Thursday, December 1, 2022

ஞாபகத்தில் எழுகிறது!

 

✍️அன்பு மகனுக்கு அம்மா எழுதுவது..
வசதியாகத்தான்
இருக்கிறது மகனே…
நீ
கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்.
பொறுப்பாய்
என்னை
ஒப்படைத்து விட்டு
வெளியேறிய
போது,
முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில்
விட்டு விட்டு
என் முதுகுக்குப்
பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில்
எழுகிறது!
முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை
அறிகையில்,
அன்று உனக்காக
நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்று
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!
இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல்
போனாலும்,
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்கு
மனம்
மகிழ்ச்சியடைகிறது.
நீ விடுதியில்
தங்கிப் படித்த
காலத்தில்
உன்னைப் பார்க்க
வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்,
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க
மறுத்ததன்
எதிர்வினையே இது என
இப்போது அறிகிறேன்.
இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக
சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப்
பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்.
ஆயினும்
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு;
நான்
கற்றுக்கொடுத்தேன்
உனக்கு;
வாழ்க்கை இதுதான் என.
நீ கற்றுக்
கொடுக்கிறாய்
எனக்கு,
உறவுகள்
இதுதானென்று!
இந்தக் கவிதையைப்
படித்ததும் கண்கள் குளமாகியது,
உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன் _
May be an illustration of one or more people and text

சப்பாத்தி சுகரின் அளவை குறைக்காதா???

 விழிப்புணர்வுபதிவு...

~சப்பாத்தி சாப்பிட்டா வெய்ட் குறையுமாமே டாக்டர் ? நெஜமாவா?
எங்க அப்பாவுக்கு சுகர் இருக்கு. 10 வருஷமா டெய்லி ராத்திரி 4 சப்பாத்தி சாப்புடுறார்... ஆனாலும் சுகர் குறையல.
சரி...சப்பாத்தி பத்தி இன்னைக்கு பாப்போம்.
சப்பாத்தி ல என்ன இருக்கு??
இன்னும் தெளிவா சொல்லப்போனா #குட்டைகோதுமை (Atta)
சப்பாத்தி சாப்பிட்டா எப்டி சார் எடை குறையும்-ன்னு நெனைக்குறீங்க !!
~அதுல கலோரி கம்மி டாக்டர்.
இல்லைங்க.
~அதுல கார்போஹைட்ரேட் கம்மி டாக்டர்
அதுவும் இல்லைங்க.
சரி...இப்போ நாம எப்பவும் சாப்பிடுற #அரிசி சாதத்தையும்,#சப்பாத்தியையும் எடுத்துப்போம்.
*ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க கலோரி - 281
*4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 360
*ஒரு Bowl அரிசி சாதத்துல இருக்க
கார்போஹைட்ரேட்-62 கிராம்
*4 சப்பாத்தியில் உள்ள கலோரி - 69 கிராம்.
ஆக மொத்தம் அரிசியை விட சப்பாத்தியில #கலோரியும் அதிகம்,#கார்போஹைட்ரேட் உம் அதிகம்.
அப்புறம் எப்படி இந்த #சப்பாத்தி சாப்பிடுற கலாச்சாரம் உருவாச்சு ??
1980கள் ல உடல் பருமனும், நீரிழிவு நோயும் தலை தூக்க ஆரம்பிச்சதும்,மக்கள் மேற்கொண்ட உணவு முறை தான் இந்த சப்பாத்தி.
அதாவது நம்ம வீடு இருக்கு...அதுல பாயோ, வெறும்தரையிலோ படுத்து தூங்குறப்ப ஜம்முன்னு தூங்குவோம்..ஏன்னா நமக்கு பழக்கப்பட்ட இடம்.
இதுவே வேற யார் வீட்டுலயோ நமக்கு நம்ம பஞ்சு மெத்தையே குடுத்தாலும் தூக்கம் வராது.
அதே கான்செப்ட் தான் இங்கேயும்...
ரொம்ப நாளா அரிசி சோறே சாப்பிட மக்களுக்கு, சப்பாத்தி ன்னு ஒன்னு குடுத்தா கம்மியா அளவோட சாப்பிடுவாங்க ன்னு அறிமுகம் செய்யப்பட்டது தான் இந்த சப்பாத்தி கலாச்சாரம்...ஆனா நம்ம ஆளுங்க வட இந்தியர்களை காட்டிலும் 10-12 சப்பாத்தி ன்னு வெளுத்து வாங்குராங்க.
சப்பாத்தி ன்னு சொன்னதும் நமக்கு யார் நியாபகம் வருகிறது தெரியுமா???
அதே தான்.."பஞ்சாபிசிங் ஹே".
பஞ்சாபி ல இருக்க சிங் எல்லாருக்கும் சப்பாத்தி தான் நமக்கு அரிசி மாதிரி.
ஆனா விஷயம் தெரியுமா பாஸ்....இந்தியாவிலேயே அதிக உடல் பருமனால் அவதிப்படும் மாநிலம் நம்ம சிங் சகோஸ் இருக்க #பஞ்சாப் தான்.
அப்புறம், இந்த சப்பாத்தி ல #GLUTEN ன்னு ஒரு பொருள் இருக்கு...ரொம்ப #கெடுதல் உடலுக்கு...வயிறு சம்மந்தப்பட்ட கெடுதல்கள், #Celiac Disease, #Leaky Gut Syndrome,மூட்டு சம்மந்தப்பட்ட #Reactive Arthritis ன்னு சகலத்தையும் வர வெச்சிடும் இந்த Gluten.
சொல்லப்போனா இட்லி சாப்பிடுறவன விட 4 சப்பாத்தி சாப்பிடுறவனுக்கு தான் உடல் நிலை பாதிக்கும்...சுகர் ஏறும். மூட்டு வலி, வயிற்றுப்போக்கு ன்னு எல்லாம் வரும்.
குறைவான மாவுச்சத்து மட்டும் தான் ஆரோக்கியமான வாழ்வியலுக்கு திறவுகோல். சப்பாத்தில அது இல்லவே இல்லை.
அதனால சப்பாத்தி வெறும் சப்பை தான்....

