Tuesday, November 29, 2022

சோகமான மரணம்.

 *தஞ்சை மருத்துவர் Dr.சுந்தர்ராஜன் சொக்கலிங்கம்.,M.D., அவர்களின் பதிவு.*

சோகமான மரணம்
இதுவரை இந்த மருத்துவ பணியில் எவ்வளவோ மனித இறப்புகளை நேராக
பார்த்ததுண்டு .
ஆனால் கடந்த வாரம் பணியின் போது கண்கூடாக கண்ட ஒரு மரணம் என்னை இரண்டு நாட்களாக தூங்க விடவில்லை.
அந்த நோயாளி அவர்கள் வீட்டில் வளர்க்கபட்ட ஒரு அல்ஷேசன் வகை நாயால் உணவு தரும் போது எதேட்சையாக கடிக்க பட்டிருக்கிறார். 40 வயது பெண் ஆகிய அந்த நோயாளி மூன்று பெண்களுக்கு தாய் ! அவரது கணவர் தஞ்சை வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறவர் .!!
அந்த நாய்க்கு எல்லா வகை தடுப்பூசிகளும் முறையாக போடப்பட்டிருக்கிறது.
40 நாட்களுக்கு முன்பு அவர் அந்த வளர்த்த நாயால் எதேட்சையாக கடிக்கப்பட்டு ,அவருக்கு தடுப்பூசியும் முறையாக போடப்பட்டிருக்கிறது.
இருப்பினும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக கடந்த செவ்வாய் அன்று ரேபிஸ் அறிகுறிகளோடு அவர் அனுமதிக்கபட்டு எனது பணியின் போது
மரணமடைந்தார் .
தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எல்லா சிகிச்சைகளும் கொடுக்கபட்டிருந்தன.
அவரது குழந்தைகள் ,கணவர் முன்னிலையில் முழு சுய நினைவோடு அவர் இறந்த அந்த இரவும் ,அந்த குடும்பமே கதறிய சோகமும் என்னை பெரிதும் பாதித்தது.
அதுவும் இறப்பிற்கு பின் அவரது உடல் நகராட்சியிடம் ஒப்படைக்க பட்ட போதுஅவரது மூன்று மகள்களும் கதறி அழுதது இன்றும் என் கண்களில்.
வாழ்க்கையில் இந்த மாதிரியான இறப்புகள் என்றும்,யாருக்கும் நிகழக் கூடாது.
எனது ஒரத்தநாடு கால்நடைமருத்துவ கல்லூரி பேராசிரிய நண்பரிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"எல்லா நாய்களின் உமிழ்நீரிலும் #ரேபிஸ் உண்டாக்கும் வைரஸ் 10 சதவீதம் கட்டாயம் இருக்கும் ,அவைகளுக்கு முழு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் "
இந்த தகவல் என்னை முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
என் பிரிய நண்பர்களே இனிமேலாவது வீட்டில் வளர்க்கும் கவனமாக இருங்கள் அல்லது நாய் வளர்க்காதீர்கள்
ஏனேனில் எவ்வளவோ சிகிச்சைகள் வந்து விட்டாலும் ரேபீஸ் வந்து விட்டால் மரணம் நிச்சயம் .( mortality is 99.9percentage)
இந்த வாரம் என்னை பாதித்த இந்த மரணத்தின் தாக்கம் மறைய நாட்கள் நிறைய ஆகும் போலிருக்கிறது.
முடிந்த வரை நாய்கள் வளர்ப்பதை தவிர்க்கவும்..
அத்தோடு நாய்களோடு விளையாடுவதையும் நிறுத்தவும்.
😢😢😢😢😢

Monday, November 28, 2022

பாத்திரம் #அறிந்து #பிச்சையிடுபவனே #பாக்கியவான்!

 இவன் அதற்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று சிங்கமுத்து ஒரு திரைப்படத்தில் வடிவேலுவைப் பார்த்து திருப்பி திருப்பி சொல்ல.....

