Tuesday, December 3, 2019

அமித்ஷா .. #முன்னிலையில் ... #மத்தியஅரசை ... #கடுமையாக_விமர்சித்த #ராகுல்பஜாஜ் ..

உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இருக்கும் சபையில், ...
பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ், மத்திய அரசை விமர்சிக்க தனியார் நிறுவனங்களிடையே போதுமான தைரியம் இல்லையென்று கூறினார்.
மும்பையில், சனிக்கிழமை(நேற்று) மாலை எக்கனாமிக் டைம்ஸ் என்கிற ஆங்கில நாளிதழ் நடத்திய விழாவில் பேசிய ராகுல் பஜாஜ்,
பசு பாதுகாவல் என்ற பெயரில் அடக்கும் கும்பல் கொலை,
போபால் பாராளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து நாடாளுமன்றத்தில் பேசியதை
விமர்சிக்க தனியார் நிறுவனங்கள தயங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ராகுல் பஜாஜ் "எனது நண்பர்களான தொழிலதிபர்கள் யாரும் இந்த அரசை விமர்சிக்கும் வகையில் பேச மாட்டார்கள்,
இதை நான் வெளிப்படையாகச் சொல்வேன் .....
ஐக்கிய முற்போக்கு கூட்டணி II ஆட்சியில் இருந்தபோது, ​​நாங்கள் யாரையும் விமர்சிக்க எங்களுக்கு வாய்ப்பு இருந்தது ...
தற்போதைய அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும்,
தொழில் முனைவோர் உங்களை வெளிப்படையாக விமர்சித்தால், நீங்கள் அவற்றை மதிப்பளித்து பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு சுத்தமாக இல்லை" என்று அந்த விருது வழங்கும் விழாவில் பேசினார்.

பர்மா உணவு அத்தோ செய்யலாம் வாங்க.

பர்மா உணவு அத்தோ செய்யலாம் வாங்க
அத்தோ


















தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 200 கிராம்
பூண்டு - 10
பெரிய வெங்காயம் - 2
முட்டைக்கோஸ் - ஒரு கப்
கேரட் - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
புளி கரைசல் - ஒரு டேபிள் ஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டகை
காய்ந்த மிளகாய் துகள் - தேவையான அளவு
தட்டை - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அத்தோ

செய்முறை:


கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முட்டை கோஸ், கேரட்டை மெல்லிதாக நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிடவும். வெந்ததும் தண்ணீர் முழுவதையும் வடித்து விட்டு அதில் எண்ணெய்விட்டு கிளறி தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

அதேபோல் பாதி வெங்காயத்தை வறுத்து தனியாக வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் நூடுல்ஸ், நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட், :எலுமிச்சை சாறு, நல்லெண்ணெய், புளி கரைசல், காய்ந்த மிளகாய் துகள், உப்பு, உடைத்த தட்டு வடை, கொத்தமல்லித்தழை, பொரித்த பூண்டு, வறுத்த வெங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்.
சுவையான அத்தோ ரெடி..!

"மந்த்ரகர்த்தா"