இப்படித்தான் மனம் இயங்குகிறது .

 எகிப்து தேசத்திலுள்ள அலெக்சாண்ட்ரியா நகரத்தின் பிரம்மாண்டமான நூலகம் தீக்கிரையான கதை நமக்குத் தெரியும்

ஒரே ஒரு புத்தகம்தான் அந்த விபத்தில் காப்பாற்றப்பட்டது
அதை ஒரு குடியானவன் சில செப்பு நாணயங்கள் கொடுத்து விலைக்கு வாங்கினான்
அதன் பக்கங்களுக்கிடையே ஒரு பட்டுத் துணி இருந்தது
அதில் ஒரு உரைகல் பற்றிய ரகசியம் எழுதி வைக்கப்பட்டிருந்தது
அந்த உரைகல் ஒரு சிறிய கூழாங்கல் என்றும்
அதன் மீது எந்த உலோகப் பொருளை வைத்து உரசினாலும்
அது பொன்னாக மாறிவிடுமென்றும் எழுதப்பட்டிருந்தது
அந்த அற்புத உரைகல் கருங்கடலின் கரையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது
அங்கே ஆயிரக்கணக்கான கூழாங்கற்கள் கிடக்குமென்றும்
அந்தக் கூழாங்கற்கள் அனைத்தும் சில்லென்று இருக்குமென்றும்
அற்புத உரைகல்லோ வெதுவெதுப்பாக இருக்குமென்றும்
அந்தக் குறிப்பு கூறியது
அந்தக் குறிப்பைப் படித்த குடியானவன்
தனது சில உடைமைகளை விற்றான்
கருங்கடலின் கரையில் தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டான்
கருங்கடலின் கரையில் முகாமிட்டுக் கூழாங்கற்களைப் பொறுக்கி பரிசோதிக்கத் தொடங்கினான்
கூழாங்கல்லை எடுத்துப் பார்க்கும்போது
சாதாரண கூழாங்கல் என்று தெரிந்துகொண்ட பிறகு
அதை கீழே போட்டுவிட்டால்
திரும்பத் திரும்ப கூழாங்கற்களைப் பரிசோதித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும்
அற்புதக் கூழாங்கல்லைக் கண்டுபிடிப்பது சிரமமாகிவிடும் என்பதால்
சாதாரண கூழாங்கற்களைக் கடலில் எறிந்துவிடலாம் என்று திட்டமிட்டான்
கூழாங்கற்களைப் பொறுக்கத் தொடங்கினான்
இப்படியாக நாட்கள் கழிந்தன
வாரங்கள் ஆகின
மாதங்கள் ஆகின
மூன்று வருடங்களைக் கடந்தும்
அற்புத உரைகல்லை தேடியபடி இருந்தான்
குளிர்ச்சியாக இருக்கும் சாதாரண கூழாங்கற்களை
காலை முதல் மாலை வரை எறிந்துகொண்டே இருந்தான்
ஒரு நாள் காலையில் அவன் ஒரு கூழாங்கல்லை எடுத்தபோது
அது வெதுவெதுப்பாக இருந்தது
ஆனால்
திரும்பத் திரும்ப ஏமாந்துபோய் கடலில் எறியும் பழக்கம் அவனுக்கு இருந்ததால்
அற்புத உரைகல்லைக் கண்டுகொண்டதை உணராமல்
அதையும் தூக்கிக் கடலில் எறிந்துவிட்டான்
பழக்கம்தான் அவனை அந்த அற்புதக் கல்லைக் கடலில் தூக்கியெறியச் செய்துவிட்டது
இப்படித்தான் மனம் இயங்குகிறது
நம்பிக்கை என்பது அந்த அற்புத உரைகல் தான்
மிக அரிதாகவே நம்பிக்கையான ஒரு மனிதரை நாம் காண்கிறோம்
வெகு அரிதாகவே அன்பான ஒரு இதயத்தை நாம் பார்க்கிறோம்
அன்றாடம் நாம் சாதாரண கூழாங்கற்களையே அதிகம் பார்க்கிறோம்
அவையெல்லாம் சில்லென்று குளிர்ந்து இருக்கின்றன........

