Sunday, September 6, 2020

நியூஸ்18 தொலைக்காட்சியின் முழு பொறுப்பையும் ஏற்கிறார் ரங்கராஜ் பாண்டே.! விரைவில் ஒப்பந்தந்தில் கையெழுத்திடுகிறார்.!.

 

Image may contain: 1 person, text that says 'நியூஸ் 18ல் இனி பாண்டே வின் காரசார விவாதம்.. பேச்சுவார்த்தை முடிந்தது.. NEWS 18 தமிழ்நாடு'









நியூஸ்18 தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் அடிப்படையில் வேலை செய்வதாகவும், குறிப்பாக திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கருப்பர் கூட்டம் பின்னணியில் நியூஸ்18 ஊழியர்கள் இருப்பதாக எழுத்தாளர் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்திய சீன எல்லையில் உள்ள கள்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

அதின் பிறகு மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அதில் ஒன்று சீனாவிற்கு சொந்தமான தொலைபேசி செயலிகள் இந்தியாவில் செயல்பட தடை விதித்தது. இதை கிண்டல் செய்யும் விதமாக நியூஸ்18 தொலைக்காட்சியில் நெறியாளராக பணியாற்றிய செந்தில், தனது ட்விட்டர் பதிவில் “சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா” என பதிவு செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின் நியூஸ் 18 தொலைக்காட்சி தலைமை அலுவலகத்துக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு புகார்கள் சென்றதை தொடர்ந்து, நியூஸ் 18 ஊழியர்களை களையெடுக்க தொடங்கியது அந்த நிர்வாகம்.
விசாரணையில் குற்றங்கள் நிரூபணம் ஆனதை தொடர்ந்து நியூஸ் 18 தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து குணசேகரன் நீக்கப்பட்டார். மேலும் சில நிர்வாகிகளை பணியில் இருந்து தூக்கியது நிர்வாகம். மேலும் பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே நியூஸ் 18 தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பு ஏற்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதனை அறிந்த குணசேகரன், செந்தில் போன்ற முன்னணி நெறியாளர்கள் ரங்கராஜ் பாண்டே தலைமை பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்து ஒவ்வொருவராக வேலையை ராஜினாமா செய்து வந்தனர்.
இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே உடன் தொடர்ந்து நியூஸ்18 தொலைக்காட்சி நிறுவனம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு விரைவில் நியூஸ்18 தொலைக்காட்சியின் முழு பொறுப்பையும் ரங்கராஜ் பாண்டே ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஒப்பந்தத்தில் விரைவில் ரங்கராஜ் பாண்டே கையொப்பம் இடுவார் என நியூஸ்18 தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இந்நிலையில் அதற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரங்கராஜ் பாண்டே முழு பொறுப்பையும் அடுத்த மாத தொடக்கத்தில் ஏற்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது பெரும்பாலான ஊழியர்கள் நியூஸ்18 தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டும், ராஜினாமா செய்தும் வெளியேறியுள்ளதால், ரங்கராஜ் பாண்டே பொறுப்புக்கு வந்ததும் அவர் ஆலோசனை படி புதிய ஆட்களை தேர்வு செய்ய நியூஸ் 18 நிர்வாகம் முடிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...