ஆர்கேநகரில் மாஜி டிஜிபி திலகவதிக்கே அதிக ஆதரவு! சசி கோஷ்டிக்கு மரண அடிதான்- ஒன் இந்தியா சர்வே....
சென்னை: ஆர்.கே.நகரில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக முன்னாள் டிஜிபி திலகவதி போட்டியிட்டால் அவருக்கே அதிக ஆதரவு கிடைக்கும்; சசிகலா அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் கேவலமான தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும் என ஒன் இந்தியாவின் கருத்து கணிப்பில் வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகரில் இவர்கள் போட்டியிட்டால் உங்கள் வாக்கு யாருக்கு? என்ற தலைப்பில் ஒன் இந்தியா தமிழ் இணையப் பக்கத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் 10,052 பேர் பங்கேற்றனர்.
இவர்களில் முன்னாள் டிஜிபி திலகவதிக்கு 4,312 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது மொத்தம் 42.9% பேர் திலகவதிக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துசோழனுக்கு 2-வது இடத்தை தந்துள்ளனர் நமது வாசகர்கள். அவருக்கு 2,717 பேர் அதாவது 27.03% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு 3- வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு 1,345 பேர் அதாவது 13.38% பேர் பிரேமலதாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஓபிஎஸ் அணியில் இருக்கும் நடிகை லதாவுக்கு 679 பேர் அதாவது 6.75% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு 5-வது இடம்தான்... மொத்தம் 577 பேர்தான் (5.74%) தமிழிசை சவுந்தராஜனுக்கு ஆதரவு தந்துள்ளனர்.
சசிகலா அதிமுக அணியின் கோகுல இந்திரா, வளர்மதி கடைசி 2 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. கோகுல இந்திராவுக்கு 222 பேர் (2.21%); வளர்மதிக்கு 200 பேர் (1.99%) மட்டுமே ஆதரவு தந்துள்ளனர்.

No comments:
Post a Comment