காஞ்சிபுரத்தில் ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரள்வதால் அத்திவரதரை தரிசிக்க முடியாமல் சாமான்ய மக்களில் சிலர் பாதியிலேயே திரும்பும் நிலையில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் வி.வி.ஐ.பி.க்கள் தரிசனம் செய்யும் இடத்தில் அனுமதிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் மீது மதுரை மட்டுமன்றி சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வரிச்சூர் செல்வத்தை போலீசார் சரித்திர பதிவேட்டுக் குற்றவாளியாக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அத்திவரதரதரை வெகு முக்கிய பிரமுகர்களுக்கான வி.வி.ஐ.பி. தரிசனம் செய்யும் இடத்தில் அதாவது அத்திவரதர் சன்னதியில் வெகு அருகில் அமர்ந்து தரிசனம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
அத்திவரதரை தினமும் சராசரியாக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்யும் நிலையில் மிக நீண்ட வரிசையிலும், நெரிசலிலும் சிக்கி அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சாமான்யர்கள் சிலர் திரும்பும் நிலை உள்ளது. இந்நிலையில் அறநிலையத்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரை சிறப்பு தரிசன வரிசையில் அனுப்பிவைப்பதாக புகார் எழுந்துள்ளது.
பிரபல ரவுடியான வரிச்சூர் செல்வத்தை வி.வி.ஐ.பி. சலுகையில் காவல்துறையினர் தான் அனுமதித்திருக்கக் கூடும் எனவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வரிச்சியூர் செல்வம் தரிசனம் செய்த போது பணியில் இருந்த அதிகாரிகள், தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:
Post a Comment