Wednesday, November 1, 2023

ஒரு விரல் கிருஷ்ணராவ்.

 கோடம்பாக்கம் சந்திர பவன் ஹோட்டலுக்குள் நான் நுழையும்போது இரவு மணி எட்டு இருக்கும்.

நான் சொல்லும் 'சந்திர பவன்' டிரஸ்ட்புரம் சிக்னல் பக்கத்தில் இருக்கிறது.
1980 களில் அடிக்கடி அங்கே போய் சாப்பிடுவது வழக்கம்.
அது நான் சென்னைக்கு வந்த புதிது. கோடம்பாக்கம் லிபர்டி பக்கத்தில் ஒரு விடுதியில் தங்கி இருந்தேன்.
இரவு ஏழு மணிக்கு அறையிலிருந்து வெளியே புறப்படுவேன். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய காரணம் இருக்கிறது.
அந்த நேரத்தில் கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் நடந்து சென்றால், காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் நிறைய சினிமா நடிக நடிகையரை பார்க்கலாம்.
ஷூட்டிங் முடிந்து திரும்பிக் கொண்டிருப்பார்கள். இப்போது மாதிரி கார் பக்கவாட்டு கண்ணாடியை கருப்பு ஃபிலிம் கொண்டு மறைக்கும் வழக்கமெல்லாம் 80 களில் இல்லை.
டிராபிக்கில் ஊர்ந்து செல்லும் ஒவ்வொரு காரையும் உற்று நோக்கினால் மேக்கப் கலைக்காத நட்சத்திர முகங்களை நிறையவே பார்க்கலாம்.
ஸ்ரீபிரியா, லதா, தேங்காய் சீனிவாசன், படாபட் ஜெயலட்சுமி, கே.ஆர். விஜயா,
ராதிகா.
ஆனாலும் காரில் செல்லும் அந்த நட்சத்திரங்கள், முடிந்தவரை நம்மை பார்த்தும் பார்க்காதது போலவே போவார்கள்.
இருந்தாலும் கூட இந்த பட்டிக்காட்டானுக்கு அது மிட்டாய் கடையை பார்ப்பது போன்ற ஒரு திருப்தி. அவ்வளவுதான்.
அன்றும் அப்படித்தான் கோடம்பாக்கம் ரோட்டில் நடந்து போய் டிரஸ்ட்புரம் சந்திர பவன் வாசல் வரைக்கும் வந்து விட்டேன்.
என்ன காரணமோ தெரியவில்லை. ஒரு நட்சத்திரம் கூட அன்று கண்ணில் படவே இல்லை.
சரி. சந்திர பவனுக்குள் நுழைந்து சாப்பிட்டு விட்டு ரூமுக்கு போய் படுக்கலாம் என நினைத்த அந்த நொடியில்தான் அந்த பளிச்சென்ற பச்சை கலர் காரைப் பார்த்தேன்.
உள்ளே அதை விட பளிச்சென்று ஜெயமாலினி.
கார் சற்றே டிராபிக்கில் திணறி நகர, ரோட்டோரம் நின்ற நிறைய பேர் கண்களில் மின்னலடிக்க ஆரம்பித்தது.
"ஏய், ஜெயமாலினி போகுதுப்பா."
ஒரு சிலர் காரைப் பார்த்து கைகளை ஆட்டினார்கள். ஜெயமாலினியோ கண்கள் கட்டி விடப்பட்ட குதிரையை போல, பக்கவாட்டில் திரும்பிப் பார்க்காமல், காரின்முன்புற கண்ணாடியையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். இம்மியேனும் எங்கள் பக்கம்