எதற்கு சரிப்பட்டு வரமாட்டான் என்று எவருக்குமே புரியாமல்
அந்தக் காட்சியைப் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்து மகிழ்வோம்....
அப்படி எல்லோருமே ஒதுக்கிடும் ஒருவரை அழைத்து உச்சத்தில் உட்காரவைத்தால் என்றாவது ஒருநாள் எல்லோரும் சொன்னது போலவே "தானம் கொடுத்த மாட்டை பல்லைபயபிடுங்கி பார்த்த" கதையாகத்தான் நடக்கிறது
"இவர் இதற்கு சரிப்பட்டு வரமாட்டார்" "எல்லோரையும்
எதிர்ப்பதே இவர் பிறவிகுணம்"
"இலை நிறைய சோறு வைத்து ஓரமாய் நரகலையும் வைத்துவிடுவார்"....
"இல்லை இல்லை நரகலை மட்டும்தான் வைப்பார்"
என்றெல்லாம் சொல்லி
ஒதுக்கிடும் ஒருவரை தோளில் சுமந்தால் சோதனைதான் நமக்கு
சொந்தமாகும்...
நாம் அனைவருமே பிழைப்பின் காரணமாக பொருளுக்கே முக்கியத்துவம் அளித்து பொருள் சார்ந்த வாழ்வே வாழ்கிறோம்.
பொருள் சார்ந்து வாழும் போது அறத்திற்கு நாம் அதிக இடம் தருவதில்லை. ஆகவே அறம் சார்ந்த வாழ்வு வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது.
பொருள் சார்ந்த வாழ்வு உலகியல் தேவைகளை பூர்த்தி செய்யும். நமது உண்மையான ஆன்ம வளர்ச்சிக்கு அறவாழ்வே உயர்வு தரும்.
இது நமக்கு நன்கு தெரிந்தாலும் உலகியல் தேவை காரணமாக நாம் அறம் சார்ந்த வாழ்வை புறக்கணித்து நான் உட்பட எல்லோருமே பொருள் சார்ந்த வாழ்வை தேர்வு செய்கிறோம்.
இந்த உலகில் வாழ நிச்சயம் பொருள் தேவை.ஆனால் எத்தனை வந்தாலும் போதாது என்று எண்ணுகையில் தான் சிக்கல் ஏற்படுகிறது.
மனநிறைவு என்பது பொருள் மூலம் ஒருநாளும் ஏற்படாது. ஆனால் அறம் எப்போதும் மனநிறைவை தரும்.
நம்ம எல்லோருக்குமே வேண்டியது மனநிறைவு, அமைதி நிம்மதி என்று நாம் தேடி அலைவது அந்த மனநிறைவை தான். அதை எந்த பொருளும் தராது.
மனநிறைவை காசு கொடுத்து கடையிலும் வாங்க முடியாது.ஆர்டர் கொடுத்து ஸ்விகி ஸொமொட்டோ என ஆன் லைனிலும் தருவிக்க முடியாது.
அது தானாக வரவேண்டும். அதற்கு நமக்கு இருவேறு ஆற்றல்களையும் சமநிலையில் உபயோகிக்க தெரிய வேண்டும்.
நமக்கு வேண்டியது நிம்மதி தான்.அதற்கு நாம் உண்மையில் எதை விரும்புகிறோமோ எதை செய்கையில் நமக்கு மனமகிழ்வு கிடைக்கிறதோ அதில் ஈடுபட வேண்டும்.
அதை சுதர்மம் என்கிறார்கள்.
அதுவே நமக்கான வழி. அதன் மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் நம்மை விரைவில் உயர்நிலைக்கு கொண்டு செல்லும்.
பாரதியின் சுதர்மம் கவிதை. எமக்கு தொழில் எழுத்து என்று அவர் மிகவும் மகிழ்வாக வாழ்ந்து வந்தார்.
உலகியல் ரீதியாக மிகவும் கடினமான வாழ்கை தான்.ஆனால் அவர் என்னவோ சந்தோசமாகத் தான் வாழ்ந்தார்.
உலகப்புகழ்பெற்ற
ஓவியர்வான்கோ ஓவியத் துறையில் திறமையாக இருந்தார்.அவரது வாழ்க்கையும் மகா துன்ப மானது தான். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறார்கள்.
குடிபோதையில் சில இளைஞர்கள் அவரை தவறாக சுட்டு விட்டதாகவும்,
