Sunday, September 6, 2020

ஊழல்,பதவி வெறி அரசியல் வியாதிகளை வேரறுத்து நல்லவர்களை தரங்கண்டு ஆட்சியில் அமர்த்துவோம்...

 நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள்.

அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ்.

சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும்.

அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார்.

நீண்ட காலம் அப்படி நீடித்தது.

ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது.

பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.

“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்

பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.

இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .

"சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்.

"அதெல்லாம் எனக்கு தெரியாது" என்றார் காமராஜர்.

வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்துவரச் சொன்னார்.

தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு,

‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார்.

வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.

ஏதாவது செய்துகொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன்.

பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்.

சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும்.

எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.

கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று.

அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார்.

விலை பேசினார்.

காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை.

அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார்.

பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார்.

யார் பெயரில் என்று கேட்கிறார்.

உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன்.

மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார்.

எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து.

யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள்.

அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை.

கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.

’தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள். 

Image may contain: 1 person, sitting

பார்...தமிழகமே... பார்... !!

 *எவ்வளவு கீழ்த்தரமான அரசு ஊழியர்கள்...*

“பத்திரப் பதிவு முடிந்தவுடன் கணினி வாயிலாக உடனே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு VAO க்கள் எதிர்ப்பாம்.”

அவர்கள் விரும்புவதெல்லாம்,
பத்திரத்தை தூக்கிக் கொண்டு VAO க்களான இவர்கள் முன் போய் கை கட்டி நிற்க, அவர் நம்மை உட்கார வைத்து,

முதலில் எந்தவிதமான பட்டா?
1. Simple Transfer Patta அதாவது வெறும் பெயர் மாற்ற பட்டாவா?
2. RPT பட்டாவா ?
3. Sub-Division பட்டாவா?
என்பதை ஆய்ந்து அதற்குத் தக்கவாறு,

யார் யாருக்கு எவ்வளவு?
அதாவது VAO க்கு எவ்வளவு, R.I க்கு எவ்வளவு, சர்வேயருக்கு எவ்வளவு, ஹெட் சர்வேயருக்கு எவ்வளவு, A.T க்கு ,D.T க்கு எவ்வளவு, கடைசியாக தாசில்தாருக்கு எவ்வளவு என கூட்டல் கணக்கெல்லாம் நமக்கு கற்றுக் கொடுத்து விட்டு,

அப்பாவியாய் முகத்தைக் காட்டி பேரம் பேசிப் பேசி, சொத்தின் மதிப்புக்கும், விஸ்தீரணத்திற்குத் தக்க லஞ்சத் தொகையை அவர் நிர்ணயம் செய்து நம்மிடம் கோரிக்கை வைக்க, நாமும் உள்ளுக்குள் மனம் நொந்து, வெந்து, சகித்து பணிவுடன் பேரம் பேசி,

அவர்களது மனம் நோகா வண்ணம் சில/ பல ஆயிரங்களைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு, அழுகையுடன் அட்வான்ஸ் கொடுத்து விட்டு, அவர்களின் பின் நடையாய் நடந்து செருப்பு தேய்ந்த பின் அவர்கள் நம் மீது கருணை காட்டி காசைக் கறாராக கறந்து கொண்டு, நம் சொத்துக்கு, நம் பெயரில் பட்டாவைத் நம் கையில் திணித்து அனுப்புவதுதான் VAO க்கள் விரும்பும் சிறந்த முறையாம்.

அதை விடுத்து பத்திரப் பதிவு முடித்த உடன் பட்டாவைக் கைமேல் பெறலாம் என்று மக்களுக்கு வசதி செய்தால், லகரங்களில் அவர்கள் இழக்கும் லஞ்ச வருவாயை எவ்வாறு ஈடு செய்வது ?

தங்கள் தினசரி வருமானத்தை விட்டுக் கொடுத்து மக்களுக்கு சேவை செய்யும் அளவுக்கா அரசு ஊழியர்களை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்?

ஆனாலும் மக்கள் நலனுக்கான அரசு திட்டத்தை லஞ்சம் கிடைக்காது என்ற காரணத்தால் எதிர்க்கும் அளவுக்கு VAO க்கள் தைரியசாலிகளாக இருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும் !

மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !!
நம்மிடம் கொள்ளையடிக்க vao க்கள் வெளிப்படையாக அரசின் மக்கள் நலத்திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்றால் யார் ஏமாளிகள் என்று புரிந்து *VAO போராட்டத்தை எதிர்த்து குரல் கொடுங்கள். சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிருங்கள்....*

நியூஸ்18 தொலைக்காட்சியின் முழு பொறுப்பையும் ஏற்கிறார் ரங்கராஜ் பாண்டே.! விரைவில் ஒப்பந்தந்தில் கையெழுத்திடுகிறார்.!.

