Thursday, July 11, 2019

ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! மக்களவை சபாநாயகர் உத்தரவு.

ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! என்று கல்லூரியிலோ, பள்ளியிலோ ஆசிரியர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். மக்களவைத் தலைவரும் இதையே சொல்ல வேண்டிய நிலையில்தான் நம் மக்களவை உறுப்பினர்களின் ஒழுக்கமும் உள்ளது.
மக்களவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா,
நேற்று அவை நடவடிக்கைகளை கவனிக்காமல் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த எம்பிக்களை நோக்கி, "சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டும், சிலர் ஆங்காங்கே நின்று கொண்டும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இது அவை. நீங்கள் நினைப்பது போலத்தான் அவையை நடத்த வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார். ஆனால், அது சரியா?" என்று பிர்லா கேள்வி எழுப்பினார்.
மேலும், "மக்களவையில் எம்.பி.க்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒருகாலும் நான் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்ற வளாகத்தின் வெளிப்புறம் இரண்டு அடி எடுத்து வைத்தால் வந்துவிடும். ஒரு வேளை உங்களுக்கு பேச வேண்டும் என்றால் வளாகத்துக்குச் சென்றுவிடுங்கள்" என்று கூறினார்.
இதற்கு திரிணாமூல் எம்பி சுதீப் கூறுகையில், "பிர்லா மிகவும் கண்டிப்புடன் இருக்கிறீர்கள், எம்.பி.க்களின் இந்த பழக்கத்தை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள முடியாது" என்று கூறினார்.
எளிதில் மாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு ஊறிப்போய் விட்டதா?இதை சொல்ல வெட்கமாக இல்லை இந்த எம்பிக்கு?இதற்காகவா இத்தனை லட்சம் பேர் ஒட்டுப்போட்டு,இத்தனை கோடி செலவு செய்து,இத்தனை லட்சம் சம்பளமும் சலுகைகளும் நம் வரி பணத்தில் கொடுக்கப்படுகிறது?உங்களை நம்பி இந்த நாட்டையே ஒப்படைத்து விட்டு,நம் நாடும் வல்லரசு ஆகும்..நம் குழந்தைகள் எதிர்காலம் ஔிமயமாக இருக்கும் என கனவு கண்டு கொண்டு உள்ளோம்?நீங்கள் தூங்கவும், ஊர் கதை பேசவுமா உங்களை எம்பி ஆக்கினோம்?சுதந்திரம் வாங்கிய முதல் இதைதான் அங்கு செய்கின்றீர்களா?இல்லாவிட்டால் எப்படி எளிதில் மாற்றிக் கொள்ள முடியாததாகும்?
இப்படிப்பட்டவர்களுக்காகவேதான் பிரதமர் அவர்கள் இப்படி ஒரு அருமையானவரை சபாநாயராகத் தேர்வு செய்துள்ளார்.
தேசிய அரசியலில் அதிகம் தெரியப்படாத ஒம் பிர்லா,இந்த மக்களவையின் சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், அவரை வரவேற்று உரையும் வழங்கினர். பதவி ஏற்ற முதல்நாளிலேயே பேசிய ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் மத ரீதியான முழக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
முன்னதாக, பதவியேற்கும்போது சில உறுப்பினர்கள் சில முழக்கங்களை அவையில் முழங்கினர். தமிழக எம்.பி-க்கள், 'வாழ்க பெரியார், வாழ்க திராவிடம்' போன்ற முழக்கங்களைச் சொல்லும்போது, பதிலுக்கு பா.ஜ.க-வினர் 'ஜெய் ஸ்ரீ ராம், ஜெய்ஹிந்த், வந்தே மாதிரம்' போன்ற முழக்கங்களை வைத்தனர். சில திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி-க்கள் 'ஜெய் காளி' என்றும் முழங்கினர்.
நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி அதிர் ரஞ்சன் சௌத்திரி, ``பல கட்சிகள் கொண்ட ஜனநாயகத்தில், இதுபோன்ற முழக்கங்கள் நல்லதல்ல” என்று பேசினார். இவரது கருத்தை வரவேற்ற சபாநாயகர் ஓம் பிர்லா, ``இந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். இந்தக் கோயில், நாடாளுமன்ற விதிகளின்படி செயல்படும். இந்த இடத்தின் நன்மதிப்பை உணர்ந்து செயல்பட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு நம்முடையது. உலகம் நம்மை கவனிக்கிறது. நமது நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றம், மத ரீதியான முழக்கங்களை முன்வைக்கும் இடம் கிடையாது. பதாகைகளை ஏந்தும் இடம் கிடையாது. அதற்கான இடங்கள் பல இருக்கின்றன. உறுப்பினர் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லலாம். என்ன குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அது இங்கு விவாதிக்கப்படும். அரசின் திட்டங்களை விமர்சிக்கலாம். ஆனால், இங்கு வந்து மத ரீதியான முழக்கங்கள் செய்ய வேண்டாம்.
அனைத்துக் கட்சிகளும் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த நம்பிக்கையைக் காப்பதே எனது கடமை. இங்கு இருக்கும் அனைவருக்கு அவர்களின் கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. இந்த அரசு, தனி மெஜாரிட்டியில் வெற்றிபெற்றுள்ளது. அதனால் அரசாங்கமும் கூடுதல் பொறுப்புடன் நடந்துகொள்வது மிக அவசியம். எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில்சொல்வது அவர்களின் கடமை. நான் கண்டிப்புடன் அவையை நடத்த விரும்பவில்லை. அனைவரும் தங்களின் மனத்தில் இருப்பதை இங்கு பேசலாம். ஆனால், விதிகளுக்கு உட்பட்டு பேச வேண்டும்” என்றார்.
சபாநாயகராகப் பதவியேற்ற முதல் நாளிலேயே அதிரடியான கருத்துகள்மூலம் கவனம் பெற்றிருக்கிறார், ஓம் பிர்லா. இவர், ராஜஸ்தானின் கோடா தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.பி-யாக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நடுநிலையாளரை சரியான பதவிக்கு தேர்வு செய்த பிரதமருக்கு நன்றி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...