அவர்களை காட்டிக் கொடுக்க மனமில்லாது தானே தன்னை சுட்டுக் கொண்டதாக அவர் வாக்குமூலம் கொடுத்ததாக சிலர் சொல்கிறார்கள்.
உண்மை தெரியவில்லை.
பொதுவாக நாம் அறம் சார்ந்து நம் மனம் விரும்பிய ஒன்றில் ஈடுபடும் போது
நமக்கு கிடைக்கும் அனுபவங்கள் பெரும்பாலும் துன்பம்மிக்கதாகவே இருக்கும்.
அதனால் சில இழப்புகள் ஏற்படலாம்.
ஆனால் அது தான் நம் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. நாம் இன்பமான விஷயங்களை யே நாடுகிறோம்.
துன்பம் விழையக் கூடும் என்கின்ற காரணத்தினால் நம் மனம் விரும்பும் ஒன்றை செய்ய தயங்குகிறோம்.அதை தள்ளிப் போடுகிறோம்.
எழுதுவதனால் எந்த பலனும் இல்லை என்று நீண்ட நாட்களாக எனக்கு விருப்பமான ஒன்றை இத்தனை வருட காலம் தள்ளிப் போட்டு வந்தேன்.
இப்போது எந்த பலனும் தேவையில்லை என்று எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
இப்படி தொடர்ந்து எழுதும் போது எழும் சிந்தனைகள் மூலம் மேலும் மேலும் என்னை செதுக்கிக் கொள்ள முடிகிறது.
எனக்கு நடந்த மற்றும் நிகழும் அனுபவங்களை வேறு கோணத்தில் இப்போது பார்க்க முடிகிறது.
பிறருக்கு நடக்கும் அனுபவங்கள் மூலமும் கற்றுக் கொள்ள முடிகிறது.
எனது சுதர்மத்தை கண்டுகொண்டு அதை பின் பற்ற தொடங்கியதும் என்னுள்ளும் விரைந்த மாற்றத்தை காண முடிகிறது.
நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமக்கு பலனை எதிர்பார்க்கிறோம். பலனை எதிர் பார்த்தே செயல் செய்கிறோம்.
நமக்கு பலன் தராத எந்த செயலையும் செய்ய நாம் முயற்சிப்பதே இல்லை. நமக்கு என்று சில செயல்கள் விதிக்கப் பட்டுள்ளது.
அந்த செயல்களை செய்ய நம் மனதிலும் விருப்பம் வருகிறது.
அதை செய்யும் போது நமக்கு மனநிறைவும் உண்டாகிறது.
ஆனால் நம் விருப்பம் மற்றும் மனநிறைவுக்கு முக்கியம் தராது
நமக்கு பலன் ஏதும் இருக்கிறதா என்று மட்டுமே எண்ணி செயல்களை செய்கிறோம்.
அப்படி செய்யும் செயல்களின் மூலம் நமக்கு உலகியல் ஆதாயங்கள் ஏதேனும் விளையலாம்.
ஆனால் மனநிறைவு கிடைக்குமா என்பது நிச்சயம் இல்லை.
நாம் உண்மையில் மனநிறைவிற்குத் தான் ஆசை படுகிறோம்.
ஆனால் மனநிறைவு தரும் செயல்களால் ஆதாயம் இல்லை என்று அதை புறக்கணிக்கிறோம்.
அதேசமயம் ஆதாயம் கருதி செய்யும் செயல்களால் மனநிறைவு கிடைக்காது துன்பப் படுகிறோம்.
அறியாமை காரணமாக நாம் இந்த மாயை யில் சிக்கி கொண்டு விடுபட முடியாது தவிக்கிறோம்.
உண்மையில் செயல் செய்வது மட்டுமே நமது கடமை.
பலனில் எந்த விதமான எதிர் பார்ப்பும் கொள்ளலாகாது.
இதை தான் கண்ணன் கூறுகிறான்.
யதுகுலநாதனை கடவுளாக வணங்கினால் மட்டும் போதாத
அவனின் உபதேசத்தய காதில் போட்டுக் கொள்ளவேண்டும்.....
யார் என்ன சொன்னால் என்ன, எனக்கு என்ன ஆதாயம்? என்பதே நம் செயல்களின் நோக்கமாக இருக்கிறது.
இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டால் நம் வாழ்கை நிச்சயம் உயர்வானதாக இருக்கும்.