 

Image may contain: 1 person, text that says 'நியூஸ் 18ல் இனி பாண்டே வின் காரசார விவாதம்.. பேச்சுவார்த்தை முடிந்தது.. NEWS 18 தமிழ்நாடு'









நியூஸ்18 தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் அடிப்படையில் வேலை செய்வதாகவும், குறிப்பாக திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கருப்பர் கூட்டம் பின்னணியில் நியூஸ்18 ஊழியர்கள் இருப்பதாக எழுத்தாளர் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்திய சீன எல்லையில் உள்ள கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

அதின் பிறகு மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அதில் ஒன்று சீனாவிற்கு சொந்தமான தொலைபேசி செயலிகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்தது. இதை கிண்டல் செய்யும் விதமாக நியூஸ்18 தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றிய செந்தில், தனது ட்விட்டர் பதிவில் “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா” என பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் நியூஸ் 18 தொலைக்காட்சி தலைமை அலுவலகத்துக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு புகார்கள் சென்றதை தொடர்ந்து, நியூஸ் 18 ஊழியர்களை களையெடுக்க தொடங்கியது அந்த நிர்வாகம்.
விசாரணையில் குற்றங்கள் நிரூபணம் ஆனதை தொடர்ந்து நியூஸ் 18 தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து குணசேகரன் நீக்கப்பட்டார். மேலும் சில நிர்வாகிகளை பணியில் இருந்து தூக்கியது நிர்வாகம். மேலும் பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே நியூஸ் 18 தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பு ஏற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதனை அறிந்த குணசேகரன், செந்தில் போன்ற முன்னணி நெறியாளர்கள் ரங்கராஜ் பாண்டே தலைமை பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்து ஒவ்வொருவராக வேலையை ராஜினாமா செய்து வந்தனர்.
இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே உடன் தொடர்ந்து நியூஸ்18 தொலைக்காட்சி நிறுவனம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு விரைவில் நியூஸ்18 தொலைக்காட்சியின் முழு பொறுப்பையும் ரங்கராஜ் பாண்டே ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் விரைவில் ரங்கராஜ் பாண்டே கையொப்பம் இடுவார் என நியூஸ்18 தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இந்நிலையில் அதற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரங்கராஜ் பாண்டே முழு பொறுப்பையும் அடுத்த மாத தொடக்கத்தில் ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது பெரும்பாலான ஊழியர்கள் நியூஸ்18 தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டும், ராஜினாமா செய்தும் வெளியேறியுள்ளதால், ரங்கராஜ் பாண்டே பொறுப்புக்கு வந்ததும் அவர் ஆலோசனை படி புதிய ஆட்களை தேர்வு செய்ய நியூஸ் 18 நிர்வாகம் முடிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுக்கு பதவியும்,பணமும் தான் வேண்டும்.மனசாட்சியாம்! கொள்கையாம்!! மண்ணாங்கட்டி.

 ஏன்பா ஜாமீன் சிதம்பரம் , உன் மனைவியே நீட் தேர்வுக்கு #ஆதரவாக வாதாடி , நீட் தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை வாங்கி கொடுத்த பிறகு உன் சீடன் ஜிப் வாயன் கே .எஸ் .அழகிரி அதற்கு எதிராக நீங்கள் (காங்கிரஸ் ) எல்லோரும் திமுகவின் அடிமைகளாக இப்போது கோஷம் போடுகிறீர்களே இது நியாயமா , இந்த கேவலமான பிழைப்பு உங்களுக்கு தேவையா . சீ , சீ , த்தூ , த்தூ நீங்களும் ஒழுங்கான அரசியல் வாதிகள் என்று கூறிக்கொண்டு எத்தனை நாட்கள் மக்களை ஏமாற்ற முடியும் . இந்த மாதிரி அடிமை நாய் பிழைப்பிற்கு பதில் நாண்டு கிட்டு சாகலாம் . நீங்கள் தனியாக தேர்தலை எதிர் கொண்டால் டெபாசிட் மட்டுமல்ல நோட்டா விற்கும் கீழே போய்விடுவீர்கள் . நீங்கள் பெரும் தலைவர் காமராஜை கொண்டாடிக்கொண்டு , அவர் வாழ்நாள் முழுதும் எதிர்த்த திமுகவின் அடிமையாக இருப்பதுஏம்பா பீட்டர் அல்போன்ஸ் உங்களுக்கு கேவலமாய் இல்லையா?

Image may contain: 1 person, eyeglasses and closeup

இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம்.

 தோழரே.... பசி வயித்த கிள்ளுது, கையில பத்து பைசா இல்ல, சாப்பிட எதாச்சும் வாங்கி கொடுங்களேன்.

எங்கட்டயும் காசு சுத்தமா இல்லை தோழரே..

எதாவது ஐடியா பண்ணுங்க தோழரே...

சரி வாங்க இந்த ஹோட்டல்ல போய் சாப்பிடுவோம்.

தோழரே... இது ரொம்ப காஸ்ட்லியான ஹோட்டல், காபியே முப்பது ரூபாய்.. காசும் இல்லைங்கறீங்க என்ன பண்ண போறீங்க?