எத்தனையோ கிரமத்துடன்
இயங்கிவரும் இந்த பிரபஞ்சத்தை பார்க்கும் போது இதை செய்கிற பேரறிவு ஒன்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அந்தப்
பரமாத்மாவிடமிருந்து
தான் நாம் பார்க்கின்ற சகல வஸ்துக்களும் நாம் கேட்கிற இத்தனை சப்தங்களும்
உண்டாயிருக்கின்றன.
முதலில் சப்தப் பிரபஞ்சம் உண்டான ஆகாயத்தில்
உண்டான பின்தான் நாம்
கண்ணால் காண்கிற பிரபஞ்சம் உண்டாயிற்று.
ஆகாயத்தில்
இந்த சப்தங்கள் அனைத்தும்
இருக்கின்றன.
வெளிப்
பிரபஞ்சத்திலிருப்பதெல்லாம் மனிதனின் உடலிலும் இருக்கின்றன.
வெளியிலிருக்கிற ஆகாயம் ஜீவனின் இருதயத்திலும்
இருக்கிறது.
"அண்டத்தையும்,
பிண்டத்தையும் ஒன்றாக
இணைத்துக் காணக் கூடிய ஒரு நிலையுண்டு.அதை
அடைந்தவர்களும் உண்டு.
யோகிகள் சமாதி நிலையில் இந்த ஹிருதயாகசத்தை
அநுபவிக்கிறார்கள்.
அப்போது உள்,வெளி என்ற பேதம் நீங்கி
சகலமும் ஒன்றாகி
விடுகின்றன.இதய ஆகாசமும்,
வெளி ஆகாசமும் ஒன்றாகி விடுகின்றன.
இந்த நிலைகளில்
யோகிகளும் ஆகாசத்தில் உள்ள சப்தங்களை
கிரகித்து லோகத்துக்கு தர முடிகிறது.
லோக ஷேமார்த்தமான இந்த சப்த கோவைகளே வேத மந்திரங்களாகும்.
இவற்றை யாரும் உண்டாக்கவில்லை.
ஒவ்வொரு வேத மந்திரமும் ஒரு ரிஷியின் பேரில் இருந்தாலும்,
உண்மையில்
அந்த ரிஷி அந்த மந்திரத்தை
இயற்றவில்லை.ஒரு
மந்திரத்துக்கு இன்னார் ரிஷி என்கிற போது,ஆகாசத்தில்
அநாதியாக உள்ள மந்திரத்தை அந்த ரிஷியே முதலில் கண்டுக்
கொண்டு உலகுக்கு வெளியிட்டார் என்றே அர்த்தம்.
"ரிஷி' என்றால் "மந்த்ர த்ரஷ்டா"
(மந்திரத்தை கண்டுபிடித்தவர்)
என்று தான் சொல்லியிருக்கிறது.
"மந்த்ரகர்த்தா"
(மந்திரத்தை
செய்தவர்) என்றல்ல.நம்
உடம்புக்குள் சுவாஸம் பல
வீதமாக அசைந்து கொடுத்தே. நம் வாழ்க்கை நடப்பது போல்,
இந்த சப்த அசைவுகளாலேயே
பிரபஞ்ச வாழ்க்கை நடப்பதால்
பரமாத்மாவின் மூச்சே வேத மந்திரங்களாகும்.

டிச_26ல்_சூரிய_கிரகணம்:



திருப்பதி,
சபரிமலை கோவில்களில் தரிசனம் ரத்து - பக்தர்கள் கவனத்திற்கு
இந்த ஆண்டு சூரிய கிரகணம் விகாரி வருடம் மார்கழி மாதம் 10 தேதி டிசம்பர் 26 வியாழக் கிழமை உலகளவில் அதிகாலை 02.29 முதல் காலை 8.05 மணி வரை நீடிக்கின்றது.
இந்திய நேரப்படி காலை 07:59 மணி முதல் மதியம் 01.35 மணி வரை நீடிக்கின்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் தெரியும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவிலும் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 25ஆம் தேதி இரவு 11 மணி முதல் டிசம்பர் 26ஆம் தேதி நண்பகல் 12 மணிவரைக்கும் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஒரு ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு.
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26ஆம் தேதி நிகழ உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோயில், திருப்பதி கோயில் போன்ற பெரிய பிரபலமான கோயில்கள் கிரகணத்தின் போது பல மணிநேரங்கள் தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. மார்கழி மாதம் பூஜைக்கு செல்லும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக்க கொள்ளவேண்டும் என்பதற்காகவே முன்கூட்டியே இந்த அறிவிப்பினை கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் 13 மணி நேரம் அடைக்கப்படும் அதாவது டிசம்பர் 25 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கி 26 ஆம் தேதி பிற்பகல் 12 மணிவரை கோவில் நடை அடைக்கப்ப டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல் சபரிமலை ஐயப்பன் கோயிலும் டிசம்பர் 26ஆம் தேதி 4 மணி நேரம் அடைக்கப்படும் என திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று அய்யப்பனை தரிசிப்பது வழக்கம். இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16ம் தேதி மாலையில் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருவாங்கூர் தேவஸ்தான வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26ம் தேதி காலை 8.13 மணி முதல் 11.13 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. இதனால் சபரிமலை கோவிலின் நடை காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை 4 மணி நேரம் அடைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

