அந்த மாய கண்ணன் ஒரு தந்திரகாரன் என எல்லோரும் அறிவர், ஆனால் பின்னாளைய தமிழக இம்சைகளை குழப்பத்தில் விடும் அளவு அவன் மாபெரும் தந்திரகாரன் என்பது இப்பொழுதுதன் புரிகின்றது
கிருஷ்ணன் பிராமணன் அல்ல, அவன் அன்று தாழ்த்தபட்டு , ஒடுக்கபட்ட யாதவர் குலத்தில்தான் உதித்தான், அவர்களுக்காகவே வாழ்ந்தான்
அவர்கள் சுதந்திரமாக வாழ துவாரகா எனும் நகரையே உருவாக்கி அவர்களை வாழவைத்தான்.
இதனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக நீதி காத்தவன் அவன் என்பதால் அவனை சமூக நீதி போராளிகள் எதிர்க்க முடியாது.
பிரமாண எதிர்ப்பு என கண்ணனை புறக்கணிக்க முடியாது, அவனும் கருப்பு நிறமே. இதனால் கருப்பர் கூட்டமும் சத்தம் போட முடியாது
பூனூல் எல்லாம் போட்டதாக தகவல் இல்லை, அதனால் திராவிட போராளிகளுக்கும் அவனை எப்படி எதிர்ப்பது என தெரியவில்லை
அவன் பாஞ்சாலிக்கு நீதி செய்தான் இதனால் பெண்கள் வன்கொடுமையிலும் வரமாட்டான்.
இது போக கம்சன், சிசுபாலன், ஜெயரதன், துரியோதனன் என ஒரு டஜன் கோஷ்டிகளை அவன் அழித்து போட்டிருப்பதால் இது கம்சன் மண்ணா?, சிசுபாலன் மண்ணா? துரியோதனன் மண்ணா? என குழம்பி நிற்கின்றது அக்கோஷ்டி
ஒரே நேரத்தில் அவர்கள் மண் என சொல்லவும் முடியாது, ஒரே நேரத்தில் பல முப்பாட்டன்கள் வரவும் முடியாது
இதனால் சமூக நீதி, பார்பானியம், கருப்பபு கூட்டம், முப்பாட்டன், மண் என எந்த ரகத்திலும் கண்ணனை சேர்க்க முடியாமல் வாயில் துண்டு வைத்து அழுது கொண்டிருகின்றது அக்கோஷ்டி
பகவான் கண்ணன் அன்றே எல்லோரையும் சுற்றலில் விட்டவன், அவன் ஜெகஜால கில்லாடிகளான தமிழக இம்சைகளையும் கதற வைத்து கொண்டிருக்கின்றான் என்பதுதான் சுவாரஸ்யம்.
No comments:
Post a Comment