உல்லாசமாக இருந்தோம் என கூறிவிட்டு வழக்கு தொடரும்போது கற்பழித்தார் என கூறி முரண்படுவது ஏன்?
மந்திரியாக்குவேன் என கூறி முகிலன் என்னை கெடுத்தார் என வழக்கு தொடர்ந்த ராஜேஸ்வரியே! மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடும் ஒரு நபரால் எவ்வாறு நமக்கு மந்திரி பதவி வாங்கி தரமுடியும் என்ற சிந்தனை இல்லாதவரா நீங்கள்?
28.02.17 அன்று நெடுவாசல் லாட்ஜில் பாலியல் தவறு செய்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நெடுவாசலில் ஒரு லாட்ஜ் கூட இல்லை என அங்கு வசிக்கும் மக்கள் கூறுகிறார்கள்.
மேலும், 28.02.17 அன்று முகிலன் அவருடைய தோழரான லெனின் என்பவரது வீட்டில்தான் உணவருந்தி தங்கியதாக லெனினும் அவரது அண்டை வீட்டார்களும் சாட்சி கூறுகிறார்களே. அதற்கு பதிலென்ன?
நீங்கள் ஏமாற்றப்பட்டவர் என்பது உண்மையானால் புகாரை அன்றைக்கே கொடுக்காமல் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தருவதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?
உங்களை பின்னால் இருந்து இயக்குவது யார்? பணம் வாங்குனீர்களா? அல்லது மிரட்டப் பட்டுள்ளீர்களா?
ராஜேஸ்வரியே! பதில் சொல்!

No comments:
Post a Comment