Tuesday, July 16, 2019

இன்று ஜட்ஜ்மென்ட் டே-

கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா மீது இன்று உச்சநீதிமன்றம் அளிக்க இருக்கும்
தீர்ப்பினை அனைவரும் எதிர்பார்த்து காத்து
இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு ஒரு ஆட்சி
மாற்றத்திற்கு துணை புரிவது போல தோன்றி
னாலும் எதிர்காலத்தில் தங்களுடைய வரம்புகளை மீறி செயல்பட்டு வரும் சபாநாய கர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் அமைய வேண்டும்.
உச்சநீதிமன்ற ம் அளிக்க இருக்கும் இன்றை ய தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதனால் குமாரசாமி ஆட்சி தப்பி விடாது. உச்சநீதிமன்றம் ராஜினாமா செய்துள்ள 10 எம்எல்ஏ க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏன் ஏற்க வில் லை? இதனால்அவர் தன்னுடைய கடமையை செய்ய வில்லை என்கிற அளவில் தான் எம்எ ல்ஏக்கள் தரப்பில் ஆஜரான முகுல் ரோஹ த்ஹியின் வாதம் இருந்தது.
சபாநாயகர் தரப்பில் ஆஜரான அபிசேக் சிங்வி அப்படி யெல்லாம் எடுத்தேன் கவிழ்த்து
தேன் என்று சபாநாயகர் செயல் பட முடியாது. சபாநாயகர் பொறுமையாக ராஜினாமா வின்
நோக்கம் என்ன? அவரா யோசித்து இந்த முடிவை எடுத்தாரா? இல்லை வேறு யாருடை ய தூண்டுதலின் பேரில் எம்எல்ஏக்கள் ராஜி
னாமா செய்தாரா? என்றெல்லாம் சபாநாயகர்
ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு சில காலம்
வேண்டும் என்கிறார்.
குமார சாமி தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான்
வாதங்கள் முழுக்க அரசியல் சார்ந்தவை. இதே மாதிரி ஒவ்வொரு மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து ஆட்சி மா ற்றத்திற்கு துணை நின்றால் ஜனநாயகத்தி ன் அடிப்படை ஆடி விடும் என்கிறார்.
மூன்று சீனியர் லாயர்களின் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்ச ன் கோகா ய்க்கு தலை சுற்றி இருக்கும்.இது
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 190 (3) வது பிரிவினை முன் வைத்து நடைபெற்று
வந்த வாதங்கள்.
ஒரு எம்எல்ஏ தன்னுடைய தலைமை சரியி. ல்லை என்று நினைத்து ராஜினாமா செய்ய
விரும்பினால் அவர் தன்னுடைய ராஜினாமா
வை அவரே எழுதி கையெழுத்து இட்டு இரு ந்தால் போதும் அவருடைய ராஜினாமாவை
சபாநாயகர் ஏற்க வேண்டும் என்கிறது.
அதே நேரத்தில் அந்த ராஜினாமா voluntary or genuine அதாவது தானாக முன் வந்து அளிக்க ப்பட்டதா என்று அதன் உண்மை தன்மையை ஆராயவும் சபாநாயகர் க்கு அதிகாரம் அளி த்து இரு க்கிறது.இதை வைத்து தான் சபாநா யகர் ரமேஷ் குமார் விளையாடி வருகிறார்.
இந்த வாதத்தில் சபாநாயகர்க்கு இத்தனை
நாட்களுக்குள் ராஜினாமா வை சபாநாயகர்
ஏற்க வேண்டும் என்று அவருக்கு உத்தரவு இட நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்கிற வாதமும் சேர்ந்து கொள்வதால் இந்த
வழக்கின் தீர்ப்பு எதிர்காலத்தில் சபாநாயகர்
க்கு உள்ள வானாளவிய அதிகாரத்தை வரம்பு
க்குள் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது.
எனவே இன்றைய தீர்ப்பை எதிர்பார்த்து அனைவரின் பார்வையும் உச்சநீதிமன்ற த்தை நோக்கியே இருக்கிறது..தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீபக் குப்தா மற்றும்
அனிருத்தா போஸ் ஆகிய மூன்று பேர் அடங்கிய இந்த பெஞ்சின் தீர்ப்பு தான் நாளை
சபாநாயகர்களை பெஞ்சில் ஏற்றி கேள்வி கேட்க முடியும் என்கிற வகையில் அமையும்.
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...