Friday, July 12, 2019

தெரிந்ததும்_தெரியாததும்.

தேவர் பசும்பொன் திருமகனார் இறப்பதற்கு முன் நடந்த கடைசி சம்பவம்:
தேவர் திருமகனார் தன் வாழ்நாளில் முன்னாள் காஞ்சி சங்கராச்சாரியாருடன் மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.
தேவருடைய கடைசிக் காலத்தில் சங்கராச்சாரியார் தேவரை காஞ்சிபுரத்திற்கு அழைத்தார்.
அந்த சமயம் ஒரு நிகழ்ச்சிக்காக டில்லி புறப்பட்டு கொண்டிருந்த தேவர், சங்கராச்சாரியார் அழைத்ததால் தன் டில்லி பிராயணத்தை ரத்து செய்து விட்டு சங்கராச்சாரியாரை பார்க்க சென்றார்.
காஞ்சிபுரம் சென்று அந்த துறவிக்கு நெஞ்சார்ந்து வணக்கம் செலுத்திய தேவரிடம் சங்கராச்சாரியார் "முத்து ராமலிங்கத் தேவரே, யாம் ராமேஸ்வரத்தில் ஒரு மடம் கட்டுவதாக உள்ளோம். ராமேஸ்வரம், திருப்புல்லாணி ஆகிய கோவில்களை கட்டியதெல்லாம் தங்களது பரம்பரை முன்னோர்களே.
அதனால் தங்களது கையால் அதன் பூமி பூஜைக்கு ஒரு செங்கல்லை எடுத்து தருமாறும் கேட்கின்றோம்" என்றவுடன் தேவர் மிக்க மகிழ்ச்சி அடைந்து அவர் கேட்ட படியே மடத்திற்காக செங்கல்லை எடுத்து தந்தார்.
பிறகு பேசிய தேவர் தன் வாழ்க்கை முடியப் போவதை உணர்வதாகவும் சீக்கிரமே தான் யோக சமாதியில் இறைவனுடன் கலக்க விரும்புவதாகவும் அதன் முன் தன் கைகளால் தூய அந்தணர் ஒருவருக்கு ஒரு பசுமாட்டை தானம் செய்ய விரும்புவதாகவும் கூறினார்" அதைக் கேட்ட சங்கராச்சாரியாரும் அங்கேயே ஒரு பசுமாட்டிற்கு ஏற்பாடு செய்து தர, தேவர் அதை ஒரு நல்ல அந்தணர்க்கும் தானம் செய்தார்.
பிறகு ஊர் திரும்பிய தேவர் திருமகனார் சிறு தினங்களில் தன் உயிர் வாழ்வை நீத்து இறைவனுடன் கலந்தார்.
இறப்பதற்கு கடைசி கால கட்டத்திலும் பிறருக்கு தானம் கொடுப்பதிலேயே இன்புற்ற யோகி தேவர் திருமகனார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...