நன்றாக யோசித்துப் பாருங்கள்.

 திமுக கூட்டணியில் இருக்கும் அனைவரும் இந்து கடவுள் இல்லை என்பவர்கள்.

1) திமுகவிற்கு ஹிந்து கடவுள் இல்லை .
2) முஸ்லிம் லீக்குக்கு இந்து கடவுள் இல்லை .
3) திருமாவளவனுக்கு இந்து கடவுள் இல்லை.
4) கம்யூனிஸ்டு இந்து
கடவுள் இல்லை .
5) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்து கடவுள் இல்லை.
6) வைகோவிற்கு இந்து கடவுள் இல்லை.
7) திக விற்கு இந்து கடவுள் இல்லை இதில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் நமது கடவுள் மீது நம்பிக்கை கிடையாது.
பாகிஸ்தான் ஆதரவு தேசத்துரோக மதவாத முஸ்லிம் கட்சி
காங்கிரசுக்கு இந்து கடவுள் நம்பிக்கை இல்லை.
பின்குறிப்பு:-
நன்றிகெட்ட கூட்டமெங்கள் தமிழர் கூட்டம்!
நல்லவர்களை அரசியலில் ஒழித்து கட்டும் மூடர் கூட்டம்!
நம் தமிழர் கூட்டம்!
ரூபாய்க்கு மூணுபடி அரிசியை நம்பி காமராசரை ஓரம்கட்டிய மூடர் கூட்டம்!
பொய்அறிஞர் பேசிய அடுக்குமொழி சொல் கேட்டு
மக்கள்அறிஞர் காமராசரை ஒழித்து கட்டிய மூடர்கூட்டம் எம் தமிழர்கூட்டம்!
உணர்ச்சிக்கு அடிமையாவோம்! பொய்பேச்சுக்கு மயங்கி நிற்போம்!
புத்திசாலிகளின் பேச்சை ஒருபோதும் கேட்கமாட்டோம்!
நல்லது செய்யும் யோக்கியர்களை தூசிபோல் துடைத்தெறிவோம்!
கெட்டது செய்யும் அயோக்கியர்களிடம் காசு வாங்கி ஆட்சியில் அமர்த்துவோம்!
காவிரிஉரிமையை தாரை வார்த்த முதல்வரை முத்தமிழறிஞர் என்போம்!
முடவராய் அரசியலில் வீழ்ந்துபோன காமராசரை கயவரென்போம்!!
மதிய உணவு அளித்து அனைவரையும் கல்வி கற்க செய்த காமராசரை பொய்யரென்போம்!
அனைவரையும் சாராயம் குடிக்க செய்த திமுகவை தலைவரென்போம்!!
ஏகபத்தினி விரதனை எகத்தாளமிடுவோம்!
எட்டுதிசை படுத்துஎழுபவனை பல்லக்கில் சுமந்திடுவோம்!!
ஈழதமிழர்களை கொன்றொழித்த காங்கிரஸ் திமுக கூட்டணியை பாராட்டுவோம்!
இலங்கைதமிழர்களுக்கு மறுவாழ்வு வீடு தந்த மாமனிதர் நரேந்திரமோதி
இலங்கையில் ஐந்து தமிழர்களின் தூக்குதண்டனையை ரத்துசெய்த நரேந்திரமோடியை தமிழினதுரோகி என்போம்!!
ஈழதமிழர்களை ஒழித்துகட்டிய சோனியாவே வருக என்போம்!
தமிழே உலகின் முதல்மொழி என்றுரைத்த மோடியே திரும்ப போ என்போம்!!
நல்லவர்களை ஆதரிக்கமாட்டோம்!
நயவஞ்சகர்களை வாழ்த்தாமல் விடமாட்டோம்!!
நல்லவர்களைஒழித்துகட்டினோம்!
கயவர்களை ஆட்சிகட்டிலில் அமர்த்தினோம்!!
மீத்தேன் கையெழுத்து போட்ட ஸ்டாலினை தலைவரென்போம்!
மீத்தேன் திட்டத்தை ரத்து செய்த நரேந்திரமோடியை நாதாரி என்போம்!!
ஜல்லிகட்டை தடைசெய்த காங்கிரஸ் திமுக வை பாராட்டுவோம்!
3மணிநேரத்தில் 5அமைச்சர்கள் கையெழுத்து போட்டு ஜல்லிகட்டு தடை உடைத்த பாஜக வை பாசிசம் என்போம்!!
காங்கிரஸ் ஆட்சியில் 768மீனவர்கள் கொன்றபோது வாய்மூடி நின்றோம்!
பாஜக ஆட்சியில் ஒருமீனவனும் கொல்லாதபோது பாஜகவை பாசிசம் என்போம்!
அப்துல்கலாம் இறுதிசடங்கிற்கு திராவிடதலைவர்கள் போகாததை பாராட்டி நின்றோம்!
இறுதிசடங்கிற்கு வந்து மணிமண்டபம் கட்டி தந்த மோடியை சாடிஸ்ட் என்று சாடி நிற்போம்!!
நல்லவர்களை சாடுவதில் தமிழர்கள் வல்லவர்கள்!
கெடுதி செய்த கெட்டவர்களை தூக்கி பிடிப்பதில் தமிழர்கள் வல்லவர்கள்!
பல நல்லவர்களை ஒழித்து கட்டிய தமிழர்கள் வல்லவர்கள்!
வெட்கப்படு தமிழா வேதனை படு தமிழா, இனிமேலாவது விழித்தெழு தமிழா ....

