Saturday, July 13, 2019

அச்சுறுத்தல்! 'டிஜிட்டல்' பண பரிமாற்றத்தில் மோசடிகள் அதிகரிப்பதாக... ரிசர்வ் வங்கி பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தல்.

பிரதமர், நரேந்திர மோடியின் கனவான, 'டிஜிட்டல் இந்தியா' திட்டம், மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ள போதிலும், அதில் பண மோசடிகள் நிகழ்வது அதிகரித்து வருவது, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக, நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கியும், பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
ரிசர்வ் வங்கி,கருப்பு பணம்,பரிமாற்றம், அச்சுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த கால ஆட்சியில், டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள், ரொக்கமாக பணப் பரிமாற்றம் செய்யாமல், வங்கி சேமிப்பு கணக்கு அட்டை, கடன் அட்டைகள் மற்றும் 'ஆன்லைன்' வாயிலாக பணப் பரிமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.  
எச்சரிக்கை
இதையடுத்து, 'பே - டிஎம்' போன்ற, 'மொபைல்' செயலிகள் அறிமுகமாகின. மக்கள், 'டிஜிட்டல்' பணப் பரிமாற்றத்துக்கு மிக வேகமாக மாறத் துவங்கினர். இதன் பலனாக, பெட்டிக் கடைகளில் துவங்கி, வணிக வளாகங்கள் வரை, டிஜிட்டல் பணப் பரிமாற்றம் விரிவடைந்துள்ளது. நகரங்களை தாண்டி, கிராமங்களிலும், டிஜிட்டல் இந்தியாவின் தாக்கம் கண்கூடாகி உள்ளது. கடந்த, 15 ஆண்டுகளில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு, 1,638 லட்சம் கோடி ரூபாய்க்கு, டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்றும், இது, 3,000 மடங்கு அதிகம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். அதே நேரம், பண மோசடி புகார்களும் அதிகரித்து வருவதாக, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


இது குறித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், அனுராக் தாக்கூர், ராஜ்ய சபாவில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த, 2016 - 17ம் நிதியாண்டில், ஏ.டி.எம்., டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் பணப் பரிமாற்றங்களின் போது, 1,367 மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, 2017 - 18ம் நிதியாண்டில், 2,127 ஆகவும்; 2018 - 19ல், 1,477 ஆகவும் அதிகரித்து உள்ளன. வங்கிகளில் பதிவு செய்யப்படும் மோசடி வழக்குகளில், டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களில் நிகழும் மோசடிகள், 50 சதவீதமாக உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
பாதுகாப்பு விதிமுறை
இது குறித்து, நிதி ஆலோசகர், யுவராஜ் சவுத்ரி கூறியதாவது:இந்திய பொருளாதாரத் துறையில், மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்து வரும் காலகட்டம் இது. இந்த மாற்றம் நடக்கும்போது, மோசடி சம்பவங்களையும் சந்தித்தாக வேண்டும். இது, வளர்ச்சியின் போது நடக்கும் தவிர்க்க முடியாத அம்சமாகும். இது போன்ற மோசடி களை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி, சட்ட திட்டங்களையும், பாதுகாப்பு விதிமுறைகளையும் மேலும் கடுமையாக்க வேண்டும். வங்கிகளும் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும். மேலும், சைபர் குற்றங்களுக்கான சட்ட திட்டங்கள், தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...