Tuesday, August 29, 2017

வெட்கம்! வெட்கம்!!

➖➖➖➖➖➖➖➖
✔தமிழகம் மட்டும் தனி நாடாக இருந்திருந்தால் ஆறாவது வல்லரசு என்று பொருளாதார மேதை புகழ்ந்துரைத்த தமிழகத்திற்கு "பொறுப்பே இல்லாத ஒரு பொறுப்பு ஆளுநர்" என்ன ஒரு உதாசீனம்?
✔ஒரு மாநில ஆளுநரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் என்று தெரியாமல் இருந்ததா பிஜேபி அரசு.பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே தயாராக இருக்க வேண்டாமா?
✔ஓராண்டு முடிவடையப் போகிறது இன்னும் ஒரு நிரந்தர ஆளுநரை நியமிக்க வில்லை.
நிரந்தர ஆளுநரை நியமித்தால் சுயமாக செயல்படுவார்.நாம் நினைத்ததை நிறைவேற்ற தடையாக இருப்பார் என்று பிஜேபி அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகிறதா?
✔இல்லை உங்கள் லட்சணத்திற்கு இதுவே போதுமென்ற ஏளனமா?
✔இந்தியப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான மாநிலத்தை இவ்வளவு துச்சமாக நடத்துவது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அவமானம் இல்லையா?
✔இதை எதிர்த்து கேட்பதற்கு வழி இல்லையா?
இல்லை எதிர்த்து கேட்டும் வரவில்லையா?
வர வைக்கும் அளவிற்கு யாருக்கும் அறிவில்லையா?
✔ஆண்ட பரம்பரை,ஆண்ட பரம்பரை என்று அடித்தட்டு மக்களிடம் கூவிக் கொண்டு திரியும் குள்ள நரிகளே!?
✔ராஜ பரிபாலனம் உங்கள் ரத்தத்தில் இருந்து இருந்தால், இப்படி காலைப் பிடித்துக் கொண்டு கதறுவது ஏன்?
✔"வீரனுக்கு விழி மூடிய தினம் மட்டும் சாவு"
"கோழைக்கு விழித்திருக்கும் நேரம் எல்லாம் சாவு"
✔கோழைகளே!
ஓலை கொண்டு வந்தால் தான் ஒற்றனைக் கூட கோட்டைக்குள் விடுவார்கள்!
உங்களுக்கு சேலை கொண்டு வந்தவனை எதற்குடா செயின் ஜார்ஜ் கோட்டைக்குள் விட்டீர்கள்?
✔நக்கிப் பிழைக்கும் நாய் கூட தன் வீட்டிற்குள் வேறொரு நாயை விடாதேடா!
✔உங்களுக்கெல்லாம் பதவி ஒரு கேடா!?
✔நிலையில்லாத அரசு!
நிறையில்லாத அரசாங்கம்!
வெட்கம்! வெட்கம்!!
✔மனிதனின் வாழ்க்கை ஒரு சக்கரம் என்பார்கள்.ஆனால் ஒரு மாநிலத்தின் வாழ்க்கையே ஒரு சக்கரத்தில் தான் ஓடிக்கொண்டு இருந்து இருக்கிறது.
✔ஆம்!
என் தலைவனின் சக்கர நாற்காலி என்று நின்றதோ?
தமிழகத்தின் வளர்ச்சியும் அன்றே நின்று விட்டது!
தமிழனின் மானமும் பறந்து சென்று விட்டது!
✔ஒன்று என் தலைவனிடம் அரசியல் பழகிக் கொள்ளுங்கள்!
இல்லை அரசியலை விட்டே அனைவரும் விலகிக் கொள்ளுங்கள்!படித்து நொந்துபோனேன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்...



