ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் ரிச்சா பாரதி. 19 வயதானஇவர் இங்குள்ள கல்லுாரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த 18 – ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தப்ரேஷ் அன்சாரி என்பவன் பைக் திருடியபோது கையும் களவுமாக பிடிபட்டான். அவனை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தி்ல் அவன் மாரடைப்பால் மரணம் அடைந்தான்.
இந்த நிலையில் பைசு என்பவர், டிக்டாக்கில் “காவல் நிலையத்தில் மரணமடைந்த தப்ரேஷ் அன்சாரியின் குழந்தைகள், அவரை அடித்தவர்களை பழிவாங்க தீவிரவாதிகளாக வருவார்கள்” என்று கூறியிருந்தார்.
இந்த பதிவிற்கு பதிலளித்த கல்லூரி மாணவி ரிச்சா பாரதி, “ ஏன் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பழிவாங்கலில் ஈடுபடுகிறார்கள்? காஷ்மீர் பண்டிட்டுகளும், இந்துக்களும் தீவிரவாதிகளாக வேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
இதுதொடர்பாக “அஞ்சுமன் இஸ்லாமியா” என்ற முஸ்லிம் மதவாத அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. முஸ்லிம்களின் மத உணர்வை ரிச்சா பாரதி புண்படுத்தி விட்டார் என்று அவர்கள் தங்களின் புகாரில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த புகார் அளிக்கப்பட்ட உடனேயே எப்ஐஆர் போடப்ட்டது. 2 மணி நேரத்திற்குள் மாணவி ரிச்சா பாரதி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ராஞ்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ரிச்சா பாரதிக்கு நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கியது.
நீதிபதி மணிஷ் குமார் தனது உத்தரவில், “மாணவி ரிச்சா பாரதி, முஸ்லிம்களின் புனித நுாலான திருக்குரானின் ஐந்து பிரதிகளை வாங்கி, ஒரு பிரதியை அன்சுமன் இஸ்லாமியா முஸ்லிம் மதவாத அமைபிடம் வழங்க வேண்டும்.
மற்ற 4 குரான்களையும் பள்ளி அல்லது கல்லுாரிகளில் உள்ள நுாலகங்களுக்கு வழங்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார்.
நீதிபதியின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த மாணவி ரிச்சா பாரதி, “நான் குரான் வழங்க மாட்டேன்.
இதற்க்காக சிறையில் இருக்க தயார். ஆனால் குரான் வாங்கி கொடுக்க மாட்டேன்
இப்போது என்னை குரான் கொடுக்க சொல்வார்கள், பிறகு என்னை முஸ்லிம் மதத்துக்கு மாறச் சொல்வார்கள்.
இந்து மதத்தை பற்றி பேசும் முஸ்லிம்கள் யாரையாவது ராமாயாணயத்தையோ அல்லது துர்கா பற்றிய புனித நூலையோ கொடுக்கச் சொல்லி இருக்கிறார்களா?” என்று தனது நியாயமான ஆதங்கத்தை கேள்விகளா எழுப்பினார்.
நீதிபதி மணிஷ் குமாரின் இந்த உத்தரவும், அதற்கு மாணவி ரிச்சா பாரதியின் ஆணித்தரமான எதிர்ப்பும் காட்டுத்தீ போல பரவியது. இந்துக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது.
மாணவி ரிச்சா பாரதிக்கு ஆதரவு பெரிகி வருகிறது. ஒரே நாளில் அவர் அகில இந்திய ஹீரோவாக ஆகிவிட்டார். அவருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
இதற்கிடையே, ரிச்சா பாரதியின் வழக்கு செலவுக்காக நிதி உதவி கோரி அறிவித்த சில மணி நேரத்தில் 7,20,035 ரூபாய் குவிந்தது.
அதாவது 6 லட்சம் ரூபாய் தேவைபடும் என்று எதிர்ப்பார்த்தனர். அதற்கு அதிகமான நிதி உடனே சேர்ந்துவிட்டதால், மேற்கொண்டு நிதி வழங்க வேண்டாம் என்று நிறுத்தி வைத்துள்ளனர்.....
No comments:
Post a Comment