Monday, December 2, 2019

சூப்பரான சாக்லேட் பணியாரம்.

சூப்பரான சாக்லேட் பணியாரம்
சாக்லேட் பணியாரம்


















தேவையான பொருட்கள்:
முட்டை - 1காய்ச்சிய பால் - ஒரு கப்
உருக்கிய வெண்ணெய் - கால் கப்
வெண்ணிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்
மைதா மாவு - ஒரு கப்
கோகோ பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
–– ADVERTISEMENT ––

சாக்லேட் பணியாரம்

செய்முறை:

முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இதனுடன் பால், வெண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இந்த கலவையுடன் மைதா மாவு கலவையை சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்துக் கொள்ளவும்.

மற்றொரு கிண்ணத்தில் மைதா, கோகோ பவுடர், பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையை முட்டை, மைதா கலவையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இறுதியாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலந்து இட்லி மாவு பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் ஒவ்வொரு கரண்டி சாக்லேட் மாவு எடுத்து அதில் ஊற்றி இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
அட்டகாசமான சுவையில் சாக்லேட் பணியாரம் ரெடி..!

சீனாவின் 99 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்த இலங்கை அதிபர்.

இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே ரத்து செய்துள்ளார்.
SriLanka, Lease, Port, China, 99Years, இலங்கை, துறைமுகம், சீனா, ஒப்பந்தம், ரத்து,

கடந்த 2017ம் ஆண்டில் அதிபர் சிறிசேனா அரசு செயல்பட்டது. சீனாவின் தனியார் நிறுவனத்திற்கு இலங்கையின் ஹம்பந்தோடா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய ஒப்பந்தத்தில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கையெழுத்திட்டார். இந்த துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா மாற்றலாம் என்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.



இதனை மறுத்த சீனா, இந்தியா - ஐரோப்பியா கண்டத்தை இணைக்கும் பாலமாக இத்துறைமுகம் நிகழும் எனவும் இதன்மூலம் வர்த்தகம், இலங்கையின் பொருளாதாரம் மேம்படும் எனவும் விளக்கம் அளித்தது. மேலும், ராணுவத்தளம் அமைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என இலங்கையும் மறுப்பு தெரிவித்தது. சமீபத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்றால் இந்த குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்.



அதன்படி, அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய, ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார். முன்பு 10 ஆண்டுகளாக அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே அரசில் கோத்தபய ராணுவ அமைச்சராக இருந்தார். அப்போது சீனாவுக்கு ஆதரவாக பல்வேறு திட்ட பணிகள் செய்தனர். தற்போது கோத்தபய அதிபரானதும் சீனாவிற்கு எதிராக தனது அணுகு முறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளார்.

பாராசிட்டமால் மாத்திரை - ஒரு ஆய்வு.