*தேங்காய் பற்றிய அதிசய ரகசிய உண்மைகள் !!*


தென்னை பூ பூத்த நாளிலிருந்து தேங்காயாக விளைந்து அது உதிரும் நாள் வரை அனைத்து பருவ நிலைகளையும் உள்ளடக்கியது .
மேலும் நிலம் , நீர் , ஒளி , காற்று, விண் ஆகிய பஞ்ச பூதத் தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. இது உடைபடும் இடங்களில் இந்த பஞ்ச பூத சக்திகள் குவிக்கப் படுகிறது , இது சித்தர்கள் விஞ்ஞானத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது .
*இது சிவனின் மூல சக்தியாக உள்ளது. இதில் உள்ள முக் கண்களில் வழியே பஞ்ச பூத சக்திகள் இழுக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது .
*தேங்காயின் உட்புறத்தில் பஞ்சபூத சுழற்சி* சுழன்று கொண்டே இருக்கும் .
கோவில் விக்கிரகத்தின் முன் தேங்காய் உடைக்கும் போது அது இறைசக்தியை வெளிக்கொணரும் ஆற்றல் சக்தியாக உள்ளது . இதனால் மூலஸ்தானத்தில் பக்தர்களுக்கு உடனடி இறை ஆற்றல் கிடைக்கிறது .
ஒரே இடத்தில் தேங்காய் சிதறு காய் இடும்போது அங்கெ பஞ்சபூத சக்தி சுழன்று கொண்டே இருக்கும் .
*முச்சந்தியில் சிதறுகாய் அந்தியில் இடும்போது* அங்கே துர்சக்திகள் விலக்கியடிக்கப் படுகிறது .
ராகு கேது தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில் , திங்கள் கிழமையின் முற்பகலில் , முச்சந்தி விநாயகருக்கு வாரம் தோறும் சிதறு காய் இட்டால் கால சர்ப்ப தோஷம் கூட சரியாகி விடும் .
வீட்டில் தினம் ஒரு தேங்காய் உடைத்து பூஜை செய்தால் பிணிகள் நீங்கி லக்ஸ்மி கடாட்சம் பெருகும் ,
மாந்திரீகத்தில் சண்ட காளிவேர் , நரபூதாளம் , சூலநாசவேர் , இவற்றுடன் வேண்டாதவரின் காலடி மண் , இந்த நான்கையும் நவமி திதியில் வேங்கை மரத்தின் கீழ் பதித்தால் சம்மந்தப்பட்டவர் நிலை அதோ கதிதான் .
*இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு மறு நவமீ* வரை அந்தியில் தேங்காய் உடைத்து உடன் நுகரச் செய்தால் குணமாகி விடும் . இது சித்தர்கள் முறையாகும்.
முள்ளம் பன்றி முள் , எட்டிமர வேர் இரண்டையும் வீட்டில் வைத்துவிட்டால் சண்டை சச்சரவு வந்து கொண்டே இருக்கும் ,
*இதற்கு நல்ல விளைந்த தேங்காயை உடைத்து* வாசலில் ஒரு நாள் முழுக்க வைத்து விட்டால் சுபிட்சம் ஏற்படும் , மாலையில் அந்த தேங்காயின் உட்புறம் வியர்த்து பிசு பிசு வென்று இருப்பதைக் காணலாம் ,
அம்மாவாசையில் பிறந்த குழந்தைகள் கெட்ட பெயரெடுக்கும் , அவர்களுக்கு அடிக்கடி தேங்காய் உடைத்து நுகரச் செய்தால் குணம் மாறும் ,
குழந்தைகளுக்கு தேங்காய் பால் அடிக்கடி( சாறு ) கொடுத்தால் உடல் பலமாகும் *ஞாபக சக்திகூடும்*,
வீட்டில் திருஷ்டிக்கு நவமி திதியில் பறித்த தேங்காய் மஞ்சள் தடவி முக்கண்ணில் திலகம் இட்டு வீட்டு வாசல் முன் கட்டி விட்டால் எப்பேர்ப்பட்ட திருஷ்ட்டியும் கழிந்து விடும் .
வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டால் , ரோகினி , ஹஸ்த்தம் , திருவோணம் , நட்சத்திர நாளில் விநாயகருக்கு சிதறுகாய் இட்டு வழிபட்டால் *காரியம் சித்தியாகும்*.
( அக்கால ராஜாக்கள் அந்நிய தேச பயணத்திற்கு முன் இந்த நட்சத்திர நாளில் தேங்காய் முக்கண் வழிபாடு செய்தே சென்று வருவர்)
சாதாரணமாக இல்லை.
நம் முன்னோர் தேங்காய் உடைக்கும் சாஸ்திரம் வைத்தது...

