Tuesday, July 16, 2019

வாழ்க்கையில் முன் எச்சரிக்கையும், சமயோசித புத்தி உடையவர்கள் சுகமாக வாழ்வார்கள்.

நீர் நிறைந்த, அதிக மீன்கள் உள்ள குட்டையில்
மூன்று. மீன்கள் நட்புடன் இருந்து வந்தன. அந்த
மூன்று மீன்களுள் ஒன்று முன் எச்சரிக்கை யுள்ள மீன். இன்னொன்று சமயத்திற்கு
ஏற்றபடி நடந்து கொள்ளக் கூடியது. கடைசி மீன்
புத்தி குறைவானது.
ஒரு சமயம் மீன் பிடிப்பவர்கள் நிறைய மீன்களை பிடிக்க வேண்டி, குட்டையின் நான்கு
புறமும் வடிகாலை வெட்டி விட்டனர். அதனால்
நீர் குறைய ஆரம்பித்தது. அவர்கள் போன பின்,
முன்னெச்சரிக்கையுள்ள மீன், " நீர் குறைய
ஆரம்பிக்கிது. ஏதோ ஆபத்து வரப் போகிறது.
இதனால் வேறு நீர் நிலைக்குச் செல்வது
புத்திசாலித்தனம் " என்று கூறியபடி அது வேறு
இடம் சென்றுவிட்டது.
சமயோசித புத்தியும் மீன், "ஆபத்து வரும் போது
அதற்கேற்றவாறு ஏதாவது செய்து தப்பித்துக்
கொள்ளலாம் " என்றவாறு இருந் தது.
புத்திமந்தமான மீனோ. " ஆபத்து வரும் என
நினைக்கவில்லை. நெடு நாட்களாக வாழ்ந்து
கொண்டிருக்கும் இக் குட்டையை விட்டு வர
என் மனம் ஒட்டவில்லை " எனச் சொன்னது.
மறுநாள் மீன் பிடிப்பவர்கள் வந்து மீன்களைப்
பிடித்தனர். புத்தி மந்த மீன் மாட்டிக் கொண்டது.
சமயோசித மீன் அதன் வலையைக் கவ்விப்
பிடித்துக் கொண்டது. வலையைக் கழுவும்
போது, இந்த மீன் தப்பித்துக் கொண்டது.
வாழ்க்கையில் முன் எச்சரிக்கையும், சமயோசித
புத்தி உடையவர்கள் சுகமாக வாழ்வார்கள்.
இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...