Thursday, July 11, 2019

ஒரு முறை இவ்வாறு நிகழ்ந்தது.

ஒரு ஜென் துறவி இறக்கப் போகிறார்.
அவர் தன் சீடர்களைக் கூப்பிட்டு,
எனக்கு சாவதற்கு வழி சொல்லுங்கள். என்ன மாதிரி நிலையில் சாகலாம் என்று சொல்லுங்கள் என்றார்.
அந்தத் துறவி சற்று விநோதமானவர்.
சற்று பைத்தியக்காரர்.
ஆனால் அழகானவர்.
அவருடைய சீடர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
அவர்கள் தங்கள் குருநாதர் வேடிக்கைக்காகச் இப்படிச் சொல்கிறார் என்று நினைத்தார்கள்.
ஏனெனில் அவர் மிகவும் நகைச்சுவை நிறைந்தவர்.
சிலர் சொன்னார்கள்.
கோவிலின் மூலையில் நின்று கொண்டு இறந்தால் எப்படி இருக்கும்?
துறவி சொன்னார்,
நான் முன்பே இது மாதிரி கேள்விப்பட்டிருக்கிறேன்.
முன்பு ஒரு துறவி நின்று கொண்டே இறந்து போயிருக்கிறார்.
ஆகவே இது சரிப்பட்டு வராது.
சிலர் சொன்னார்கள்,
தோட்டத்தில் நடந்து செல்லும்போது இறந்து போவது நன்றாக இருக்கும்.
அவர் சொன்னார்,
சீனாவில் ஒருவர் கடந்து கொண்டிருக்கையில் இறந்து போனதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஒருவர் மிகவும் அபூர்வமான
ஒரு யோசனையைச் சொன்னார்.
தலைகீழாக நின்று கொண்டு, அதாவது சிரசாசனத்தில் இருந்து கொண்டு இறந்து போகலாம்.
யாரும் இதுவரை தலைகீழாக நின்று இறந்தது கிடையாது.
தலைகீழாக நிற்பது மிகவும் சிரமமானது.
தலைகீழாக நின்று கொண்டு தூங்குவது மிகவும் கடினமானது.
இறப்பது இன்னும் அதிகக் கடினமானது.
தூங்குவதென்பதே முடியாத காரியம்.
மரணம் மிகப் பெரிய தூக்கமாகும்.
இது முடியாத காரியம்.
சாதாரண தூக்கம்கூட சாத்தியமல்ல.
ஆனால் துறவி இந்த யோசனையை ஏற்றுக் கொண்டார்.
அவர் அதை மிகவும் ரசித்தார்.
அவர் சொன்னார்,
இது நன்றாக இருக்கிறது.
அங்குள்ளோர் எல்லோரும்
இவர் வேடிக்கைக்காக
அப்படிச் சொல்கிறார் என்று எண்ணினார்கள்.
ஆனால் அவர் தலைகீழாக நிற்க ஆரம்பித்து விட்டார்.
அவர்கள் பயந்து போயினர்.
அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
இப்போது என்ன செய்வது?
அவர் கிட்டத்தட்ட இறந்துவிட்டார் என்று அவர்கள் நினைத்தார்கள்.
என்ன அதிசயமாக இருக்கிறது.
ஒருவர் இறந்தவர் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறார்.
அவர்கள் பயந்து போய் அருகிலுள்ள மடத்திலுள்ள,
ஒரு பெரிய சந்நியாசினியாக உள்ள அவருடைய அக்காவைக் கூட்டி வந்தனர்.
அவள் வந்தால் அவள் ஏதாவது இப்பொழுது செய்ய முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள்.
ஏனெனில்
அவளுக்கு தன் தம்பியைப்பற்றி நன்றாகத் தெரியும்.
அக்கா வந்து தம்பியைப் பார்த்து சொன்னாள்.
இக்யூ (இக்யூ என்பது அந்தத் துறவியின்பெயர்)
முட்டாள்தனமாக இருக்காதே!
இறப்பதற்கு இது வழி அல்ல.
இக்யூ சிரித்துக் கொண்டே சிரசாசனத்திலிருந்து எழுந்து நின்று கொண்டு கேட்டார்.
அப்படியானால்,
இறப்பதற்கு எது சரியான வழி?
அவள் சொன்னாள்.
பத்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு இறந்து போவாயாக,
இறந்து போவதற்கு இதுவழியல்ல...
நீ எப்போதும் முட்டாளாகவே இருக்கிறாய்.
எல்லோரும் சிரிப்பார்கள்.
அவர் பத்மாசனத்தில் உட்கார்ந்து உயிரை விட்டார் என்றும்,
அதன் பிறகு அவ்விடத்தை விட்டு அக்கா சென்று விட்டாள் என்றும் சொல்லப்படுகிறது.
ஓர் அழகான மனிதன்.
ஆனால் தான் இறக்கப் போகிறார்
என்பதை எப்படித் தீர்மானிக்க முடிந்தது?
அதற்கான நிலையையும் தேர்ந்தெடுத்தார்!
அவருடைய ஜீவ சக்தி சுருங்க ஆரம்பித்தது.
அவரால் அதை உணர முடிந்தது.
ஆனால் உடலுடன் மேலோட்டமாக இல்லாமல்,
ஆழமாகத் தொடர்பு இருந்தால் மட்டுமே இம்மாதிரி உணர முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...