ஒருவன் தனது மனைவியிடம் சொல்லும் வார்த்தைகளில் ஒரு உள்ளர்த்தம் நிச்சயமாக இருக்கும்.
சில உதாரணங்களைப் பார்க்கலாமா?
* இந்தப் புடைவை உனக்கு ரொம்ப அழகாயிருக்கு, ஹி!ஹி!
(கவனி… புடைவைதான் அழகாயிருக்கு.)
(கவனி… புடைவைதான் அழகாயிருக்கு.)
* கொஞ்ச நாள் பிறந்த வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடு, டியர்!
(கொஞ்ச நாள் நான் ரெஸ்ட் எடுக்கிறேன்)
(கொஞ்ச நாள் நான் ரெஸ்ட் எடுக்கிறேன்)
* நமக்குக் கல்யாணம் ஆகி 25 வருஷமாகியும் அன்னிக்கு இருந்த மாதிரியே இன்னிக்கும் இருக்கே.
(எந்த விஷயத்திலேயும் முன்னேற்றமே இல்லை!)
(எந்த விஷயத்திலேயும் முன்னேற்றமே இல்லை!)
* உன்னைப் பார்த்தா 45 வயசுன்னு யாருமே நம்ப மாட்டாங்க.
( 60 வயசு இருக்கம்னு அடிச்சு சொல்லுவாங்க)
( 60 வயசு இருக்கம்னு அடிச்சு சொல்லுவாங்க)
* நீ ஒரு பத்து நாள் ஊருக்குப் போறதா சொல்றியே. எனக்குச் சாப்பாடு விஷயத்துல பெரிய பிரச்சனையாயிடுமே!)
(நல்ல சாப்பாடு சாப்பிட்டுப் பழகியாச்சுன்னா மறுபடி உன் சாப்பாடு சாப்பிட முடியாதே!)
(நல்ல சாப்பாடு சாப்பிட்டுப் பழகியாச்சுன்னா மறுபடி உன் சாப்பாடு சாப்பிட முடியாதே!)
* உன்னால எப்படி ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேலை செய்ய முடியுது?
( உன்னால எப்படி என்னை ஓய்வு ஒழிச்சல் இல்லாம கண்காணிக்க முடியுது?)
( உன்னால எப்படி என்னை ஓய்வு ஒழிச்சல் இல்லாம கண்காணிக்க முடியுது?)
No comments:
Post a Comment