அந்தஸ்தா? கௌரவமா?

  *வாழ்க்கை வெற்றியின் பொருள் என்ன? கல்வியில் தகுதி பெறுவதா? நல்ல உத்தியோகத்தில் அமர்வதா? பணத்தை சேமிப்பதா? நல்ல மனைவி/கணவனைப் பெறுவதா? பிள்ளைகளைப் பெறுவதா? உறவுகளைப் பெறுவதா? புகழைப் பெறுவதா? அல்லது பிறரிடம் காட்டப்படும் அந்தஸ்தா? கௌரவமா? அல்லது அனைத்துமா?*

*நீங்களே சொல்லுங்கள் !!! இவை அனைத்தும் பெற்றவனைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம் !!! ஆனால், அவன் மனம் நிறைந்துள்ளதா? நிம்மதியோடுள்ளானா? என கவனித்தீர்களா? போதும் என்று ஒப்புக் கொள்வானா?*
*இவையாவும் மனிதனின் ஆடம்பரத்திற்கான மார்கங்கள். வசதிக்கான வழிமுறைகள் !!! நிச்சயமாக வாழ்க்கையின் வெற்றியல்ல !!!நடைமுறை வாழ்க்கையில், "வெற்றி". பெறுவதையே நாம் பொருளாதார ரீதியிலேயே (பணம் + புகழ் ஈட்டுவது) பார்க்கின்றோம்.*
*பிறந்ததிலிருந்து மனிதன் எத்தனை எத்தனை வெற்றிகளை, சொத்துக்களை சந்தோஷங்களை பெறுகிறான்?*
*பட்டம், உத்தியோகம், கார், பங்களா, பணம், சொத்து, புகழ், அந்தஸ்து, கௌரவம், நல்ல மனைவி அல்லது கணவன், நல்ல நண்பர்கள், உறவுகள் என அனைத்தையும் அடைந்தவன், எதை தன்னோடு கொண்டு செல்ல போகிறான்?*
*பெற்றோர் கொடுத்த சொத்துக்களை வாங்கி "இருக்கி" வைத்துக் கொண்டால், இங்கிருப்பவைகளை, உன் திறமையால் "பூட்டி" வைத்துக் கொண்டால், அதெப்படி உன்னுடையது ஆகிவிடும்? இதில் உன்வெற்றி என்ற வார்த்தைக்கு பொருள் எங்கே இருக்கிறது?*
*எது உன்னுடையதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எது உன்னுடையதோ அது நீ இங்கிருக்கும் போதே கொடுக்கப்பட்டது. எது உன்னுடையதோ, அது, உபயோகமற்ற கிழிந்து போன கோவனமே ஆயினும், இங்கேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும்.*
*திடீரென, மனிதனுக்கு மரணம் நெருங்கும் போது மட்டும் "இன்னும் வாழத் தொடங்க வில்லையே" என்கிற நிறைவற்ற மனஎண்ணம் ஏன் வருகிறது?*
*அப்படியானால் நீ இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது போலியான வாழ்க்கையே !!! இன்னமும் நீ வாழ்க்கையின் வெற்றியை அடையவில்லை என்றுதான் பொருள் !!!*
*கவனிக்க : வாழ்க்கையில் ஏதோவொன்றை பெற்றிருந்தால், மரணத்தை நீ சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று வைத்துக் கொள்வோம் !!!*
*அந்த "ஒன்றை" அடைவது தான் வாழ்க்கையின் வெற்றி என்றால் அது என்ன? அதை அடைவது எப்படி? அந்த ஒன்றை நீ எதுவென தெரிந்து கொள்வதற்கு முன்பு, அந்த ஒன்று எதுவல்ல என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.*
*உண்மையைச் சொல்லப்போனால் புலன் இன்பங்களால் அனுபவிக்கின்ற இன்பங்கள் யாவும், அதாவது ஒரு காலத்தில் தோன்றிய ஒரு காலத்தில் மறையக் கூடிய இன்பங்கள் யாவும், அதாவது தற்காலிக இன்பங்கள் யாவும் போலியானவை, பொய்யானவை !!! அவையல்ல உன் வாழ்க்கையின் வெற்றி என்பது !!!*
*எந்த இன்பங்கள் எல்லாம் மனதிற்கு ஒரு மன நிறைவைத் தரவில்லையோ அவையாவும் பொய்யான இன்பங்கள்*
*கவனிக்க : அப்படியானால் உண்மையான இன்பங்கள் இருந்தே ஆக வேண்டுமல்லவா?*
