Wednesday, July 10, 2019

கிராமப்புற வங்கிகள் இணைப்பு வேகமெடுக்கும் நடவடிக்கைகள்.

‘நாட்­டி­லுள்ள, 21 பிராந்­திய கிரா­மப்­புற வங்­கி­கள், ஒன்­றி­ணைக்­கப்­பட்­டுள்ளன,’’ என, நிதித்­துறை இணை­ய­மைச்­சர், அனு­ராக் தாகூர், லோக்­ச­பா­வில் தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து, அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:பிராந்­திய கிரா­மப்­புற வங்­கி­களில், 21 வங்­கி­கள், அவற்­றுக்­கான ஆதார வங்­கி­கள் மற்­றும் மாநில அர­சு­களின் கருத்­து­களின் அடிப்­ப­டை­யில், ஒன்­றி­ணைக்­கப்­பட்­டுள்ளன. பிராந்­திய கிரா­மப்­புற வங்­கி­களில், நிர்­வா­கச் செலவை குறைக்­கும் வகை­யி­லும், தொழி­ல்நுட்ப வச­தி­களை அதி­கம் பயன்­ப­டுத்­த­வும், மூல­த­னத்தை அதி­க­ரிக்­க­வும் ஒரு செயல்­திட்­டம், நபார்டு வங்­கி­யின் ஆலோ­ச­னை­யு­டன் உரு­வாக்­கப்­பட்­டது.

அதன்­படி, மாநி­லத்­திற்­குள் உள்ள பிராந்­திய கிரா­மப்­புற வங்­கி­கள் ஒருங்­கி­ணைக்­கப்­பட வேண்­டும் என­வும், மொத்­தம் உள்ள, 56 வங்­கி­களை, 38 ஆக குறைக்க வேண்­டும் என­வும் சிபா­ரிசு செய்­யப்­பட்­டது. இதன் அடிப்­ப­டை­யில், ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...