சாஸ்திர விதிகளில் சில துளிகள்.

1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.
.2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.
3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.
4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது
.5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.
6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.
7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.
8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது
.9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்
11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.
12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.
13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.
14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது
.15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.
16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.
17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.
18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.
19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.
20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது
21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.
22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது.
சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும் , வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது ...
23 இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.
24 சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.
25 தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.
26 முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.
27 உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.
28 அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.
29 ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.
30 அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.

கிருஷ்ணருக்கும், கண்ணனுக்கும், என்ன வித்தியாசம் இரண்டிற்கும்...வயதுதான் வித்தியாசம் என்றேன்..... சின்ன உதாரணம்...


ஒருநாள், நான் ...
முகம் முழுக்க சோப்பு தேய்த்து குளித்துக் கொண்டிருந்தேன்.
திடீர் என்று , பக்கத்தில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை காணவில்லை. கண்ணை திறக்க முடியாமல்,இரண்டு கையாலும்,
என்னை சுற்றி , சுற்றி, தேடினேன்.
அப்போது ,..எனது குழந்தை சிரிக்கும் சப்தம் கேட்டது. எனக்கு புரிந்து விட்டது.
செம்பை அவள் தான் வைத்திருக்கிறாள் என்று. எனக்கு கண் எரிகிறது என்று அவளுக்கு தெரியவில்லை. நான் , செம்பை தேடுவதில் அவளுக்கு ஒரு ஆனந்தம்.
இதுதான்....குழந்தையின் குறும்பு.
தற்போது , வயதானபிறகு , எனது கண்ணில் ,
ஒரு தூசி விழுந்தாலும் அவள் கண்ணில் நீர் வடிகிறது.
இரண்டிற்கும் , வித்தியாசம் வயது மட்டுமே....
மகாபாரதத்தில், கிருஷ்ணன் சிறு குழந்தையாக இருக்கும் போது....
கோபிகளின் ஆடைகளை மறைத்து வைத்து... அவர்கள் தேடுவதை கண்டு ஆனந்தப் பட்டான்.
அதே கிருஷ்ணன், கண்ணனாக மாறும் போது.... மேலாடை இன்றி ஒரு பெண் தவித்தபோது ... மேலாடை கொடுத்து, அவள் மானத்தை காத்து நின்றான்..
இரண்டிற்கும் வித்தியாசம் வயது மட்டுமே.....
கிருஷ்ணன் சிறு பிள்ளையாக இருக்கும்போது....
நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வெண்ணெயை திருடி தின்றான். தாய் கேட்கும் போது...
நான் திருடவே இல்லை என பொய்யும் சொன்னான்...
அதே கிருஷ்ணன், கண்ணனாக மாறும் போது..
திருடுவது கூடாது....பொய் சொல்வது கூடாது என கீதை உபதேசம் செய்தார்....
இரண்டுக்கும் வித்தியாசம் வயது மட்டுமே....

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...