 2020

இதெல்லாம் திராவிட பகுத்தறிவு பண்ணாடைகள்..

 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.

 அந்த மாய‌ கண்ணன் ஒரு தந்திரகாரன் என எல்லோரும் அறிவர், ஆனால் பின்னாளைய தமிழக இம்சைகளை குழப்பத்தில் விடும் அளவு அவன் மாபெரும் தந்திரகாரன் என்பது இப்பொழுதுதன் புரிகின்றது

கிருஷ்ணன் பிராமணன் அல்ல, அவன் அன்று தாழ்த்தபட்டு , ஒடுக்கபட்ட யாதவர் குலத்தில்தான் உதித்தான், அவர்களுக்காகவே வாழ்ந்தான்

அவர்கள் சுதந்திரமாக வாழ துவாரகா எனும் நகரையே உருவாக்கி அவர்களை வாழவைத்தான்.

இதனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்தவன் அவன் என்பதால் அவனை சமூக நீதி போராளிகள் எதிர்க்க முடியாது.

பிரமாண எதிர்ப்பு என கண்ணனை புறக்கணிக்க முடியாது, அவனும் கருப்பு நிறமே. இதனால் கருப்பர் கூட்டமும் சத்தம் போட முடியாது

பூனூல் எல்லாம் போட்டதாக தகவல் இல்லை, அதனால் திராவிட போராளிகளுக்கும் அவனை எப்படி எதிர்ப்பது என தெரியவில்லை

அவன் பாஞ்சாலிக்கு நீதி செய்தான் இதனால் பெண்கள் வன்கொடுமையிலும் வரமாட்டான்.

இது போக கம்சன், சிசுபாலன், ஜெயரதன், துரியோதனன் என ஒரு டஜன் கோஷ்டிகளை அவன் அழித்து போட்டிருப்பதால் இது கம்சன் மண்ணா?, சிசுபாலன் மண்ணா? துரியோதனன் மண்ணா? என குழம்பி நிற்கின்றது அக்கோஷ்டி

ஒரே நேரத்தில் அவர்கள் மண் என சொல்லவும் முடியாது, ஒரே நேரத்தில் பல முப்பாட்டன்கள் வரவும் முடியாது

இதனால் சமூக நீதி, பார்பானியம், கருப்பபு கூட்டம், முப்பாட்டன், மண் என எந்த ரகத்திலும் கண்ணனை சேர்க்க முடியாமல் வாயில் துண்டு வைத்து அழுது கொண்டிருகின்றது அக்கோஷ்டி

பகவான் கண்ணன் அன்றே எல்லோரையும் சுற்றலில் விட்டவன், அவன் ஜெகஜால கில்லாடிகளான தமிழக இம்சைகளையும் கதற வைத்து கொண்டிருக்கின்றான் என்பதுதான் சுவாரஸ்யம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...