*அதிகமான மைசூர்பாக்கை தின்ற உடனேயே ஒரு சொட்டு தேனை நாவில் விட்டால், அந்த தேனின் சுவை தெரியாமல் தானே போகும்?*
*அந்த தேன் இனிக்க வேண்டுமானால், முன்னமே, வேறு இனிப்புச்சுவை உன் நாவில் இருந்திருக்க கூடாது*
*எனவே உன் புலன் இன்பங்களை கட்டுப்படுத்தி அனைத்து தற்காலிக சுகங்களையும், தவிர்த்தால் தான் நிரந்தர இன்பம் உனக்கு இனிக்க துவங்கும்*
*பொய்யான இன்ப போதையை தியாகம் செய்ய மறுத்தால், நாம் இந்த நிரந்தர இன்பத்தை எவ்வாறு உணர முடியும்?*
*உங்கள் தொழில், உங்கள் உத்தியோகம், உங்கள் வணிகம், உங்கள் குடும்பம் இன்னும் எந்தெந்த விஷயத்தில் எல்லாமோ*
*நீ, வெற்றி பெற்று இருக்கலாம்*
*ஆனால் அவையெல்லாம்* *வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக ஆகாது. எந்த சூழ்நிலையிலும் உனக்கு கவலையே இல்லை என்கிற நிலை வந்தால் தான் நீ மனிதவாழ்க்கையில் வெற்றி பெற்றவன் ஆவாய்?*
*வாழ்க்கையில் வெற்றி பெறுவதென்றால் என்ன என்பதை நாம் வரையறை செய்ய வேண்டும். பணம் சம்பாதித்தால் வெற்றி என்கிறீர்கள். நான்கு பேர் மதிக்கும்படி வாழ்ந்தால் வெற்றி என்று நினைக்கிறீர்கள். பணம் புகழ் கௌரவம் அந்தஸ்து இவையாவும் வெற்றியல்ல !!!*
*ஒன்றைப் பெற்று அதை பயன்படுத்தி, அதன்மூலம், கவலைகள் இல்லாத நிரந்தர ஆனந்தத்தில் வாழ்ந்து, அதன்மூலம், மரண பயமுமின்றி, சிரித்துக்கொண்டே நீ மரணத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே உன் வாழ்க்கையின் வெற்றியாகும்.*
*எப்போது வெளியே நடக்கிற சம்பவங்களால், உன்னுடைய உள்தன்மையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையோ , அதுதான் வாழ்க்கையின் வெற்றி.*
*அப்படியொரு வெற்றி வந்துவிட்டால் அந்த மனிதனுக்கு மரணம் என்பது ஒரு விஷயமே இல்லை.*
* ஆத்ம ஞானத்தை அடைந்து பாருங்கள் அதை மனதில் நிலை நிறுத்தி பாருங்கள் !!! கவலைகளை விளக்குகின்ற சக்தி கொண்ட ஞானபார்வை உங்களுக்கு கிடைத்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள் !!! ஆத்மா ஒன்றே நித்தியம் அந்த நித்தியமான இன்பமே நிரந்தர இன்பம் இந்த நிரந்தர இன்பத்தை அனுபவித்தவன் மரணத்தின் போதும் சந்தோஷமாக இருக்கும் ஆச்சரியத்தை காண்பீர்கள் இந்த உண்மையான வெற்றியை அடையத்தான் நீங்கள் மனிதனாக பிறந்து வந்திருக்கிறீர்கள் எனவே போட்டதெல்லாம் போட்டபடியே விட்டு விட்டு ஞானத்தை அடைய வாருங்கள் !!!
*விலை மதிக்க முடியாத இந்த ஆத்ம ஞானத்தை நீங்கள் தொலைபேசி மூலம் நான்கு மணி நேரத்தில் பெற்றுவிடலாம். முதல் (1½) மணி நேரத்தில் ஆத்ம ஞானத்தை பற்றிய அடிப்படை வகுப்பு
அடுத்த (1½) மணி நேரத்தில், ஞானம் மனதில் நிலை நிற்பதற்கான மனதுக்கு ஒரு பயிற்சி. அதன்பின்பு (1) மணி நேரம் ஹோம் ஒர்க் !!! மொத்தம் நான்கு மணி நேரத்தில் நீங்கள் ஆத்ம ஞானத்தை அடைந்து விடலாம் !!! அதன்பின் (a) எப்போதும் எந்த கவலையும் இல்லாத நிலைமையில் நீங்கள் வாழ்ந்திடலாம் !!! (b) மீண்டும் பிறவா வரம் பெற்று பிறவிப் பயனை அடைந்திடலாம் !!!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது வாழ்த்துக்கள்.