திரும்பிப் பார்க்கவில்லை.
சர்ரென்று வேகம் பெற்ற கார் எங்கள் கண்களிலிருந்து மறைந்தது.
ஆனாலும் எங்களில் பலர் Enlightenment, அதாவது
'ஜீவன் முக்தி' பெற்று விட்ட முழு திருப்தியோடு அங்கிருந்து மெல்ல நகர ஆரம்பித்தோம்.
நானும் அந்த சந்தோஷ பரவசத்தோடுதான் சந்திர பவனுக்குள் நுழைந்தேன்.
சர்வர் வழக்கம் போல தண்ணீர் கொண்டு வந்து வைக்க, நானும் வழக்கம் போல தோசையை சொல்ல,
அப்போதுதான் வழக்கத்துக்கு மாறான அந்த நபர் ஹோட்டல் வாசலில் வந்து நின்றார்.
எனக்கு சற்றே அதிர்ச்சி.
பல நாட்கள் நானும் சந்திர பவன் வந்து போய்க் கொண்டிருக்கிறேன்; ஒரு நாளும் ஒரு சினிமா நட்சத்திரமும் அந்த ஹோட்டல் உள்ளே வந்து நான் பார்த்ததில்லை. காரணம் அது ஒன்றும் அவ்வளவு பெரிய ஹோட்டல் அல்ல. சாதாரண சராசரி ஹோட்டல்தான்.
அன்று உள்ளே வந்தவரும் ஒன்றும் பிரபல நட்சத்திரம் அல்ல.
ஒரு விரல் கிருஷ்ணராவ்.
ஒரு சில படங்களில் நீங்கள் அவரைப் பார்த்திருக்கலாம். சின்னத்தம்பியில் கூட கவுண்டமணிக்கு மாமனாராக வருவார்.
அந்த ஒரு விரல் கிருஷ்ணராவ்தான் சந்திர பவன் ஹோட்டல் வாசலில் வந்து சற்றே தயங்கி நின்றார்.
மிகுந்த களைப்புடன் காணப்பட்டார்.
மேக்கப் எதுவும் இல்லாமல் சாதாரணமாக நின்றிருந்த அவரை யாரும் கவனிக்கவோ கண்டு கொள்ளவோ இல்லை. நான் மட்டும் கண் இமைக்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
மெல்ல அடியெடுத்து ஹோட்டலுக்குள் வந்த கிருஷ்ணாராவ், ஓரமாக நின்று கொண்டிருந்த சர்வர் ஒருவருக்கு பக்கத்தில் போனார். குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என சைகை காட்டினார்.
அந்த சர்வர் கொஞ்சமும் சலனம் இல்லாமல் ஒரு டேபிளிலிருந்த ஜக்கை நோக்கி கை காட்டினார். போய் எடுத்து குடிச்சுக்கோ என்பது போல சைகை செய்தார்.
கிருஷ்ணாராவ் அந்த டேபிள் அருகே போய் ஜக்கை எடுத்தார். ஆனால் ஊற்றி குடிக்க டம்ளர் எதுவும் அங்கே இல்லை.
பக்கத்து டேபிளை பார்த்தார். அதில் ஆட்கள் சாப்பிட்டுக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தார்கள்.
மீண்டும் சுற்றிலும் ஒரு பரிதாப பார்வை.
நான் இன்னமும் அவரையேதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.
கிருஷ்ணாராவ் இப்போது என்னை கவனித்து விட்டார்.
தன்னையும் ஒருவன் உற்று நோக்குவது, அந்த கலைஞனுக்கு மிகப் பெரும் உற்சாகத்தை தந்திருக்க வேண்டும். வேகமாக என் டேபிள் அருகே வந்தார். மெலிதாக புன்னகை செய்தார்.