பெண்கள் தனது கற்ப காலத்தில் உணவு முறைகளிலும், உடல் பராமரிப்பிலும் நிறையத் தவறுகளை செய்வார்கள். இவை அனைத்துமே சரி செய்து விடக்கூடியதாக இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு மருத்தை மட்டும் அதிகம் எடுத்தால் சீர் செய்ய முடியாத அளவிற்குக் குழந்தை பாதிக்கப்படும். அதன் விவரங்களைத் தான் இந்தக் கட்டுரையில் படிக்கப் போகிறீர்கள்.
நம் அனைவருக்கும் உடல் வலி, காய்ச்சல் அல்லது ஜலதோஷம் ஏற்பட்டால் உடனே நினைவுக்கு வருவது பாராஸிட்டமால் மருந்து தான். அருகாமையில் உள்ள மருந்தகத்திற்குச் சென்று நாமே இந்த மருந்தை வாங்கி உட்கொள்வோம். சாதாரணமாக இருப்பவர்களே இந்த மருந்தை அடிக்கடி அருந்துவதைத் தவிக்க வேண்டும் என்றால் கர்ப்பிணி பெண்கள் இதைச் சாப்பிடலாமா? அமெரிக்காவின் ஆய்வு கூறுவது என்ன?
சமீபத்தில் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் பாராசிட்டமால் பற்றிக் கண்டறியப்பட்ட விவரங்கள் நோயியல் துறையின் பத்திரிக்கையில் (American Journal of Epidemiology) வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டுரையில் பாராஸிட்டமால் மாத்திரையால் கருவில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்குப் பிறகு உலகில் உள்ள கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கு மருத்துவர்கள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஆய்வில், கற்ப காலத்தில் உடல் வலி அல்லது காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டால் குறைவான பாராசிட்டமால் மருந்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி உபயோகித்தால் பிறக்கும் குழந்தைகள் ஆட்டிஸம் நோயுடன் பிறக்கும் என்று கூறியுள்ளனர்.
பாராஸிட்டமால் மாத்திரைகளை அஸிட்டமினோஃபென் (acetaminophen) என்றும் அழைக்கின்றனர். இந்த அஸிட்டமினோஃபென் உடல் வலி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
இதனைக் கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். முதலில் எடுத்துக்கொள்ளும் டோஸில் உடல் உபாதை குணமடையவில்லை என்றால் தகுந்த மருத்துவர்களிடம் பரிசோதனை செய்த பிறகே மருந்துகள் அருந்த வேண்டும்.
அலட்சியத்தினால் அல்லது மருத்துவரைச் சந்திக்க நேரக் குறைவு உள்ளது என்பதால் மருத்துவரைச் சந்திக்காமல் பாராஸிட்டமால் மாத்திரைகளை அருந்தினால், கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நரம்பியல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும். இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிறக்கும் குழந்தைகள் ஆட்டிஸம் நோயுடன் பிறக்கும்.
எனவே இது குறித்து தீவிர எச்சரிக்கையில் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.
மேலும் இது குறித்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி நபர் இலான் மட்டோக், இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர். இவர் கூறியதாவது:
“இந்த ஆய்வின் மூலம் அதிகமாக பாராஸிட்டமால்/அஸிட்டமினோஃபென் பயன்படுத்தினால், பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஆட்டிஸத்துடன் பிறக்கும். ஒரு முறை இந்த மாத்திரை போட்டும் உடல் நலம் சரியாகவில்லை என்றால் உடனே உங்களின் மருத்துவரிடம் ஆலோசனைக்குச் செல்லுங்கள். தேவையற்ற அளவில் இது போன்ற மருந்துகள் சாப்பிட்டால் பிறக்கும் குழந்தைகள் பாதிப்புடன் பிறக்கும்.” என்றார்.
தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் இந்தத் தகவல்களினால், கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பெண்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்...

கோயிலும்_குளமும் !


