*வாழ்க்கை வெற்றியின் பொருள் என்ன? கல்வியில் தகுதி பெறுவதா? நல்ல உத்தியோகத்தில் அமர்வதா? பணத்தை சேமிப்பதா? நல்ல மனைவி/கணவனைப் பெறுவதா? பிள்ளைகளைப் பெறுவதா? உறவுகளைப் பெறுவதா? புகழைப் பெறுவதா? அல்லது பிறரிடம் காட்டப்படும் அந்தஸ்தா? கௌரவமா? அல்லது அனைத்துமா?*
*நீங்களே சொல்லுங்கள் !!! இவை அனைத்தும் பெற்றவனைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம் !!! ஆனால், அவன் மனம் நிறைந்துள்ளதா? நிம்மதியோடுள்ளானா? என கவனித்தீர்களா? போதும் என்று ஒப்புக் கொள்வானா?*
*இவையாவும் மனிதனின் ஆடம்பரத்திற்கான மார்கங்கள். வசதிக்கான வழிமுறைகள் !!! நிச்சயமாக வாழ்க்கையின் வெற்றியல்ல !!!நடைமுறை வாழ்க்கையில், "வெற்றி". பெறுவதையே நாம் பொருளாதார ரீதியிலேயே (பணம் + புகழ் ஈட்டுவது) பார்க்கின்றோம்.*
*பிறந்ததிலிருந்து மனிதன் எத்தனை எத்தனை வெற்றிகளை, சொத்துக்களை சந்தோஷங்களை பெறுகிறான்?*
*பட்டம், உத்தியோகம், கார், பங்களா, பணம், சொத்து, புகழ், அந்தஸ்து, கௌரவம், நல்ல மனைவி அல்லது கணவன், நல்ல நண்பர்கள், உறவுகள் என அனைத்தையும் அடைந்தவன், எதை தன்னோடு கொண்டு செல்ல போகிறான்?*
*பெற்றோர் கொடுத்த சொத்துக்களை வாங்கி "இருக்கி" வைத்துக் கொண்டால், இங்கிருப்பவைகளை, உன் திறமையால் "பூட்டி" வைத்துக் கொண்டால், அதெப்படி உன்னுடையது ஆகிவிடும்? இதில் உன்வெற்றி என்ற வார்த்தைக்கு பொருள் எங்கே இருக்கிறது?*
*எது உன்னுடையதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எது உன்னுடையதோ அது நீ இங்கிருக்கும் போதே கொடுக்கப்பட்டது. எது உன்னுடையதோ, அது, உபயோகமற்ற கிழிந்து போன கோவனமே ஆயினும், இங்கேயே விட்டுவிட்டு செல்ல வேண்டும்.*
*திடீரென, மனிதனுக்கு மரணம் நெருங்கும் போது மட்டும் "இன்னும் வாழத் தொடங்க வில்லையே" என்கிற நிறைவற்ற மனஎண்ணம் ஏன் வருகிறது?*
*அப்படியானால் நீ இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது போலியான வாழ்க்கையே !!! இன்னமும் நீ வாழ்க்கையின் வெற்றியை அடையவில்லை என்றுதான் பொருள் !!!*
*கவனிக்க : வாழ்க்கையில் ஏதோவொன்றை பெற்றிருந்தால், மரணத்தை நீ சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள முடியும் என்று வைத்துக் கொள்வோம் !!!*
*அந்த "ஒன்றை" அடைவது தான் வாழ்க்கையின் வெற்றி என்றால் அது என்ன? அதை அடைவது எப்படி? அந்த ஒன்றை நீ எதுவென தெரிந்து கொள்வதற்கு முன்பு, அந்த ஒன்று எதுவல்ல என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.*
*உண்மையைச் சொல்லப்போனால் புலன் இன்பங்களால் அனுபவிக்கின்ற இன்பங்கள் யாவும், அதாவது ஒரு காலத்தில் தோன்றிய ஒரு காலத்தில் மறையக் கூடிய இன்பங்கள் யாவும், அதாவது தற்காலிக இன்பங்கள் யாவும் போலியானவை, பொய்யானவை !!! அவையல்ல உன் வாழ்க்கையின் வெற்றி என்பது !!!*
*எந்த இன்பங்கள் எல்லாம் மனதிற்கு ஒரு மன நிறைவைத் தரவில்லையோ அவையாவும் பொய்யான இன்பங்கள்*
*கவனிக்க : அப்படியானால் உண்மையான இன்பங்கள் இருந்தே ஆக வேண்டுமல்லவா?*