என் முன் இருந்த நீர் நிரம்பிய டம்ளரை கை காட்டி குடிக்கலாமா என சைகையில் கேட்க, நான் சம்மதித்து தலை அசைத்தேன். வேக வேகமாக எடுத்து மடக் மடக் என குடித்தார். காலியானவுடன் மீண்டும் ஜக்கில் இருந்து நிரப்பி அதையும் குடித்தார். அவர் மிகுந்த தாகத்தோடு இருந்திருக்க வேண்டும்.
குடித்து முடித்து டம்ளரை என் டேபிளின் ஒரு ஓரமாக வைத்தார். நீர் வழிந்த உதடுகளை கையால் அழுத்தி துடைத்துக் கொண்டே நன்றிப் புன்னகை செய்து நகர்ந்தார்.
எவரையும் திரும்பிப் பார்க்காமல் ஹோட்டலுக்கு வெளியே போய் கோடம்பாக்கம் சாலையில் இருளுக்குள் நடந்து
மக்களோடு மக்களாக கலந்து மறைந்தார்.
என் டேபிளுக்கு இப்போது மசால் தோசை வந்து சுட சுட காத்திருந்தது. ஆனால் நான் அதை சாப்பிடாமல் ஒரு விரல் கிருஷ்ணாராவ் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு ஏனோ மனம் உறுத்தியது.
அவரையும் உடன் அமர வைத்து உணவருந்த சொல்லி இருக்கலாமோ..!
அல்லது
அட்லீஸ்ட் அந்த கலைஞனை பாராட்டி ஒரே ஒரு வார்த்தையாவது பேசி அனுப்பி இருக்கலாமே !
அந்த அங்கீகாரம் அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் ?
ஆம். ஒரு சின்னஞ்சிறு குழந்தை கூட தான் ஒரு ஓவியத்தை கிறுக்கி விட்டால், ஒரு பொம்மையை செய்து விட்டால், எவ்வளவு ஆர்வமாக மற்றவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏங்குகிறது ?
ஒரு குழந்தையே அங்கீகாரத்திற்காக ஏங்கும்போது, ஒரு விரல் கிருஷ்ணாராவுக்கு மட்டும் அந்த ஏக்கம் இருக்காதா என்ன ?
மற்றவர்கள் அவரை கண்டு கொள்ளாமல் இருந்தது போல, நானும் அன்று அப்படி அமைதியாக இருந்திருக்க கூடாது.
இனி நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த சந்திர பவன் சம்பவத்திற்கு பிறகுதான் நானாக தேடிச் சென்று மற்ற கலைஞர்களை, அவர்கள் பிரபலமானவர்களாக இருந்தாலும், பிரபலம் ஆகாதவர்களாக இருந்தாலும், பாராட்டி ஒரு சில வார்த்தைகள் பேச ஆரம்பித்தேன்.
ஆம்.
மற்றவர்களின் அங்கீகாரம் ஒருவருக்கு தரும் அந்த மன நிறைவான சந்தோஷம்.
அதற்கு ஈடு இணை,
இந்த அகில உலகத்தில் வேறு எதுவும் இல்லவே இல்லை.
இன்று முதல் இயன்றவரை
எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பார்ப்போம்.
சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதானே !
Courtesy:-
Prashantha Kumar
விரும்பிக் கேட்டவை 🙏
May be an image of 1 person
All reactions:

