தமிழக சட்டமன்றத்தில் மானியக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிற சூழலில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர் இருந்தாலும் நேற்று மாலை நேர கூட்டத்தில் எதிர்க்கட்சி வரிசையில் வெறும் 21பேர்தான் இருந்தனர். மற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் வேற முக்கிய (இதைவிட வேற முக்கிய வேலை என்னவா இருக்கும்?) வேலையாக வெளியில் சென்றுவிட்டார்களாம்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் இப்படியென்றால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பற்றி சொல்லவா வேண்டும்?
(மானிய கோரிக்கையில் கூட பங்குகொள்ள முடியாத இந்த எம்எல்ஏக்களால்தான் தமிழகம் தழைத்தோங்க போகிறது?)
விவாதத்தில் இருந்த அமைச்சர்கள் சிலரைத் தவிர பலரும் வெளியில்தான்.
சரி விஷயத்துக்கு வருவோம், விவசாயத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் துரைக்கண்ணு, துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் புள்ளிவிவரங்களுடன் தயார் நிலையில் ஆஜரானார்கள்.
விவாதத்தில் தி.மு.க. சார்பில் கேள்விகளைக் கேட்க வேறுயாரும் இல்லாததால், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும் தளி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது, பிரகாஷ் தனக்கு தமிழில் சரியாகப் பேசத்தெரியாது என்று கூறி தெலுங்கில் பேசுவதாகக் கூறினார்.
உடனே சபாநாயகர் தனபால், அவையில் மொழிமாற்றம் செய்வதற்கான வசதிகள் இல்லை, அதனால் நீங்கள் பேசுவதும் யாருக்கும் புரியாது, அது பதிவாகாது. எனவே நீங்க எல்லோருக்கும் புரியுற மாதிரி மெதுவா உங்களுக்கு தெரிந்த தமிழிலேயே பேசுங்க என சொன்னார்.சபா நாயகர் தனபால் தமிழில் இப்படி சொன்னதும் அவருக்கு புரியாமல்,பிரகாஷ் மீண்டும் தெலுங்கில் பேச முயன்றார். அப்போது உடனே எழுந்த அமைச்சர் ஜெயக்குமார், தெலுகு தெலிது தமிழிலேயே மாட்லாடு" என சொல்லிவிட்டு அமர்ந்தார். அதை புரிந்து கொண்ட பிரகாஷ் எம்.எல்.ஏ தமிழில் பேசமுடியாமல் தனது பேச்சை அத்துடன் முடித்துக்கொண்டார்.
தமிழ் தெரியாதவரை தமிழகத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளராகவும்,மற்றும் ஒரு தொகுதிக்கு MLA
வாகவும் ஆக்கியுள்ள தி.மு.க.தான் தமிழ் மொழியின் காவலர்?
தமிழுக்காக தன் உயிரையும் கொடுப்போம் என நாடாளுமன்றத்தில் வாய் கிழிய கத்தும் தி.மு.க. மகளிர் அணிதலைவியும் எம்.பி.யுமான கனிமொழி,தமிழில் பேசக்கூட தெரியாதவரை ,தன் கட்சி MLA வாக ஆக்கியது ஏன்?
சட்டசபையில் என்ன விவாதம் நடக்கிறது என்று கூட புரிந்து கொள்ள முடியாதவர் MLA வாகி அந்த தொகுதிமக்களுக்கு என்ன பயன்? ஏன் அவர் அங்கு அமர்ந்திருக்க வேண்டும்?எதற்கு இவர்க்கு அரசு சம்பளம்?
தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசுகளின் வேலைகள் எல்லாம் தமிழனுக்கு மட்டும்தான் வேண்டும்?தமிழகத்தில் உள்ள கல்வியும்,மருத்துவ சீட்டும் தமிழனுக்கு மட்டும்தான் வேண்டும்?பன்னாட்டு விமான நிலையத்திலும் தமிழில் மட்டும்தான் எழுதி இருக்க வேண்டும் என்பவர்கள்,தமிழில் பேச,தமிழில் பேசுவதை புரிந்து கொள்ளக் கூடியவன்தான் தமிழக சட்டசபைக்கு நிற்க வேண்டும் என்று கூறாதது ஏன்? தமிழக சட்டசபையில் தமிழில் மட்டுமே நடக்கும் விவாதங்களை புரிந்து கொள்ள கூடியவர்களாக கூட இல்லாதவர்களை MLA வாக ஆக்குவது ஏன்?சீமான் போன்றவர்களும் மற்றும் தமிழ் போராளி என்ற போலி வேஷதாரிகளும் இதை கேள்வி கேட்காதது ஏன்?
தமிழக சட்டபைக்கு தமிழ் தெரியாதவனை எம்எல்ஏ வாக ஆக்கி,வேற்று மொழியை இங்கு பேச விட்டு விட்டு,நாடாளுமன்றத்தில் தமிழ் தெரியதவன் அமர்ந்து இருக்கும் அவையில் தமிழ் வாழ்க எனும் கோஷம் யாரை ஏமாற்ற?நீதி மன்றத்தில் தமிழ் வேண்டும்,ஆனால் சட்டசபைக்கு தமிழ் தெரியாதவன் ஒகே?அட அட என்ன ஒரு மொழி பற்று?தமிழ் மொழிக்காக என்ன ஒரு தியாகம்?
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

No comments:
Post a Comment