ஒரு கண்ணங் கருத்த உருவம்.
எட்டாவதுகூட எட்டாதவர்.
குக்கிராமத்தில் பிறந்தவர்.
ஆங்கிலப் புலமையே இல்லாதவர்,
தேங்காய் வியாபாரிக்கு மகனாகப் பிறந்தவர். தாய்மாமன் கருப்பையா
துணிக் கடையில் வேலை பார்த்தவர்.
காங்கிரசில் இணைகிறார்.
சுதந்திர போராட்டதில்
10 ஆண்டு சிறை அனுபவிக்கிறார்.
பின்னாளில் பார்த்தால்
இந்தியாவுக்கே காங்கிரஸ் தலைவர் ஆகிறார்.
அவர் விரல் நீட்டினார் -
லால்பாகதூர் சாஸ்த்ரி பிரதமர், அவர் விரல் நீட்டினார் - இந்திரா காந்தி பிரதமர்.
அவருக்கு டில்லியில் சிலை.
டில்லி ரோட்டுக்கு அவர் பெயர்.
பாராளுமன்ற வளாகத்தில் அவர் சிலை.
பாரத ரத்தினா பட்டம்.
தமிழகத்தில் மூன்றுமுறை முதல்வர்.
மூன்று ஐந்தாண்டு திட்டங்களை
தன்னிறைவோடு தந்தார்.
தமிழகம் முழுவதும்
பள்ளிக் கூடங்களைத் திறந்தார்.
மதிய உணவு மாணவர்க்கெல்லாம்
வழங்கினார். ஆறுகளுக்கு அணைகள்.
நூற்றுக் கணக்கான
தொழிற்சாலைகள் கொண்டு வந்தார்.
அப்போது செல் போனே இல்லை.
இன்டெர்நெட் இல்லை.
அவர்தான் நம் கர்மவீரர்,
பெருந்தலைவர் காமராஜர் !
எட்டாவதுகூட எட்டாதவர்.
குக்கிராமத்தில் பிறந்தவர்.
ஆங்கிலப் புலமையே இல்லாதவர்,
தேங்காய் வியாபாரிக்கு மகனாகப் பிறந்தவர். தாய்மாமன் கருப்பையா
துணிக் கடையில் வேலை பார்த்தவர்.
காங்கிரசில் இணைகிறார்.
சுதந்திர போராட்டதில்
10 ஆண்டு சிறை அனுபவிக்கிறார்.
பின்னாளில் பார்த்தால்
இந்தியாவுக்கே காங்கிரஸ் தலைவர் ஆகிறார்.
அவர் விரல் நீட்டினார் -
லால்பாகதூர் சாஸ்த்ரி பிரதமர், அவர் விரல் நீட்டினார் - இந்திரா காந்தி பிரதமர்.
அவருக்கு டில்லியில் சிலை.
டில்லி ரோட்டுக்கு அவர் பெயர்.
பாராளுமன்ற வளாகத்தில் அவர் சிலை.
பாரத ரத்தினா பட்டம்.
தமிழகத்தில் மூன்றுமுறை முதல்வர்.
மூன்று ஐந்தாண்டு திட்டங்களை
தன்னிறைவோடு தந்தார்.
தமிழகம் முழுவதும்
பள்ளிக் கூடங்களைத் திறந்தார்.
மதிய உணவு மாணவர்க்கெல்லாம்
வழங்கினார். ஆறுகளுக்கு அணைகள்.
நூற்றுக் கணக்கான
தொழிற்சாலைகள் கொண்டு வந்தார்.
அப்போது செல் போனே இல்லை.
இன்டெர்நெட் இல்லை.
அவர்தான் நம் கர்மவீரர்,
பெருந்தலைவர் காமராஜர் !
பச்சைத் தமிழன்
புகழ் ஓங்குக!
புகழ் ஓங்குக!

No comments:
Post a Comment