 1960ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்ரிக்க திரைப்பட விழாவில் வீர பாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அதே விழாவில் ஜி.ராமநாதன் சிறந்த இசையமைப்பாளராக விருது பெற்றார்.

சர்வதேச அளவில் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளராக விருது பெற்றது அதுவே முதல் முறை. விருது பெறும்போது உணர்ச்சிப் பெருக்கில் நடிகர் திலகம் மயங்கி விழுந்ததாகக் கூறுவார்கள்.
விழா முடிந்து தமிழகம் திரும்பியபோதுபடத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் பி.ஆர்.பந்துலு, நடிகர் திலகம் மற்றும் ஜி.ராமநாதன் ஆகியோரை பாராட்டும் விழா நடந்தது. அவ்விழாவில் அன்றைய தமிழக உள்துறை அமைச்சர் திரு.பக்தவத்சலம் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
May be an image of 4 people and people standing

அகத்திகீரை..

  இந்த கீரையை அதிகம் கண்டு கொள்வதே இல்லை அது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் இதில் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன...

இதில் மூன்று வகை உண்டு சிற்றகத்தி சீமை அகத்தி சாலைஅகத்தி ... நமக்கு தெரிந்தது வெள்ளை மற்றும் சிகப்பு தான்..
இதில் 63 வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன..
இதை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பல விதமான பிரச்சினை சரியாகும்.
இது வாதம் பித்தம் கபம் மூன்றையும் சம நிலையில் வைக்கும்..
இது பிளட் பிரஸர் குறைக்கும்..
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டு தேய்மானம் அடையும் ஜாய்ன்ட் பெயின் வரும் அதற்கு இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் நல்லது..
இது வாய்ப்புண் வயிற்றுப்புண் சரிசெய்யும் வயிற்றில் உள்ள புழுக்கள் பூச்சிகள் வெளியேறும்
குழந்தை பெற்ற பெண்கள் இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் பால் சுரப்பு அதிகரிக்குமாம்.
இதில் விட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண் பார்வை தெளிவாக இருக்கும்..
சில பேர் சோம்பலாக எதையும் சிந்திக்காமல் இருப்பார்கள் அவர்களுக்கு இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள நல்ல மாற்றம் தெரியும்.‌‌‌.
புகை பிடிப்பவர் பான் பராக் ஹான்ஸ் போடுபவர்களுக்கு உடலில் ஒரு விதமான சூடு இருக்கும் என்னதான் பன்னினாலும் அந்த உடல் சூடு குறையாது அதற்கு இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் சூடு தணியும் புகையை நாளடைவில் மறக்க செய்யும்.. அதன் விஷமும் நீங்கும்
சில பேர் கழுத்தில் தேமல் படை இருக்கும் அதற்கு இந்த கீரையை அரைத்து பூசி வர சரியாகும்..
