Wednesday, July 17, 2019

ஸ்ரீ வருண தேவன் & ஸ்ரீ வாயு பகவான்.

அஷ்டம் என்ற சொல்லுக்கு ‘எட்டு’ என்று பொருள். எட்டு திசைகளுக்கு உரிய காவலர்களையே, ‘அஷ்டதிக்கு பாலகர்கள்’, ‘எண்திசை நாயகர்கள்’ என்று அழைக்கிறோம்.
அஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர்.
இவர்கள் உயிர்களின் செயல்களுக்கு சாட்சியாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இவர்களை வணங்கினால் எல்லா வளங்களும் கிடைப்பதாக ஐதீகம்.
அஷ்டதிக்கு பாலகர்களுள் ஒருவர் வருண தேவன். மற்றும் ஒருவர் வாயு பகவான்.
மேற்கு திசையின் காவலராக இருப்பவர் வருணன்.
இவரை மழையின் கடவுள் என்று போற்றுகிறார்கள்
ஆயிரம் கண்கள் உடையவன்
இந்த தெய்வத்தின் கண் இமைகளில் இருந்து மழைப் பெய்கிறது.
இவரது மனைவியின் பெயர் வாருணி.
வருண பகவானின் வாகனம், மகரம் என்னும் மீன் ஆகும்.
இவர் வருணாஸ்திரம் என்ற ஆயுதத்தை தாங்கியுள்ளார்.
நெய்தல் எனப்படும் கடல் சார்ந்த நில மக்களின் தெய்வம் வருணன் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது
வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த ஆதித்தர்கள் எனப்படும் பன்னிருவரில் ஒருவன்.
உலகம் முழுவதும் பரந்து இருப்பவன் இவன் .
வருணன் ஆகாயத்தைக் குறிப்பவனாகவும், மேகம், மழை, ஆறு, கடல் போன்ற நீர்சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான்.
இவரை வழிபாடு செய்தால், தேவையான மழை கிடைத்து உணவு, பஞ்சம் நீங்கும்.
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி உடனுறையான பெரியகோவிலில்தான் இந்தியாவிலேயே வருண பகவான் தனி சன்னதியில் மேற்கு புறத்தில் வீற்றிருக்கிறார்.
வேறு எங்கும் இதுபோல் தனி சன்னதியில் வருண பகவான் இருப்பது இல்லை.
வருணனை வணங்கி தேவையான நேரத்தில் தேவைபடும் மழையை பெறுவோம்.
வாயு பகவான்
உயிராய் இருந்து மக்களை உய்விப்பவன். காற்றாய் இருந்து ககனத்தைக் காப்பவன். புயலாய்த் தோன்றி புவனத்தை அழிப்பவன் அவரே காற்று ஆவார்.
இவரை, வடமொழியில் வாயு என்பர். பிற அட்டதிக்குப் பாலகர் தேவர் என்று அழைக்கப்பட இவரோ வாயு பகவான் ஆவார்.
காற்றின் அதிபதி ,
வடிவமில்லாதவர் உயிருக்கு ஆதாரமானவர்.
ஆயுள் விருத்தி தருபவர்.
வடமேற்கு திசையின் காவலர் தான் இந்த வாயு பகவான்.
சிரஞ்சீவியும், ராமரின் பக்தருமான அனுமன் மற்றும் மகாபாரத காலத்தில் வாழ்ந்த பீமன் ஆகியோரின் தந்தை இந்த வாயு பகவான் என்று புராணங்கள் சொல்கின்றன.
மரீசி என்பவர் ஒரு ரிஷி. இவருக்கு பிறந்தவர் காசிபர் என்ற முனிவர்.
இவன் தட்டப் பிரசாபதியின் குமாரிகள் பதின்மூவரை மணந்தார். அவர்களில் ஒருத்தியின் மகனாகத் தோன்றியவரே வாயு.
வாயுவுக்குரிய பதி கந்தவதி. தேவி அஞ்சனை என்ற கோரா வட மேற்றிசைக்கு அதிபதி.
பயணிப்பது மான் வாகனத்தில் ஆயுதமோ துவசம் எனப்படும் கொடி வாயு என்பது ஒரு பதம் அதாவது பதவி அதைத் தவத்தால் அடைந்தார்.
தசவாயு
வாயு மனித உடலில் இருதயத்தில் பிராணனாகவும், குதத்தில் அபானனாகவும், கழுத்தில் சமானனாகவும், நாபியில் உதானனாகவும், தேகத்தில் வியானனாகவும், கை-கால்களில் நாகனாகவும், தொடு உணர்வில் கூர்மனாகவும், முகத்தில் கிருகரனாகவும், வியர்த்தலில் தேவ தத்தனாகவும், உயிர் போகும் போது தனஞ்சயனாகவும் இருந்து செயல்படுவான். இதனை தசவாயு என்று வைதீக வழக்கில் கூறுவர்.
இவன் மதங்க முனிவரிடம் தவறாக நடந்து கொண்டதால் சாபம் பெற்று, உடல் பலம் அற்று திரியம்பகசேத்திரத்தில் சிவபூசை செய்து சிவனால் மீண்டும் உடல் பலம் பெற்றார்.
முருகனின் திரு அவதாரத்திற்குக் காரணமான சிவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஆறு நெருப்புப் பொறிகளைத் தாங்கிச் சென்று சரவணப் பொய்கையில் இட்டு முருகனுக்கு சரவணன் என்ற பெயர் வரக்காரணமாய் இருந்தவர்.
மேலும், ஸ்கந்தப் பெருமானுக்கும், சூரபத்மனுக்கும் நிகழ்ந்த போரில், சரவணனுக்குச் சாரதியாய் இருந்து பணிபுரிந்தவர்.
அஞ்சனை என்ற அப்சரசைக் கூடி, அநுமனைத் தோற்றுவித்தவர். அநுமானுக்கு நீ யாரைக் காண்கிறையோ, அவரிடத்தில் உனக்கு அதிக அன்பு மேலிடுகையில் அவர்களுக்கு அடிமை செய் எனக் கட்டளை இட்டருளியவர்.
இதனாலேயே, இராமனுக்கு அநுமன் அடிமையானான்.
அநுமனை ஒரு முறை இந்திரன் வச்சிரத்தால் அடித்த போது, தன் இயக்கத்தை நிறுத்தித் துண்டித்தவர்.
ஆதி சேடனுக்கும், தனக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில், மேருவின் சிகரத்தைப் பெயர்த்து எறிந்தவர்.
அனைத்து உயிர்களுக்கும் மூச்சுக்காற்றாய் இருந்து அருளுபவர். பச்சை நிறத்தினர்.
வடமேற்குத் திசைக் காவலர். சதா சஞ்சரித்துக் கொண்டேயிருப்பவர். இவருக்கு பூதாத்மா என்ற பெயருமுண்டு.
இவரை வழிபட்டால், நீண்ட ஆயுள் அடையலாம் சுவாச நோய் நீங்கும். எப்போதும் தென்றல் சுகத்தில் இன்புற்று இருக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...