Thursday, December 1, 2022

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

 *திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்யை சுற்றி உள்ள பகுதிகளில் விதிகளை மீறி சட்ட விரோதமாக கோயிலை சுற்றி 1 கிலோமீட்டர் தூரம் சுற்றளவில் 9 மீட்டர் உயரதிற்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டிங்களை அகற்ற கோரிய வழக்கு*

*கோவில் அருகில் உள்ள இடங்களில் 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி ? - நீதிபதிகள் கேள்வி*
*வழக்கு குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் ,திருச்சி நகர திட்டமிடல் இணை இயக்குனர் மற்றும்,கோயில் இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு*
குளிதலையை சேர்ந்த மகுடேஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்துயிருந்தார்,
அதில்"தமிழகத்தில் பழமையான கோவில்கள், கோபுரங்கள் உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டங்களை கட்ட கூடாது, என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்யை சுற்றி உள்ள பகுதிகளில் அரசாணையை மதிக்காமல் சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டி உள்ளனர். 1997 ஆம் ஆண்டு அரசாணை படி கோயில்யை சுற்றி 1 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள கட்டிடங்கள் 9 மீட்டர் உயரதிற்கு மேல் கட்டிடங்கள் கட்ட கூடாது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசாணையை மீறி அப்பகுதியில் 73 கட்டிடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கோயில்யில் இருந்து 100 மீட்டர்க்குள் கட்டப்பட்டுள்ளது.கோயில் அருகே அமைந்துள்ள உத்தர வீதி ,சித்திர வீதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது, விதிமீறி கட்டபட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அகற்ற கோரி மனுவில் கூறிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது
அப்போது நீதிபதிகள்
கோவில் அருகில் உள்ள இடங்களில் 9 மீட்டர் உயரத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி எனக் கேள்வி எழுப்பினார் இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கில் திருச்சி மாநகராட்சி ஆணையர் திருச்சி நகர திட்டமிடல் இணை இயக்குனர் மற்றும் ஸ்ரீரங்க அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...