Wednesday, May 1, 2019

மீண்டும் பொதுத் துறை வங்கிகள் இணைப்பு; மத்திய அரசு பரிசீலனை.

மத்திய அரசு, பொதுத் துறையைச் சேர்ந்த, மேலும் சில வங்கிகளை இணைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்., 1ல், பேங்க் ஆப் பரோடா உடன், தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இணைந்தன. இதையடுத்து, நாட்டில் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக, பேங்க் ஆப் பரோடா உருவெடுத்துள்ளது.

விரைவில் அழைப்பு:
இதைப் போல, வாராக் கடன் சுமை, சொத்து மதிப்பு சரிவு போன்றவற்றால் தடுமாறும், மேலும் சில வங்கிகளை இணைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த, ஒரு சில வங்கிகளுக்கு, இணைப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க, மத்திய அரசு விரைவில் அழைப்பு விடுக்கும் என, தெரிகிறது. அந்த வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இடம் பெற வாய்ப்பு உள்ளது.

வங்கிகள், நிதியாதாரத்தை பெருக்கி, வாராக் கடனை குறைத்து, சொத்து மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். அவ்வாறு செய்யாத வங்கிகளுக்காக, நிதியமைச்சகம் முடிவு எதுவும் எடுக்காமல் காத்திருக்காது.

பரிந்துரை:
பொதுத் துறை வங்கிகள், அவற்றின் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தால், ‘ஏ.எம்.,’ எனப்படும் மாற்று செயல் திட்ட குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இணைப்பு நடவடிக்கை, நடப்பு, 2019-– 20ம் நிதியாண்டில், ஜூலை – செப்., அல்லது அக்., – டிசம்பர் காலாண்டு களுக்குள் நடக்கும் என, தெரிகிறது. இதற்காக, பல்வேறு செயல்திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. 

அதேசமயம், இந்த இணைப்பு நடவடிக்கையில், மூன்று வங்கிகள் தான் இடம் பெறும் என, கூற முடியாது .அது, வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளை பொறுத்து உள்ளது. பெரிய வங்கிகளின் நிதி நிலவரம், முதல் இரண்டு காலாண்டுகளில், மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு இது சரியான நேரமல்ல என, மத்திய அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இருந்து, பேங்க் ஆப் இந்தியா, வெளியேறியுள்ளது. அதுபோல, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் நிதி நிலைமையிலும், நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவையும், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்து, கடந்த பிப்ரவரியில் வெளியே வந்துள்ளன.அதனால், இவ்வங்கிகளின் நிதிநிலமையும் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், மீண்டும் பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை அவசியமில்லை எனலாம்.

வங்கித் துறையில், வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, இணைப்பு நடவடிக்கை ஒன்றே தீர்வு என, கருதக் கூடாது. மத்திய அரசு, மாற்று வழிகளையும் ஆராய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

உண்மையை உரக்க சொல்லியதற்கு நன்றி.

அவற்றின் சொத்துக்கள் முடக்கப்பட்டும் உள்ளன.
இது மிகவும் வரவேற்கப்படவேண்டிய செய்தி. இதே போல இந்தியாவிலும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எல்லாவற்றினும் மேலாக, ஒரு அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று முடிவு செய்யப்பட்டபின் அம்மாதிரியான அமைப்புகளுக்கு ஆதரவாகவோ பரிந்தோ, நீதிமன்றத்தில் தவிர, வேறு எங்கும் பேசும் எவரையும் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டியதும் அவசியம்.
செய்தி:
கொழும்பு (28 ஏப் 2019): இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைப்புகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் சொத்துகளும் முடக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் செயல்படும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியே புலம்பீட்டிரு,அதுதான் உன் Health க்கு நல்லது.


Image may contain: 1 person, text

முடிந்தது இந்தியா சீனா எல்லை பிரச்சனை...

🇨🇳🇨🇳 🇮🇳🇮🇳
முடிந்தது இந்தியா சீனா எல்லை பிரச்சனை...
இனிமேல் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இது சம்மந்தமான போர் வராது. கைலாய பகுதி பிரச்சனைகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.
இதுவரைக்கும் சீனா வரை படத்தில் அருணாசலம் பிரதேசத்தை இணைத்து வைத்து வரைபடம் வெளியிடும். அருணாசல பிரதேசத்தை சீனாவிற்கு சொந்தமான பகுதியாகவே கருதியது.
ஆனால் 26.4.2019 அன்று வெளியிட்ட புதிய வரைபடத்தில் சீனா வரைபடத்தில் இருந்து அருணாசல பிரதேசத்தை நீக்கி விட்டது. அருணாசல பிரதேசத்தை இந்திய வரைபடத்தில் இணைத்து இந்திய சீனா எல்லை பகுதி என அறிவித்து புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா.
இந்திய சீனா எல்லை பிரச்சனை காரணமாக போர் பதற்றம் கடந்த வருடம் வந்த போது சீனாவிற்கு பயந்து பின் வாங்காமல் போரிடவும் தயாராக எதிர்த்து நின்றது நரேந்திர மோடியின் இந்த வெற்றிக்கு காரணம் என்பதே உண்மை. ஓய்வறியா உலக சுற்றுப் பயணம் இதற்கு ஒரு காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மொத்தத்தில் சீனாவை எடுக்க வைத்த இந்த முடிவு நாட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.

தயக்கம் ஏன்?*திட்ட அனுமதி அளிக்க சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்...* கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வருமா?

