Friday, July 12, 2019

தாக சாந்திக்கு வேண்டுகோள்!

இன்று, தமிழக சட்டசபையில், வேளாண்துறை மான்யக் கோரிக்கையில் பேசிய காங்கேயம் தொகுதி உறுப்பினர், தனியரசு, தமிழகத்தில், குறிப்பாக கிராமங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டமும், கெருக்கடியும் காணப் படுவதாகவும், இதனால் ‘குடிமக்களுக்குக்’ கஷ்டம் நிலவுகிறது என்றும் சொல்லி, அரசு, தமிழகம் முழுதும் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஆரம்பித்து குடிமக்களின் குறைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்!
1. மாண்புமிகு உறுப்பினர் குறை நியாயமானது தான்! இன்று முதலே கஷ்டம் களையப் படத் தான் வேண்டும்! வண்டிகள் வாங்க டெண்டர் விட்டு, வாங்கி, அவற்றை கிராமங்களுக்கு அனுப்புவதற்கு முன்னதாக, அவசரத் தேவைக்கு இப்போது, டாஸ்மாக் சரக்குகளை, கிராம வி ஏ ஓ, ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசில்தார் மூலம் வினியோகிக்க அவசர உத்தரவு ஒன்றை முதல்வர் போட்டு விடுவது தான் சரி!
2. ‘டோர் டெலிவரி’ யைக் கூட இந்தப் பணியுடன் இணைத்தால், குடிமக்கள் மிகவும் சந்தோஷப் படுவார்கள்.
3. குடிக்கத் தண்ணீர் இல்லாத இந்த சமயத்தில், குடிமக்கள் சரக்குடன் கலக்க நீர் வேண்டாமா? அதனால் ‘அம்மா குடிநீர்’ பாட்டிகளையும் சப்ளை செய்யலாம்! ஆனால் ஒன்று! ஒரு வீட்டுக்கே ஏகப்பட்ட பாட்டிகளைக் கொடுத்து விடக் கூடாது. ‘ஒரு நாடு; ஒரு வீடு; ஒரு பாட்டில்’ என்னும் நீதி வாக்கியத்தைக் கண்டிப்பாகப் பணியாளர்கள் கடைப் பிடிக்க வேண்டும்!
4. சரி! ஊறுகாய் போன்ற ‘சைட் ஐட்டங்களுக்கு’, குடிமக்கள் தனியரசிடமா தினம் தினம் போக முடியும்? அவர் எங்கிருப்பாரோ? இவற்றையும் இப்போதைக்கு கிராமப் பணியாளர்களே சப்ளை செய்யலாம்! பிறகு நடமாடும் டாஸ்மாக் கடைகள் வந்த பிறகு, நடமாடும் சைக்கிள் மூலம் தனி விற்பனையாளரை ஒவ்வொரு கிராமத்துக்கும் அனுப்பலாம்! வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழியும்! தமிழ்நாடு அரசைப் பார்த்து, மோடியே மகிழ்ச்சி அடைவார்!
5. இதோடு உறுப்பினர்கள் விட்டு விடக் கூடாது! தனியரசு கோடு தான் போட்டுக் கொடுத்துள்ளார் வேறு யாராவது ரோடு போடலாமே! நடமாடும் ‘ரெட் லைட் ஏரியா’ கிராமம் தோரும் அமைக்கப் பட வேண்டும் என்று கேட்கக் கூடாதா? ஒன்றுக்கொன்று உறவாயிற்றே!
6. அப்படியே, ‘ரிக்கார்ட் டான்ஸ்’ க்கும் அரசு நடமாடும் அரங்கங்களை கிராமம் தோறும் அனுப்ப யாராவது கோரலாம். நடனக் கலையை வளர்த்த மாதிரியும் இருக்கும்! ஊர் மக்களை நடனக் கலையில் பயிற்றுவித்த மாதிரியும் இருக்கும்! ஊற்றிக் கொண்ட பிறகு ஃடான்ஸ் ஆடினால் ஒரு 'கிக்' தானே!
7. கிராமக் கோவில்களில் உத்ஸவம், சர்ச்களில் பண்டிகைக் கொண்டாட்டம், மசூதிகளில் சிறப்புப் பிரார்த்தனை சமயங்களில், கூட்ட நெரிசல் தாங்க முடியாது. அப்போது, ‘சிறப்பு நடவடிக்கை’ எடுத்து, மேற்கண்ட அரசுப் பணிகளை, கோவில் சர்ச், மசூதி ஆகியவற்றுக்கு மிக அருகில், உள்ளூர் எம் எல் ஏ மேற்பார்வையில், முடுக்கி விடலாம்.
8. இந்த மாதிரி சமயங்களில் வேண்டுமானால், உள்ளூர் போலீஸ் மூலமும் சரக்கு விற்பனையை நடத்தலாம். கலப்படம் இருக்காது என்று குடிமக்கள் நம்ப வேண்டாமா? ‘ உங்கள் நண்பன்- போலீஸ்-குடிமக்களின் எடுபிடி- என்று பெரிதாக பேனர் போட்டுக் கொண்டு வியாபாரத்தைக் கவனித்தால் கூட்டம் பெருகும்! நல்ல வசூல் கிடைக்கும்! நல்ல பட்ஜெட் போடலாம்
9. அத்துடன் விடலாமா? நடமாடும் டாஸ்பாக் எம் எல் ஏ க்களுக்கு வேண்டாமா? ஒரு வண்டியை செயலகத்திலும், அடுத்ததை எம் எல் ஏ ஹாஸ்டல் முன்னும், இன்னொன்றை எம் எல் ஏ க்கள் வீட்டு வாசல் முன்னும், நிறுத்தி விட்டால் போயிற்று!
பேசாமல் கீழப்பாக்கத்தை, செயலகத்துக்குப் பக்கம் மாற்றி விட்டால் தனியரசு போன்றோருக்கு வசதியாக இருக்கும்! அத்துடன் கீழ்ப்பாக்கத்தின் ஒரு நடமாடும் கிளையை காங்கேயம் தொகுதியில் ஆரம்பித்து விட்டால், ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உதவியாக இருக்கும்.
செல்லூர் காரருக்குப் போட்டி அதிகரிக்கிறது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...