இன்சுலின் சாலட் சாப்பிடுங்க... இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும்... இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது.
இன்சுலின் சாலட்!
தேவையானவை: இன்சுலின் செடி இலை - 1, ஊறவைத்த வெந்தயம் - 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.)
Image may contain: plant, sky and outdoor
செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த வெந்தய நீரைக் குடிக்க வேண்டும். காபி, டீ குடிக்கக் கூடாது.
பலன்கள்
இன்சுலின் செடியின் பெயர் கோஸ்டம் (Kostum) வீட்டில் செடி வளர்க்க முடியாதவர்கள், நாட்டுமருந்துக் கடையில் வாங்கிக்கொள்ளலாம்.
இதில் உள்ள கோரிக் ஆசிட், கணையத்தின் பீட்டா செல்களைத் தூண்டும். இன்சுலின் சுரக்க உதவும்.
வெந்தயம், நார்ச்சத்து நிறைந்தது. கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. இதயத்துக்கு நல்லது. மலச்சிக்கல் தீரும்.
சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

நீரிழிவு.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் உடற்பருமன் உடையவர்கள் அதிகரித்ததைப்போல நீரிழிவு நோயாளிகளும் குறிப்பிடும்வண்ணம் அதிகரித்துள்ளனர். தோராயமாக 1985-ஆம் ஆண்டு கணக்கின்படி 30 மில்லியன் மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 2010-ஆம் ஆண்டில் இத்தொகை 285 மில்லியனாக உயர்ந்துள்ளது. நீண்டகாலம் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் மாரடைப்பு, பக்கவாதம், கூழ்மப்பிரிப்புத் தேவைப்படும் சிறுநீரகச் செயலிழப்பு, விரல்களில் குருதியோட்டம் குறைவதால் உறுப்பு நீக்கம் செய்தல், நீரிழிவுசார் விழித்திரை நோய் (diabetic retinopathy) ஆகியவை ஏற்படுகிறது. நீரிழிவு முதலாம் வகையிலுள்ள தீவிரச் சிக்கலான கீட்டோ அமிலத்துவம் (ketoacidosis), நீரிழிவு இரண்டாம் வகையில் ஏற்படுவது வழக்கமில்லாதது என்றாலும், கீட்டோன்-சாரா இரத்த சர்க்கரை மிகைப்பு (nonketonic hyperglycemia) இந்நோயாளிகளில் ஏற்படலாம்.
அலோபதி மருத்துவத்தில் இந்நோயை முழுமையாய் குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
குணப்படுத்தமுடியும் என்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேதம்.
சுவடிகளிலிருந்து குரு சிஷ்ய முறையில் படித்து பிறர்க்கு உபயோகப்படும் நீரிழிவை முற்றிலும் குணப்படுத்தும் மருத்தை தூத்துக்குடியை சேர்ந்த நண்பர் ஜெயமுருகன் கண்டுபிடித்துள்ளார் 90 நாட்களில் குணமாகும்.பின் எந்த மாத்திரையும் ஊசியும் தேவையில்லை என்கிறார்.