வண்டலுார், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிக்கான, திட்ட அனுமதி வழங்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.


சென்னை, கோயம்பேடில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட, தமிழக அரசு, 2013ல் அறிவிப்பு வெளியிட்டது.அடிக்கல்இதற்கான நிலம் கையகப்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டது. 2016ல், கிளாம்பாக்கத்தில் இத்திட்டத்துக்கு, 86 ஏக்கர் நிலத்தை, வருவாய்த் துறை, சி.எம்.டி.ஏ.,வுக்கு வழங்கியது.



இந்த நிலத்தில், தொல்லியல் தடை உள்ள பகுதிகளை தவிர்த்து, 40 ஏக்கரில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.இத்திட்டத்துக்கு, இந்திய தொல்லியல் துறையில், தேசிய பாரம்பரிய சின்னங்கள் ஆணைய அனுமதி, ஜன., 3ல் பெறப்பட்டது.இதற்கு முன், புதிய பேருந்து நிலையத்துக்கான, கட்டுமான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டார்.



அதன் பின், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த சூழலில், பிப்., 22ல், இத்திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.டெண்டர் முடிந்து, அடிக்கல் நாட்டும் பணி முடிந்த நிலையில், இத்திட்டத்துக்கு இதுவரை, திட்ட அனுமதி கிடைக்கவில்லை.



இது குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விஷயத்தில், ஆரம்பத்தில் இருந்தே, சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவு அதிகாரிகள், தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.இத்திட்டத்தில், பயனாளிகளான போக்குவரத்து கழகங்களின் ஆலோசனைகளை, சி.எம்.டி.ஏ., அவமதித்து வருகிறது.



தீர்வு



பொதுவாக, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது, சி.எம்.டி.ஏ.,வின் கட்டுமான திட்ட அனுமதியையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதியையும் பெற வேண்டும்.ஆனால், இத்திட்டத்தில், இது போன்ற அனுமதி எதையும், அதிகாரிகள் பெறவில்லை.ஆனால், சி.எம்.டி.ஏ.,வின் கட்டுமான பிரிவு, இதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், முழுமை திட்ட பிரிவு, திட்ட அனுமதி வழங்கும் பிரிவு அதிகாரிகள், அடக்கி வாசிப்பதாக தெரியவந்துள்ளது. 



இதனால், கட்டுமான திட்ட அனுமதி தாமதமாவதாக கூறப்படுகிறது.மாதவரம் திட்டத்தில் செய்த குளறுபடிகளையே, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கிளாம்பாக்கத்திலும் செய்கின்றனர். உயர் அதிகாரிகள் தலையிட்டால் மட்டுமே, இதில் தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

உண்மை. அதை உணர்ந்த மக்கள் கூடும் கூட்டமே சாட்சி.

💐தடைகளை உடைத்து பலன்கள் அள்ளித் தரும் சந்திர தோஷ பரிகாரம்💐
💐தடைகளை உடைத்து பலன்கள் அள்ளித் தரும் சந்திர தோஷ பரிகாரம் என்னவென்று கீழே பார்க்கலாம்.
💐உடல் துர்நாற்றம், வயிறு உப்பசம், சிறுநீர்க் குறைவு, கிருமிகளின் தொற்று, சர்க்கரை நோய், வெள்ளைப்பாடு, தொண்டை குரல் வளைப்புண், பல் ஆடுதல், மண்ணீரல் வீக்கம், சளி, இருமல், ஆஸ்துமா, கரப்பான், தோல் நோய், போன்றவையாகும்.
💐சந்திரன் வழிபாடு:
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் சந்திரனை வழிபட்டால் சகல யோகங்கள் பெறலாம். சந்திரன் தட்சனின் மகள்களான கிருத்திகை, ரோகிணி, முதலான, 27 பெண்களை மணந்து கொண்டான். அவர்களில் ரோகிணியின் மீது மட்டும் கூடுதலாக அன்பு செலுத்தினான்.
💐இதனால் வருந்திய மற்ற மனைவியர், தந்தை தட்சனிடம் சந்திரன், தங்களைப் புறக்கணிப்பதாகக் கூறினார். இதனால் கோபம் கொண்ட தட்சன் சந்திரனின் கலைகள், தேயும் படியாக சபித்து விட்டான். இந்த சாபத்திற்கு விமோசனம் வேண்டி சந்திரன் பூலோகத்தில் பல தலங்களில் சிவனை பூஜித்து வழிபட்டான்.
சந்திரதோஷம் உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் தோஷம் நீக்கப் பெறுவார்கள். சிவன் கோவில்களில் நவக்கிரகங்களை வணங்கி சந்திர பகவான் முன் நின்று
அலைக்கடல அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப்
பிறையாய்மேரு மலைவலமாகவந்த மதியமே போற்றி போற்றி!
என்று தோத்திரம் சொல்லி வணங்குபவர்கள் ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்களென்று சொல்லப்படுகிறது.Image may contain: 1 person, text

*🌹தினம் ஒரு மூலிகை🌹*

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.
*🍁திங்கள் – அருகம்புல்*
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.
*🍁செவ்வாய் – சீரகம்*
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
*🍁புதன் – செம்பருத்தி*
இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
*🍁வியாழன் – கொத்துமல்லி*
ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
*🍁வெள்ளி – கேரட்*
ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.
*🍁சனி – கரும்பு சாறு*
கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.
*🍁ஞாயிறு – இளநீர்*
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...