காமராஜ் #காலத்தில் #இழந்த #ஆட்சியை #மீட்க....#காங்கிரஸ் #செய்யவேண்டிய #முதல் #வேலை #இது.!

 கோவில்களை அறநிலையத்துறையிடம் இருந்து மீட்டு

இந்து மடாலயங்களுக்கே கொடுப்போம் என காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும்....
(மடாலயங்கள் என்றவுடன் மோடிக்கு செங்கோல் கொடுத்த ரெண்டல் மென்ட்டல்களை நினைத்துக் கொள்ளாதீர்கள்...
நல்லவர்கள் கோடிபேர் இருக்கிறார்கள்.
கமர்ஷியல் களைகளின் பெருவளர்ச்சியில் நல்ல பயிர்கள் வெளியே தெரிவதில்லை.)
அப்படி அறிவிக்கும் கட்சியுடன்தான் நாம் கூட்டணியும் சேரவேண்டும்...
கோவில் நிலங்கள் தொடர்ப்பான சட்ட சர்ச்சை வர ஆரம்பித்திருக்கின்றது
அறநிலைய துறையினை ஒழித்து இந்து ஆலயங்களை ஊர் மக்களிடமே ஒப்படைக்கும் கட்சிக்கே வோட்டு என இந்துக்கள் கிளம்பினால் தவிர இந்த சிக்கலுக்கு தீர்வு இல்லை
இங்கு ஆலயங்களை அறநிலைய துறை கட்டவில்லை, அவை வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தில் அப்படி ஒரு துறையே இல்லை
பன்னெடுங்காலமாக ஆலயங்கள் உற்சாகமாக இயங்கி வந்த நிலையில் அவற்றுக்கு போடபட்ட ஒருவகை விலங்கே இந்த அறநிலையதுறை,
இதனால் ஆலயங்கள் இழந்ததே அதிகம் தவிர பெற்றது என எதுவுமில்லை
அந்த துறை இங்கு தேவையே இல்லாத பூட்டு, அதை உடைத்தொழிக்காதவரை இங்கு எதுவும் மாறபோவதில்லை!
All reactions:

ஒப்புதல் வாக்குமூலம் நீட்டின் சிறப்பு க்கு.

 சமீபத்தில் தயாநிதி மாறன் பேசிய ஒரு மேடைப்பேச்சு சமூக வலைத்தளங்களில் பார்க்க நேர்ந்தது. அதில் அவர் " தாத்தா திரு மு கருணாநிதி, மாமா திரு மு க ஸ்டாலின், தந்தை திரு முரசொலி மாறன், நான் அமைச்சராக இருந்த பொழுது, மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்திருக்கிறோம் ( நீட் வருவதற்கு முன்னால்) " என்று சொல்லி இருக்கிறார்.

இதிலிருந்து தெரியவில்லையா இவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வேண்டியவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் என்று. இத்தகைய அதிகார துஷ்பியோகத்தினால் தகுதி படைத்த சில மாணவர்கள் சீட் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள்.
இதை புரிந்து கொள்ளாதவர்கள் முட்டாள்கள்.

தோட்டம் என்றாலே ராமாபுரம்தான்…!

 " இந்த இராமாபுரம் சுற்று வட்டாரத்தில் “தோட்டத்துப் பக்கம் போனேன் தோட்டத்தில் இருந்து வர்றேன்” என்ற சொல்லைப் பயன்படுத்தினாலே அது இந்தத் தோட்டத்தைக் குறிப்பதாகத்தான் இருக்கும்.