_*குதிகால் வலி தீர்வுக்கு ஆயுர்வேத மருத்துவம்*_

🍂🌿🔥🍂🌿🔥🍂🌿🔥🍂🌿🔥🍂🌿🔥🍂🌿🔥🍂🌿🔥🌿
_*குதிகால் வலி தீர்வுக்கு ஆயுர்வேத மருத்துவம்*_
உப்புகுத்தி வாதம் என்றும், குதிகால் வாதம் என்றும் குமரி மாவட்டத்தில் இதைச் சொல்கிறார்கள். இதை Calcaneal spur, Retrocalcaneal bursitis, Posterior heel spur என்று அழைப்பார்கள். "ஐயா, எழுந்திருந்து நடக்க ஆரம்பிக்கும்போது காலில் வலி ஏற்படுகிறது" என்று நோயாளிகள் சொல்கிறார்கள். தத்தித் தத்தி நடப்பார்கள். காலில் சிறிது வீக்கம் இருக்கும். இதில் நோயாளி அணிந்திருக்கும் செருப்பு முக்கியமானது.
அதிக உயரமுள்ள காலணிகள், இறுக்கமான காலணிகள் போன்றவை இதற்குக் காரணம். சமீபத்தில் காலணியை மாற்றியதால் இப்படி ஏற்பட்டிருக்கலாம். குதிகால் வலி ஒரு காலில் மட்டும் வரலாம், இரண்டு கால்களிலும் வரலாம். இது காலின் பின்னால் உள்ள achilles tendonitis-யை அழுத்தலாம்.
*என்ன நோய்?*
ஒருவருடைய தொழில் என்ன, ஓடியாடி வேலை செய்ய வேண்டுமா என்று பார்க்க வேண்டும். Gout நோயோ, கீல்வாயுவோ, முடக்கு வாதமோ, serum negative arthropathy என்கிற வாத ரக்த நோயோ உள்ளதா என்று பார்க்க வேண்டும். கணுக்காலின் பின்பகுதியில் வீக்கமும், சிவப்புத் தன்மையும் காணப்படும். தொட்டால் சற்றுச் சூடாக இருக்கும், வலி இருப்பதாகச் சொல்வார்கள். அடியில் வலி வருவதற்கு Plantar fasciitis என்று பெயர். தசைநார் கிழிந்துள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.
இதற்கு என்று தனியாகப் பரிசோதனை உள்ளது. Achilles ஆடுசதையை நன்றாக அழுத்தும்போது கால் கீழே போக வேண்டும். விளையாடுபவர்கள், ஓடுபவர்களுக்கு இது அதிகம் வரும். ஆயுர்வேதத்தில் இது வாத நோயாகக் கருதப்படுகிறது. இதை வாதக் கண்டகம், குடுகா வாதம் என்று சொல்வார்கள். இவர்கள் வெந்நீரிலோ, காடி பாலிலோ, உப்பு வெந்நீரிலோ காலை முக்கி வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு வேண்டுமானால் ஐஸ் கட்டி வைக்கலாம். ஆயுர்வேதத்தில் இப்படிச் சொல்லப்படவில்லை என்றாலும், இது பலன் அளிக்கிறது.
*மருந்து*
அதற்குப் பிறகு, கொட்டன் சுக்காதி எண்ணெய், முறிவெண்ணெய், காயத்ரிமேனி எண்ணெய் ஆகியவற்றைத் தடவலாம். நொச்சியிலை, ஆமணக்கு இலை, பூண்டு, கொள்ளு, சதகுப்பை, எலுமிச்சை ஆகியவற்றைச் சட்டியில் வறுத்து, அதை வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும். பின்பு வலியை நீக்குவதற்காகக் குக்குலு திக்தக கஷாயம், நொச்சி கஷாயம், சிற்றரத்தை கஷாயம் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
முறிவெண்ணெய்யைத் தாரைப் போல் அதில் ஊற்றலாம். செருப்பை மாற்றச் சொல்லலாம். சில நேரங்களில் எந்த இடத்தில் வலி உள்ளதோ, அந்த இடத்தில் கூடுதல் சிகிச்சை செய்வதுண்டு. இதற்கு அக்னி கர்மம் என்று பெயர். மருந்தில் குணமாகாத நிலையில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்குத் தேர்வுபெற்ற மருத்துவர் இந்தச் சிகிச்சையைச் செய்வார். எல்லா ஆயுர்வேத மருத்துவர்களும் இதைச் செய்வதில்லை.
*குதிகால் வலிக்குக் கைமருந்து*
# சிற்றரத்தை, அமுக்குரா, சுக்கு ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் போட்டுச் சாப்பிட்டு வர வேண்டும்.
# முடக்கறுத்தான், பிரண்டைத் துவையல் நல்லது
# முடக்கறுத்தான் ரசம் மிகவும் நல்லது.
# உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு, குப்பைக் கீரை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.
# தவிடு, உப்பு ஒத்தடம் கொடுத்து வரலாம்.
# மிதமான வெந்நீரில் உப்பு போட்டுக் காலை முக்கி வைக்கலாம்
# வில்வக் காயைச் சுட்டு நசுக்கி, எருக்கிலை பழுப்பை அதன் மேல் விட்டுக் குதிகாலில் ஒத்தடம் கொடுக்கலாம்.

2036ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ??