கோவில்களுக்கு செல்லும்போது மறக்காமல் சோம்பல் இல்லாமல் அந்த கோவிலின் குளத்தில் கால் கழுவி செல்லுங்கள் ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் கதிர்களை உள்வாங்கி தக்க வைத்து கொள்கிற தன்மை தண்ணீருக்கு உண்டு அதே போல் கடத்துகிற தன்மையும் தண்ணீருக்கு உண்டு. அந்த கோவிலில் எச் சக்தி தீர்மானித்து இருகிறார்களோ அச் சக்தியை குளத்தில் உள்ள நீர் கிரகித்து தக்க வைத்து இருக்கும்.
மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகளின் நுனிகள் கால் பாதங்களின் முன் பகுதி, பின் பகுதி, பின் காலில் இருக்கிற மெல்லிய எலும்புகள் நம்முடைய முதுகு எலும்போடு தொடர்பு உடையதால் சில் என்ற இந்த சக்தி நிறைந்த நீர் நரம்புகளை தூண்டி எலும்புகளை வலுபெற செய்து நீங்கள் கோவிலுள் பெற போகும் சக்திக்கு நம்மை ஆய்தத படுத்தும். அப்புறம் நுழைவாயிலில் இருக்கிற படிகளில் கால்பாதம் அழுந்த மிதித்து ஏற வேண்டும். இது இக்காலத்திற்கு சொன்னால் சிறந்த அக்குபஞ்சர் அழுத்தம். நம்முடைய கால்ப்லாடார், பெரிகாடியம்,மூலையில் உள்ள பதிவு இடங்களை சமன் படுத்தும்.
கோவிலின் பிரகாரத்தை சுற்றி நடக்க நம்முடைய ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் சீராகும்போது மூளையின் பரபரப்பு தன்மையும் அடங்கி மூலையில் சுரக்கும் சுரபிகளின் செய்யலபாடும் சமன் படும். இதனால் உடலில் பரபரப்பு தன்மை அடங்கி அமைதி ஏற்படும் . கோவிலின் உள்ளே செல்லும்போது உடம்பும் மனதும் ஒருமித்து இருக்கும். அபபொழுது அக் கோவிலில் தீர்மானம் செய்ய பட்டு போற்றி வருகிற சக்தி நம்முள் இறங்கும். நான் ஏற்கனவே கட்டுரை களில் கூறி உள்ளபடி நம்முடைய எண்ணங்களும் செய்யல பாடுகளும் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் உடைய சக்தியின் ப்ரோக்ராம்மை யை சிறிது மாற்றும்.நமக்கு எந்த கிரகத்தின் பாதிப்பு உள்ளதோ அதை சீர் செய்யும். கோவில் இருக்கிற சக்தி என்பது பிரபஞ்சத்தில் இருந்து பூமியில் விழுகிற கிரகங்களின் கதிர் வீச்சு அதை உள்வாங்கி தான் ஒரு ஸ்தூபி போல கற்பகிரகத்தில் நிறுத்தி இருப்பார்கள்.
கற்ப கிரகத்தில் இருக்கிற சக்தியை தூண்டுகிற விதமாகத்தான் கோவில்களில் பொருள்கள் பயன்படுத்தப்படும் பூ,சந்தனம், விபூதி, குங்குமம் போன்றவை. கர்பகிரகத்தின் உள்ளே ஏற்றப்படும் தீபம் கூட அச் சக்திக்கு தேவை படுகிற அளவு வெப்பத்திற்கு தகுந்தாற்போல் 1,3,5,7,9, த்ரி தீபங்கள் ஏற்றப்படும்.
அங்கு வழங்க படுகிற பிரசாதம் கூட அச் சக்தியை நம் உடலுக்கு கொண்டு செல்லுகிற விஷயமாகத்தான் வைத்து இருப்பார்கள். மேலும் எந்த கோவிலிக்கு சென்றாலும் உட் பிரகரததிலோ அல்லது கோவில் வாளகததி னுல்லோ குறைந்தது ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். இதற்காகத்தான் விளக்கு பூஜை, சங்கு பூஜை, அபிஷேகம்,சொர்ண அபிஷேகம், ஆராதனை , என்று மக்களை கோவிலுள் இருக்க வைத்து, அச் சக்தியை பெற வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பு.

தமிழகத்தில், மூன்று ஆண்டு இழுபறிக்கு பின், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்கால், தேர்தல் திட்டமிட்டபடி நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகள் உள்ளன.





ஊரக உள்ளாட்சிகளில், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகள் உள்ளன. இவ்வாறு, 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட பதவிகளுக்கு, 2016 அக்டோபரில், இரண்டு கட்டமாக, தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்தது. இடஒதுக்கீடு தொடர்பாக, தி.மு.க., தொடர்ந்த வழக்கால், கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன்பின், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக, 2011 மக்கள் தொகை அடிப்படையில், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டன. பெண்கள், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டு, வார்டுகள் பட்டியல் வெளியிடப்பட்டது. சமீபத்தில், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தேர்தலை நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியது. அதேநேரத்தில், இடஒதுக்கீடு நடைமுறைகளை முறையாக பின்பற்றிய பின்னரே, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என, தி.மு.க., மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

இதேபோல, உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகுமா என்ற, கேள்வி எழுந்தது.அதேநேரத்தில், நீதிமன்ற அவமதிப்பில் இருந்து தப்பிக்க, தேர்தலை அறிவித்து விடலாம் என்ற முடிவிற்கு, ஆணையம் வந்தது. அதன்படி, நேற்று காலை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்டனர். ஊரக உள்ளாட்சிகளில் உள்ள, 1.18 லட்சம் பதவிகளுக்கு மட்டும், இரண்டு கட்டமாக, தேர்தல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட தேர்தல், வரும், 27ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல், 30ம் தேதியும் நடக்க உள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது. மனு தாக்கல், 6ம் தேதி துவங்கவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் வாயிலாக, மூன்று ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகி உள்ளதால், திட்டமிட்டபடி தேர்தல் நடக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது.