அந்த அளவிற்கு என் அன்பு நாயகரால் இது பெருமை பெற்றது என்பது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும்.
அவர் வாழ்ந்த இந்தத் தோட்டம் முதலில் பசுமை நிறைந்த பண்ணையாகப் பராமரிக்கவே உருவாக்கப்பட்டது. இப்போது இருக்கிற இந்த வீடு அந்தக் காலத்தில் கிடையாது. அவ்வப்போது ஏற்பட்ட தேவைக்குத் தக்கபடி உருவானதுதான் இந்த வீடு.
ஏறக்குறைய முப்பத்தைந்து ஆயிரம் ரூபாய்க்கு இந்த இடத்தை ஒருகாலத்தில் வாங்கியதாக நினைவு…
இந்த வீடு கட்டத் தொடங்கிய காலத்தில் அவர் நடிப்புலகில் சக்கரவர்த்தி. நானோ இந்த வீட்டுச் சமையலையும், வருகிற விருந்தினரையும் கவனித்துக் கொண்டிருப்பேன்.
இந்த வீட்டைத் திட்டமிட்டுக் கட்டுகிற முயற்சியும் இல்லை, அதற்கு நேரமும் அப்போது இல்லை.
இந்த வீட்டில் பெரிய டாம்பீகம். கவர்ச்சி, ஆடம்பரம் இதெல்லாம் இருக்காது.. தேவைகளுக்கேற்ப சில வசதிகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டது உண்டு. அவ்வளவே.
பழமையான பொருட்கள் எதையும் அவர் அழிக்கவோ, இழக்கவோ, அப்புறப்படுத்தவோ விரும்ப மாட்டார். அப்படி இந்த வீட்டில் மிகப் பழமையான, ரேடியோ, கார் போன்றவைகள் இப்போதும் இருக்கின்றன.
இந்தத் தோட்டத்தில் ஏறக்குறைய 150 இலைகளுக்கான சாப்பாடு எனது அன்பு நாயகர் இருந்த காலத்தில் நாள்தோறும் எப்போதும் தயாராக இருக்கும். இன்றைக்கும் அந்த நிலையில் மாற்றமில்லை.
படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த வீட்டு தோட்டத்தில் இருக்கிற நீச்சல் குளத்தில் விடியற்காலையில் எழுந்து நீந்திக் கொண்டிருப்பார்.
மூகாம்பிகை படமும் முருகன் படமும் கொண்ட இவரது இரண்டாவது மாடி படுக்கை அறையில் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்குக் குறையாமல் இடுப்பில் ஈரத்துண்டோடு கண்களை மூடி இவர் தியானம் செய்வதை நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களானால் கண்களும் மனமும் கனக்கும்.
இதே அறையில்தான் பெரும்பாலும் எங்கள் இருவருக்கும் இரவு சாப்பாடு அதிலும் ஒரே தட்டுதான்.
இவ்வளவு பெரிய தோட்டத்தில் நான் அவரைப் பிரிந்து எப்படி இருக்க முடிகிறது? நான் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக என் மனதில் தோன்றுகிற பொழுதெல்லாம் அவரை நினைத்துப் பிரார்த்திக்கிறேன்.
அவரது நினைவுதான் என் நெஞ்சில் இருக்கிற நித்திய பலம், அவரது கடைசி சில ஆண்டுகள் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்த ஆண்டுகள்.
ஒவ்வொரு நொடியும் அவரோடேயே இருந்தேன். அந்த நெருக்கம் இப்போதும் இருப்பதாக ஒரு பிரமை, அதுவே எனது பலம்.
ஜூன் 14 எங்களது திருமண நாள். அதை ஒவ்வொரு ஆண்டும் நினைவு வைத்துக் கொண்டிருந்து கடைசி வரை கொண்டாடத் தவறியதில்லை.
கோபம் இருக்கிற இடத்தில் குணம் இருக்கும் என்பார்களே அது மாதிரி அவர் நடந்து கொள்கிறவர்தான். அது ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய பிறவிக் குணம்.
குழந்தை உள்ளம் கொண்ட இந்த நல்ல மனிதர் என்னிடம் கோபம் கொண்டதுண்டு. அடுத்த நொடியே அது போன இடம் தெரியாமல் மறைந்து போனதும் உண்டு.
எனக்கு வயது இப்போது அறுபத்தி நாலு.. என் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது? நான் பிரார்த்திக்கிறேன். எனது அன்பு நாயகரோடு வாழ்ந்த காலங்களை திரும்பிப் பார்க்கிறேன்… சில நேரங்களில் குழந்தைகளோடு குதூகலிக்கிறேன்…
எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உச்சரிக்கிற அந்த மூன்றெழுத்து நாமாவளி என் மனசுக்குள்ளும் நுழைந்து எனது மூச்சில் இழையோடிக் கொண்டிருக்கிறது. இப்போதும் இவரை நினைக்கிறேன். இதற்கு நேரம், காலம், மணி இதெல்லாம் எதுவும் கிடையாது."
எனக்கு மட்டுமே தெரிந்த எம் ஜி ஆர்
ஜானகி எம் ஜி ஆர் தொடர்!
தாய் இதழ்
May be an image of 2 people and people smiling
All reaction

திரும்பி வராத சந்தோஷத் தருணங்கள்!