1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!
இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...! வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.
பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்ங்கறது தான் ( நான் ஒத்துக்கொண்ட) வாதம்....!
தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு??
எதனால ? ஏன் இப்படினு கேட்டா?
டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!
உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது...கமிஷனோட...! இல்லீங்களா..?
'Ubar'ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!
இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?
அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!
இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, IPC Sectionஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!
IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!
அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?
ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!
ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப துறைல 15 வருஷமா இருக்கறதால நான் 100% நம்புகிற ஒரு விஷயத்தை சொல்றேன் கேட்டுக்கோங்க...!
2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.
அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.
இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.
Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.
இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ??
சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?
முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.
அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.
விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.
'Moodies'ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.
இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.
Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2036ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital .
அதனால்..மக்களே...! இன்னைக்கு பரபரப்பா இருக்குற 80-90% தொழில்கள் காணாம போய்டும்..புதுசா தொழில்கள் வரும்..
ஆனாலும் எப்பவும் சூதானமா இருந்தாதான் பொழப்பு ஓடும்...!!
அர்ப்பணம்:
எப்போதும் நிகழ்காலத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்காமல், எதிர்காலத்தை அறிவியல்பூர்வமாய் கணிக்க முயற்சிப்பவர்க்கு .

பிறந்த கிழமையை வைத்து, அவர்களுக்கு உள்ள குணநலன்கள்.

ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த கிழமையை வைத்து, அவர்களுக்கு உள்ள குணநலன்கள் மற்றும் திறமைகளை கூறிவிடலாம்.🌹
ஞாயிறு🌹🌿
ஞாயிற்றுகிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் மிக எளிதாகவும், திறமையாகவும் செய்து முடித்து சாதனைப் படைப்பார்கள்.
இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்யும் உணர்ச்சிமிக்க, உதவும் குணம் கொண்டவர்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.
திங்கள்🌹🌿
திங்கள்கிழமையில் பிறந்தவர்கள், அனைவரும் விரும்பும் வகையில் அமைதியான மனம் படைத்தவர்களாகவும், உதவும் உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பதால், எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவார்கள்.
ஆனால் தர்மம், நியாயங்களைக் கடைபிடிப்பதில் உறுதி உள்ளவர்கள், நல்ல கற்பனைவளம் கொண்டவர்கள், இவர்களுக்கு சொந்தத் தொழிலே கைக்கொடுக்கும்.
செவ்வாய்🌹🌿
செவ்வாய்கிழமையில் பிறந்தவர்கள் எதிலும் வெற்றியைக் காண்பவர்கள். இவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் நினைப்பதே சரி என்கிற மனப்போக்கு கொண்டவர்கள்.
இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் திகழ்வார்கள், அதனால் பலருக்கும் இவரை பிடிக்காது, நியாயம் மற்றும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.
புதன்🌹🌿
புதன்கிழமையில் பிறந்தவர்கள் பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால், அதை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பார்கள். இந்த ரகசிய திறமை இவர்களுக்கு மட்டும்தான் உரியது.
இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
வியாழன்🌹🌿
வியாழன்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு பாடுபடுவார்கள்.
இவர்கள் உற்றார், உறவினர்களுக்கு உதவிபுரியும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றம் அடைவார்கள்.
வெள்ளி🌹🌿
வெள்ளிகிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னுடையப் பேச்சுத் திறமையினால் மற்றவர்களை தன் வயப்படுத்தும் திறமை கொண்டவர்கள். எந்த வேலையாக இருந்தாலும் மற்றவர்களின் துணையுடன் பூர்த்தி செய்வார்கள்.
சனி🌹🌿
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். தன்னம்பிக்கை மிக்கவர்கள். இவர்கள் ஒரு வேலையைத் தொடங்கினால், அந்த வேலையை முடித்தப் பிறகே அடுத்த வேலையைச் செய்யத் துவங்குவார்கள்.
இவர்கள் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சான்றோரிடமும், ஆன்றோரிடமும் மிகுந்த பக்தியுடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பார்கள்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...