கோவில்களுக்கு செல்லும்போது மறக்காமல் சோம்பல் இல்லாமல் அந்த கோவிலின் குளத்தில் கால் கழுவி செல்லுங்கள் ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் கதிர்களை உள்வாங்கி தக்க வைத்து கொள்கிற தன்மை தண்ணீருக்கு உண்டு அதே போல் கடத்துகிற தன்மையும் தண்ணீருக்கு உண்டு. அந்த கோவிலில் எச் சக்தி தீர்மானித்து இருகிறார்களோ அச் சக்தியை குளத்தில் உள்ள நீர் கிரகித்து தக்க வைத்து இருக்கும்.
மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகளின் நுனிகள் கால் பாதங்களின் முன் பகுதி, பின் பகுதி, பின் காலில் இருக்கிற மெல்லிய எலும்புகள் நம்முடைய முதுகு எலும்போடு தொடர்பு உடையதால் சில் என்ற இந்த சக்தி நிறைந்த நீர் நரம்புகளை தூண்டி எலும்புகளை வலுபெற செய்து நீங்கள் கோவிலுள் பெற போகும் சக்திக்கு நம்மை ஆய்தத படுத்தும். அப்புறம் நுழைவாயிலில் இருக்கிற படிகளில் கால்பாதம் அழுந்த மிதித்து ஏற வேண்டும். இது இக்காலத்திற்கு சொன்னால் சிறந்த அக்குபஞ்சர் அழுத்தம். நம்முடைய கால்ப்லாடார், பெரிகாடியம்,மூலையில் உள்ள பதிவு இடங்களை சமன் படுத்தும்.
கோவிலின் பிரகாரத்தை சுற்றி நடக்க நம்முடைய ரத்த அழுத்தம் சீராகும். ரத்த ஓட்டம் சீராகும்போது மூளையின் பரபரப்பு தன்மையும் அடங்கி மூலையில் சுரக்கும் சுரபிகளின் செய்யலபாடும் சமன் படும். இதனால் உடலில் பரபரப்பு தன்மை அடங்கி அமைதி ஏற்படும் . கோவிலின் உள்ளே செல்லும்போது உடம்பும் மனதும் ஒருமித்து இருக்கும். அபபொழுது அக் கோவிலில் தீர்மானம் செய்ய பட்டு போற்றி வருகிற சக்தி நம்முள் இறங்கும். நான் ஏற்கனவே கட்டுரை களில் கூறி உள்ளபடி நம்முடைய எண்ணங்களும் செய்யல பாடுகளும் பிரபஞ்சத்தில் இருக்கிற கிரகங்களின் உடைய சக்தியின் ப்ரோக்ராம்மை யை சிறிது மாற்றும்.நமக்கு எந்த கிரகத்தின் பாதிப்பு உள்ளதோ அதை சீர் செய்யும். கோவில் இருக்கிற சக்தி என்பது பிரபஞ்சத்தில் இருந்து பூமியில் விழுகிற கிரகங்களின் கதிர் வீச்சு அதை உள்வாங்கி தான் ஒரு ஸ்தூபி போல கற்பகிரகத்தில் நிறுத்தி இருப்பார்கள்.
கற்ப கிரகத்தில் இருக்கிற சக்தியை தூண்டுகிற விதமாகத்தான் கோவில்களில் பொருள்கள் பயன்படுத்தப்படும் பூ,சந்தனம், விபூதி, குங்குமம் போன்றவை. கர்பகிரகத்தின் உள்ளே ஏற்றப்படும் தீபம் கூட அச் சக்திக்கு தேவை படுகிற அளவு வெப்பத்திற்கு தகுந்தாற்போல் 1,3,5,7,9, த்ரி தீபங்கள் ஏற்றப்படும்.
அங்கு வழங்க படுகிற பிரசாதம் கூட அச் சக்தியை நம் உடலுக்கு கொண்டு செல்லுகிற விஷயமாகத்தான் வைத்து இருப்பார்கள். மேலும் எந்த கோவிலிக்கு சென்றாலும் உட் பிரகரததிலோ அல்லது கோவில் வாளகததி னுல்லோ குறைந்தது ஒரு மணி நேரம் இருக்க வேண்டும். இதற்காகத்தான் விளக்கு பூஜை, சங்கு பூஜை, அபிஷேகம்,சொர்ண அபிஷேகம், ஆராதனை , என்று மக்களை கோவிலுள் இருக்க வைத்து, அச் சக்தியை பெற வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
No comments:
Post a Comment