ரஜினியின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இயக்குனர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’.
தொடர்ந்து ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ என்று மகேந்திரனுடைய பல படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் இயக்குனர் மகேந்திரனை ரஜினிக்கு மிக நெருக்கமாக்கிய படம் முள்ளும் மலரும்.
அந்தப் படத்தில் வரும் ‘காளி’ கதாபாத்திரம் ரஜினியின் வாழ்நாள் ‘ஃபேவரட்’.
அதன் படப்பிடிப்பு நடந்தபோது ரஜினி சரத்பாபு இயக்குனர் மகேந்திரன் மற்றும் சோபாவுடன் கேஷுவலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இது.

May be an image of 4 people and cablecar
All reactions:

மனசுல தோணல...

 150கோடி மதிப்புள்ள மனை,

அதில் 28கோடி மதிப்பில் வீடு,
வீட்டின் வாசலில் பிள்ளையார்...
16கோடி மதிப்புள்ள ஆடம்பரமான 6கார்கள்...
இது ஒரு பிள்ளைக்கு மட்டுமே
இதுபோல் சிவக்குமார் மகள் மகன்களுக்கு 10ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து...
இவுங்க இப்படி வாழ்ந்து கொண்டு தஞ்சை ராஜராஜன் கட்டுன கோவிலுக்கு பதிலாக ஆஸ்பத்திரி காட்டியிருக்கலாம் என்று பேச வேண்டியது
இந்த பென்ஸ்கார் வாங்கின காசுலேயாவது சின்னதா ஒரு ஆஸ்பத்திரியை கட்டி மக்களுக்கு இலவசமா வைத்தியம் பார்த்திருக்கலாம்..ஏம்மா ஜோதிகா உன் மாமனாருக்கு சொல்லியிருக்கலாமே!!
May be an image of 1 person and car
All reactions

*தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள்...!*

 இப்படி செய்வதால் நமக்கு குபேரரின் அருள் கிடைத்து குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்சினை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.

*குபேர திரி ( பெரிய தும்பை இலை)*
குபேர திரி என்பது பெரிய தும்பையின் இலை. அதைத்தான் நாம் திரியாக பயன்படுத்துகிறோம். இந்த திரிக்கு அதிக விதமான சக்திகள் உண்டு. பச்சை இலையை திரியாக பயன்படுத்தினால் எரியக்கூடியது. தும்பை என்றால் "துன்பம்" என்று பொருள். அதனால் இதில் விளக்கு எற்றினால் :
🔥குடும்பத்தில் சந்தோஷம் பெருகம்
🔥நோய்களை குணமாக்கும்
🔥செல்வம் அதிகரிக்கும்
🔥கண் திருஷ்டி நீங்கும்
🔥நேர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
*தாமரை நார் திரி / தாமரை தண்டு திரி*
தாமரை நார் திரி அதாவது தாமரை மலர்களின் தண்டை உலர்த்தி, காய வைத்து விளக்கில் திரியாக போட்டு ஏற்றி வர வாழ்வின் செல்வ நிலை உயரும். உங்களுடைய முந்தைய பிறவிகளின் பாவங்கள் அனைத்தையும் போக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால் உங்களுக்கு இந்த வழி உதவியாக இருக்கும். தாமரை தண்டை திரி போல கத்தரித்து காயவைத்து அதில் நெய்தீபம் ஏற்றவும். இதில் விளக்கு ஏற்றுவதால் லட்சுமியின் பூரண அருள் கிடைக்கும்.
*வாழை திரி*
வாழைத்தண்டை கொண்டு திரி செய்து அதன் மூலம் விளக்கேற்றுவது நீங்கள் உங்களுக்கே தெரியாமல் செய்த தவறுகளுக்கு உங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பை பெற்றுத்தரும். இதுமட்டுமின்றி உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு அளித்த சாபங்களை நீக்கும்.
May be a doodle
All reactions

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...