கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ள பொருட்களை சாப்பிடுவது கூடாது.
அதாவது வாயில் போட்ட உடனே கரையும் மைசூர்பாகு etc ( ச்ச….. என்னமா செஞ்சு இருக்காங்க.. என்று சொல்வீர்களே, அதுபோல எந்த இனிப்பையும் தொடக்கூடாது. அப்புறம் எதுக்கு வாழணும் என்று கேட்கிறீர்களா)
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்க செய்யும் உணவு வகைகள் மோசமானவை. அதை தவிர்த்து நீங்கள் புரொடின் மற்றும் கீரை வகைகள் சாப்பிடுங்கள்.
G I அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்கள் சமையல் அறையில் இருந்து அகற்றுங்கள்.
உடற்பயிற்சி அல்லது - 7 கிமீ நடப்பது.
பெரும் மதிய உணவு கொண்டால் இரவு உணவை தவிருங்கள்.
பொரித்த உணவு வகைகளை நன்றாக குறைக்க வேண்டும்.
இரவில் 8 மணிக்கு மேல் எதுவும் சாப்பிட கூடாது.
வேக வைத்த உணவை அதிகமாக சாப்பிடுங்கள்.
உணவில் ஆரோக்கியமான பருப்பு வகைகளை சேருங்கள்.
எதற்குமே வருத்தபடாத மன நிலை வேண்டும். மன அழுத்தம் பாதிப்பை ஏற்படுத்தும்...

No comments:
Post a Comment