காபி டீ அதிகம் குடிக்கும் நபர்கள் உடல் சூடு அதிகம் இருக்கும் அவர்களும் இதை சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.
சரக்கு அடித்து விட்டு இதை சாப்பிட கூடாது சரக்கு அடிப்பவர் இதை சாப்பிட மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதாக சொல்ல படுகிறது ஆக அவர்கள் தவிர்க்க வேண்டும்.
இது பொதுவாக அதிக உடல் சூடு குறைக்கும் எலும்பு பல் வளர்ச்சி நன்றாக இருக்கும்..
அசைவம் சாப்பிட்டு விட்டு இதை சாப்பிட கூடாது..
எதாவது நோய்க்கு மருந்து சாப்பிடும் நபர்கள் மருந்து சாப்பிடும் நாளில் இதை சாப்பிட கூடாது மருந்தை முறிக்கும்...
சித்த மருந்துகள் சாப்பிட்டு வருபவர்கள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்..
ஆங்கில மருந்துகள் எதாவது நோய்க்கு நீண்ட காலம் சாப்பிட்டு வருபவர்கள் இரத்தம் சூடு ஏறி அசுத்தம் அடைந்து இருக்கும் அதற்கு இதை சாப்பிட இரத்தம் சுத்தமாகும்..
இதை முறைப்படி நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்... இல்லை சிறிது சிறிதாக கட் பண்ணி சூப் செய்து சாப்பிடலாம் மிக நன்று...
இதை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாது..
பத்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதை சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது..
இந்த கீரையில் உள்ள கசப்பு தன்மை குறைய புழுங்கல் அரிசியை வறுத்து பொடி செய்து கீரை உடன் சேர்ந்து சமைக்கலாம்..
சில பேர் மருந்து வைத்து விட்டார்கள் என்று சொல்பவர்கள் இந்த கீரையை சாப்பிட்டால் மருந்து முறியும்..
ஒருவர் இறந்து விட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மூன்று நாட்கள் கழித்து இந்த கீரையை சமைத்து கொடுப்பார்கள் எதற்காக தெரியுமா துக்கம் தாளாமல் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் இரத்த ஓட்டம் சீராக இல்லாது இருக்கும் அதற்கு இதை சாப்பிட சரியாகும் மணம் அமைதி அடையும்..
இந்த கீரையை மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாருக்காவது தானம் கொடுக்க அவர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்...
இந்த கீரையை மகம் நட்சத்திரத்தில் எருமைகளுக்கு கொடுக்க எம பயம் நீங்கும் கடைசியில் சிவலோகம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.‌‌...
இதை விதை மூலம் வளர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பசும் பாலில் ஒரு 12 மணி நேரம் ஊற வைத்து விதைத்தால். வரும் கீரை கசப்பு குறைவாக இருக்கும்...
இது செடியாகவும் கிடைக்கும் அதை மாடியில் வளர்க நினைப்பவர் 50 லிட்டர் 100 லிட்டர் கேனில் வைக்கலாம்...
May be an image of flower, nature and tree

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...