முதல்ல சாப்பிடுங்க தோழரே..

சினிமாவுல வர்ற மாதிரி, பாதியிலேயே எந்திரிச்சு போயிட மாட்டீங்கள்ள..

தோழரே.. நம்ம பழக்கம் வழக்கம் அப்படியா... முதல்ல பசியாற நல்லா சாப்பிடுங்க தோழரே..

ஹப்பா.. நல்லா சாப்பிட்டாச்சு தோழரே.. இப்பதான் பசியே அடங்குச்சு, அய்யய்யோ சர்வர் பில் கொண்டு வர்றான்

பயப்படாதீங்க.. இப்ப பாருங்க,
யாரை பாத்துடா ஹிந்தி தெரியுமானு கேட்ட, தமிழன்னா இளக்காரமா? கூப்பிடுறா, உன் முதலாளிய...

தம்பி தம்பி.. என்ன பிரச்சினை

சார்.. எங்ககிட்ட ஹிந்தியில பேசுனது மட்டுமல்லாம, ஹிந்தி தெரியாதானு எகத்தாளமா கேட்கிறான் சார்.. உங்க கடைக்கு வர்றவங்க கிட்ட இப்படிதான் நடந்துக்குவீங்களா, இதை சும்மா விடமாட்டோம், இன்னும் கொஞ்ச நேரத்தில, கடை முன்னாடி போராட்டம் நடக்க போகுது.
தோழரே.. நம்ம ஆளுகளை எல்லாரையும் போன் பண்ணி வரச்சொல்லுங்க..

தம்பி... இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம். மரியாதைக்கு தின்னதுக்கு காசை கொடுத்துட்டு போங்க..

யாரை, யாரைப்பார்த்து காசு கேட்கற.. தமிழனை பார்த்து ஹிந்தி தெரியுமானா கேட்டுட்டு திமிராவா பேசற.. இன்னைக்கு உன் கடையை, அக்குவேறா ஆணிவேற பிரிச்சு மேயப்போறோம் பாரு..

டேய்... அந்த சர்வர் பையன் வாய் பேச முடியாத ஊமை..
மரியாதைக்கு உள்ள போயி மாவு ஆட்டுங்கடா,
மாஸ்டர் இவனுக மாவு ஆட்டி முடிச்சதும், இருக்கற பாத்திரங்கள பூராம் கழுவ வையுங்க...

அறிவுசார் பூங்கா கட்டட பணி: ஜெ., நினைவிடத்தில் தீவிரம்.

 ஜெயலலிதா நினைவிடத்தில், அறிவுசார் பூங்கா கட்டடம் கட்டும் பணிகள்,இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.\

வாழ்க்கை வரலாறு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு, மெரினா கடற்கரையில், 58 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்டப்படுகிறது.இதன்மேல், கான்கிரீட் போடும் பணி எஞ்சியுள்ளது. பீனிக்ஸ் பறவை கட்டடத்தின் இரண்டு புறங்களிலும், மூன்று சிறிய அடுக்குகளில் புதிய வடிவில், கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

ஒரு கட்டடத்தில், ஜெ., அருங்காட்சியகம் அமையவுள்ளது.இதில், அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படங்கள், வீடியோ தொகுப்புகள் இடம் பெற உள்ளன.வளர்ச்சி திட்டங்கள்மற்றொரு கட்டடத்தில் அறிவுசார் பூங்கா அமையவுள்ளது. இங்கு, ஜெ., அரசு செயல்படுத்திய இலவச சைக்கிள் திட்டம், லேப்டாப்திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்த செயல் விளக்கங்கள் இடம் பெற உள்ளன.

தற்போது, இந்த கட்டடத்தின் தரை மட்டுமின்றி, சுவர்கள் முழுதும், கிரானைட் கற்கள் பதிக்கப்படுகின்றன. இதற்காக, ராஜஸ்தானில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். இப்பணிகளை இந்த வார இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அறிவுசார் பூங்கா கட்டட பணி: ஜெ., நினைவிடத்தில் தீவிரம்

உலர் பழங்கள் தரும் ஆரோக்கியம்.

 உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.

உலர் பழங்கள் தரும் ஆரோக்கியம்
உலர் பழங்கள்


















உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச்செய்து, உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள்கெடாமல் இருக்கும். உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.

உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக்கூடியவை. ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கியத்தை அடையலாம்.

உலர் பழங்களில் உள்ள இனிப்பு தனித்துவமான சுவை கொண்டது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. உலர் பழங்களை பழக்கமாகக் கொண்டால் உடலில் சக்தி அதிகரிக்கும். உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை அழகாக்கக்கூடியவை. மலச்சிக்கலை போக்க வல்லது. அதுமட்டுமல்ல நினைவாற்றலையும் பெருக்கும். இதயத்திற்கும் நல்லது. உலர்ந்த திராட்சை புரதச் சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச் சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச் சத்தும் உள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...