உள்ளாட்சி தேர்தல் அட்டவணை:


மனு தாக்கல் துவக்கம் - டிச., 6

மனு தாக்கல் இறுதி நாள் - டிச., 13

மனுக்கள் பரிசீலனை - டிச., 16

மனுக்கள் வாபஸ் - டிச., 18

முதற்கட்ட ஓட்டுப்பதிவு - டிச., 27

இரண்டாம் கட்டம் - டிச., 30

ஓட்டு எண்ணிக்கை - ஜனவரி, 2.

இரண்டு கட்ட தேர்தல் குளறுபடி


* முதற்கட்டமாக, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 3,232 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்; 6,251 ஊராட்சி தலைவர் பதவிகள்; 49 ஆயிரத்து, 638 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, வரும், 27ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது

* இரண்டாம் கட்டமாக, 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 3,239 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள்; 6,273 ஊராட்சி தலைவர் பதவிகள்; 49 ஆயிரத்து, 686 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, வரும், 30ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது

* மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, முதற்கட்டமாக, எத்தனை இடங்களிலும், இரண்டாம் கட்டமாக, எத்தனை இடங்களிலும் தேர்தல் நடக்கிறது என்ற, விபரம் வெளியிடப்படவில்லை. இதனால், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது

* எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதற்கட்டமாகவும், இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்ற, பட்டியலும் வெளியிடப்படவில்லை. 'மனு தாக்கல் துவங்க, 6ம் தேதி வரை, அவகாசம் உள்ளதால், அதற்குள் இந்த விவரங்கள் வெளியிடப்படும்' என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினர்.

பார்வையாளர்கள் நியமனம்!


மாவட்ட கவுன்சிலரை தேர்வு செய்ய, மஞ்சள் நிறம்; ஒன்றிய கவுன்சிலருக்கு, பச்சை நிறம்; ஊராட்சி தலைவருக்கு, இளஞ்சிவப்பு; ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு, வெள்ளை நிறத்திலும் ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. முதற்கட்ட தேர்தலில், 31 ஆயிரத்து, 698 ஓட்டுச் சாவடிகளில், ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இரண்டாம் கட்டமாக, 32 ஆயிரத்து, 92 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

முதற்கட்ட தேர்தலில், 1.64 கோடி வாக்காளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில், 1.67 கோடி வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர். இதற்காக, தேசிய தகவல் மையத்துடன் இணைந்து, உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்பட வாக்காளர் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில், 114 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மற்ற இடங்களில், 2.33 லட்சம் ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பார்வையாளர்களாக, தற்போது பணியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். 870 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்; 16 ஆயிரத்து, 840 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மட்டுமின்றி, ஒரு ஓட்டுச்சாவடிக்கு, 8 தேர்தல் அலுவலர்கள் என, 5.18 லட்சம் பேர், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் சோகம்


உள்ளாட்சி தேர்தல், டிச., 27, 30ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் பணியில், அரசு பள்ளி ஆசிரியர்களில், 90 சதவீதம் பேர் பயன்படுத்தப்படுவது வழக்கம். அரசு பள்ளிகளுக்கு, டிச., 24 முதல், ஜன., 2 வரை, அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும்.விடுமுறை நாட்களில், வெளியூர் செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு, ஆசிரியர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு வந்தனர். இந்நிலையில், அரையாண்டு விடுமுறையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், விடுமுறையை அனுபவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், ஆசிரியர்கள் விரக்தியில் உள்ளனர்.

மழை_சீசனில்_பின்பற்ற_வேண்டிய #பாதுகாப்பு_நடவடிக்கைகள்...

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
'மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்'
மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.
உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.
டிவி ஆன்டனா, ஸ்டே ஒயர் மற்றும் கேபிள் டிவி ஒயர்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம்.
வீட்டுக்கு சரியான நில இணைப்பு (எர்த் பைப்) போட்டு அதை குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும். மேலும், சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.
மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.
மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது.
மழைக் காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக் கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.
இடி, மின்னல் ஏற்படும்போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.
இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.
Image may contain: outdoor

நரசிம்மர் பற்றிய வழிபாட்டு குறிப்புகள்.


1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.
2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.
3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.
4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.
5. நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
6. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.
7. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.
8. நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
9. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.
10. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.
11. நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.
12. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
13. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
14. ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.
15. நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
16. வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.
17. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.
18. நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...