Tuesday, August 29, 2017

வெட்கம்! வெட்கம்!!


தமிழகம் மட்டும் தனி நாடாக இருந்திருந்தால் ஆறாவது வல்லரசு என்று பொருளாதார மேதை புகழ்ந்துரைத்த தமிழகத்திற்கு "பொறுப்பே இல்லாத ஒரு பொறுப்பு ஆளுநர்" என்ன ஒரு உதாசீனம்?
ஒரு மாநில ஆளுநரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் என்று தெரியாமல் இருந்ததா பிஜேபி அரசு.பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே தயாராக இருக்க வேண்டாமா?
ஓராண்டு முடிவடையப் போகிறது இன்னும் ஒரு நிரந்தர ஆளுநரை நியமிக்க வில்லை.
நிரந்தர ஆளுநரை நியமித்தால் சுயமாக செயல்படுவார்.நாம் நினைத்ததை நிறைவேற்ற தடையாக இருப்பார் என்று பிஜேபி அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகிறதா?
இல்லை உங்கள் லட்சணத்திற்கு இதுவே போதுமென்ற ஏளனமா?
இந்தியப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான மாநிலத்தை இவ்வளவு துச்சமாக நடத்துவது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அவமானம் இல்லையா?
இதை எதிர்த்து கேட்பதற்கு வழி இல்லையா?
இல்லை எதிர்த்து கேட்டும் வரவில்லையா?
வர வைக்கும் அளவிற்கு யாருக்கும் அறிவில்லையா?
ஆண்ட பரம்பரை,ஆண்ட பரம்பரை என்று அடித்தட்டு மக்களிடம் கூவிக் கொண்டு திரியும் குள்ள நரிகளே!?
ராஜ பரிபாலனம் உங்கள் ரத்தத்தில் இருந்து இருந்தால், இப்படி காலைப் பிடித்துக் கொண்டு கதறுவது ஏன்?
"வீரனுக்கு விழி மூடிய தினம் மட்டும் சாவு"
"கோழைக்கு விழித்திருக்கும் நேரம் எல்லாம் சாவு"
கோழைகளே!
ஓலை கொண்டு வந்தால் தான் ஒற்றனைக் கூட கோட்டைக்குள் விடுவார்கள்!
உங்களுக்கு சேலை கொண்டு வந்தவனை எதற்குடா செயின் ஜார்ஜ் கோட்டைக்குள் விட்டீர்கள்?
நக்கிப் பிழைக்கும் நாய் கூட தன் வீட்டிற்குள் வேறொரு நாயை விடாதேடா!
உங்களுக்கெல்லாம் பதவி ஒரு கேடா!?
நிலையில்லாத அரசு!
நிறையில்லாத அரசாங்கம்!
வெட்கம்! வெட்கம்!!
மனிதனின் வாழ்க்கை ஒரு சக்கரம் என்பார்கள்.ஆனால் ஒரு மாநிலத்தின் வாழ்க்கையே ஒரு சக்கரத்தில் தான் ஓடிக்கொண்டு இருந்து இருக்கிறது.
ஆம்!
என் தலைவனின் சக்கர நாற்காலி என்று நின்றதோ?
தமிழகத்தின் வளர்ச்சியும் அன்றே நின்று விட்டது!
தமிழனின் மானமும் பறந்து சென்று விட்டது!
ஒன்று என் தலைவனிடம் அரசியல் பழகிக் கொள்ளுங்கள்!
இல்லை அரசியலை விட்டே அனைவரும் விலகிக் கொள்ளுங்கள்!படித்து நொந்துபோனேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...