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 *திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்யை சுற்றி உள்ள பகுதிகளில் விதிகளை மீறி சட்ட விரோதமாக கோயிலை சுற்றி 1 கிலோமீட்டர் தூரம் சுற்றளவில் 9 மீட்டர் உயரதிற்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டிங்களை அகற்ற கோரிய வழக்கு*

*கோவில் அருகில் உள்ள இடங்களில் 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி ? - நீதிபதிகள் கேள்வி*
*வழக்கு குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் ,திருச்சி நகர திட்டமிடல் இணை இயக்குனர் மற்றும்,கோயில் இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு*
குளிதலையை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்துயிருந்தார்,
அதில்"தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டங்களை கட்ட கூடாது, என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்யை சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி உள்ளனர். 1997 ஆம் ஆண்டு அரசாணை படி கோயில்யை சுற்றி 1 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள கட்டிடங்கள் 9 மீட்டர் உயரதிற்கு மேல் கட்டிடங்கள் கட்ட கூடாது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கோயில்யில் இருந்து 100 மீட்டர்க்குள் கட்டப்பட்டுள்ளது.கோயில் அருகே அமைந்துள்ள உத்தர வீதி ,சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது, விதிமீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற கோரி மனுவில் கூறிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிபதிகள்
கோவில் அருகில் உள்ள இடங்களில் 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி எனக் கேள்வி எழுப்பினார் இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கில் திருச்சி மாநகராட்சி ஆணையர் திருச்சி நகர திட்டமிடல் இணை இயக்குனர் மற்றும் ஸ்ரீரங்க அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உ.பி முதல்வர் பற்றி தெரியாத சில தகவல்கள்.

 அவர் எப்பொழுதும் காவி உடை அணிந்த ஒரு "சன்னியாசி" என்று பலரைப் போலவே நானும் நினைத்தேன்

ஆனால் அவரைப் பற்றிய உண்மைகளை அறிய கீழே படிக்கவும்.
1. மோகன் பிஷ்ட் மாற்றுப்பெயர் யோகி ஆதித்யநாத்
2. உத்தரபிரதேச வரலாற்றில் H.N.B கர்வால் பல்கலைக்கழகத்தில் (100%) அதிக மதிப்பெண்கள்
3. பி.எஸ்.சி கணிதத்தில் தங்கப் பதக்கத்துடன் தேர்ச்சி பெற்ற கணித மாணவர் ஆவார்
4. உ.பி.யில் உள்ள பின்தங்கிய பஞ்சூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் 1973ல் பிறந்தார். அவருக்கு இப்போது 49 வயதாகிறது
5. இந்திய ராணுவத்தின் பழமையான கோர்க்கா படைப்பிரிவின் ஆன்மீக குரு
6. யோகி பிரதமரானால் நேபாளம் இந்தியாவுடன் இணையும் என நேபாள செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன
நேபாளத்தில் மாபெரும் யோகி சார்பு ஆர்ப்பாட்டங்கள்
7. தற்காப்புக் கலைகளில் அற்புதமான திறமை
8. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிரபல நீச்சல் வீரர்
9. கம்ப்யூட்டரைக் கூட அடிக்கும் கணக்கு நிபுணர் சகுந்தலா தேவி கூட யோகியைப் புகழ்ந்திருக்கிறார்!
10. இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கம். தினமும் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்தருளும் யோகிக்கு யோகாசனமும் உண்டு
11. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவார்.. முற்றிலும் சைவம்
12. அவர் இதுவரை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனையில் சேர்ந்ததில்லை
13. யோகி ஆதித்ய நாத் ஆசியாவிலேயே சிறந்த வனவிலங்கு பயிற்சியாளர்களில் ஒருவர்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...