*அதிகமான மைசூர்பாக்கை தின்ற உடனேயே ஒரு சொட்டு தேனை நாவில் விட்டால், அந்த தேனின் சுவை தெரியாமல் தானே போகும்?*
*அந்த தேன் இனிக்க வேண்டுமானால், முன்னமே, வேறு இனிப்புச்சுவை உன் நாவில் இருந்திருக்க கூடாது*
*எனவே உன் புலன் இன்பங்களை கட்டுப்படுத்தி அனைத்து தற்காலிக சுகங்களையும், தவிர்த்தால் தான் நிரந்தர இன்பம் உனக்கு இனிக்க துவங்கும்*
*பொய்யான இன்ப போதையை தியாகம் செய்ய மறுத்தால், நாம் இந்த நிரந்தர இன்பத்தை எவ்வாறு உணர முடியும்?*
*உங்கள் தொழில், உங்கள் உத்தியோகம், உங்கள் வணிகம், உங்கள் குடும்பம் இன்னும் எந்தெந்த விஷயத்தில் எல்லாமோ*
*நீ, வெற்றி பெற்று இருக்கலாம்*
*ஆனால் அவையெல்லாம்* *வாழ்க்கையில் வெற்றி பெற்றதாக ஆகாது. எந்த சூழ்நிலையிலும் உனக்கு கவலையே இல்லை என்கிற நிலை வந்தால் தான் நீ மனிதவாழ்க்கையில் வெற்றி பெற்றவன் ஆவாய்?*
*வாழ்க்கையில் வெற்றி பெறுவதென்றால் என்ன என்பதை நாம் வரையறை செய்ய வேண்டும். பணம் சம்பாதித்தால் வெற்றி என்கிறீர்கள். நான்கு பேர் மதிக்கும்படி வாழ்ந்தால் வெற்றி என்று நினைக்கிறீர்கள். பணம் புகழ் கௌரவம் அந்தஸ்து இவையாவும் வெற்றியல்ல !!!*
*ஒன்றைப் பெற்று அதை பயன்படுத்தி, அதன்மூலம், கவலைகள் இல்லாத நிரந்தர ஆனந்தத்தில் வாழ்ந்து, அதன்மூலம், மரண பயமுமின்றி, சிரித்துக்கொண்டே நீ மரணத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே உன் வாழ்க்கையின் வெற்றியாகும்.*
*எப்போது வெளியே நடக்கிற சம்பவங்களால், உன்னுடைய உள்தன்மையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையோ , அதுதான் வாழ்க்கையின் வெற்றி.*
*அப்படியொரு வெற்றி வந்துவிட்டால் அந்த மனிதனுக்கு மரணம் என்பது ஒரு விஷயமே இல்லை.*
* ஆத்ம ஞானத்தை அடைந்து பாருங்கள் அதை மனதில் நிலை நிறுத்தி பாருங்கள் !!! கவலைகளை விளக்குகின்ற சக்தி கொண்ட ஞானபார்வை உங்களுக்கு கிடைத்திருப்பதை நீங்கள் உணர்வீர்கள் !!! ஆத்மா ஒன்றே நித்தியம் அந்த நித்தியமான இன்பமே நிரந்தர இன்பம் இந்த நிரந்தர இன்பத்தை அனுபவித்தவன் மரணத்தின் போதும் சந்தோஷமாக இருக்கும் ஆச்சரியத்தை காண்பீர்கள் இந்த உண்மையான வெற்றியை அடையத்தான் நீங்கள் மனிதனாக பிறந்து வந்திருக்கிறீர்கள் எனவே போட்டதெல்லாம் போட்டபடியே விட்டு விட்டு ஞானத்தை அடைய வாருங்கள் !!!
*விலை மதிக்க முடியாத இந்த ஆத்ம ஞானத்தை நீங்கள் தொலைபேசி மூலம் நான்கு மணி நேரத்தில் பெற்றுவிடலாம். முதல் (1½) மணி நேரத்தில் ஆத்ம ஞானத்தை பற்றிய அடிப்படை வகுப்பு
அடுத்த (1½) மணி நேரத்தில், ஞானம் மனதில் நிலை நிற்பதற்கான மனதுக்கு ஒரு பயிற்சி. அதன்பின்பு (1) மணி நேரம் ஹோம் ஒர்க் !!! மொத்தம் நான்கு மணி நேரத்தில் நீங்கள் ஆத்ம ஞானத்தை அடைந்து விடலாம் !!! அதன்பின் (a) எப்போதும் எந்த கவலையும் இல்லாத நிலைமையில் நீங்கள் வாழ்ந்திடலாம் !!! (b) மீண்டும் பிறவா வரம் பெற்று பிறவிப் பயனை அடைந்திடலாம் !!!
No comments:
Post a Comment