Tuesday, December 3, 2019

"மந்த்ரகர்த்தா"

எத்தனையோ கிரமத்துடன்
இயங்கிவரும் இந்த பிரபஞ்சத்தை பார்க்கும் போது இதை செய்கிற பேரறிவு ஒன்று இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அந்தப்
பரமாத்மாவிடமிருந்து
தான் நாம் பார்க்கின்ற சகல வஸ்துக்களும் நாம் கேட்கிற இத்தனை சப்தங்களும்
உண்டாயிருக்கின்றன.
முதலில் சப்தப் பிரபஞ்சம் உண்டான ஆகாயத்தில்
உண்டான பின்தான் நாம்
கண்ணால் காண்கிற பிரபஞ்சம் உண்டாயிற்று.
ஆகாயத்தில்
இந்த சப்தங்கள் அனைத்தும்
இருக்கின்றன.
வெளிப்
பிரபஞ்சத்திலிருப்பதெல்லாம் மனிதனின் உடலிலும் இருக்கின்றன.
வெளியிலிருக்கிற ஆகாயம் ஜீவனின் இருதயத்திலும்
இருக்கிறது.
"அண்டத்தையும்,
பிண்டத்தையும் ஒன்றாக
இணைத்துக் காணக் கூடிய ஒரு நிலையுண்டு.அதை
அடைந்தவர்களும் உண்டு.
யோகிகள் சமாதி நிலையில் இந்த ஹிருதயாகசத்தை
அநுபவிக்கிறார்கள்.
அப்போது உள்,வெளி என்ற பேதம் நீங்கி
சகலமும் ஒன்றாகி
விடுகின்றன.இதய ஆகாசமும்,
வெளி ஆகாசமும் ஒன்றாகி விடுகின்றன.
இந்த நிலைகளில்
யோகிகளும் ஆகாசத்தில் உள்ள சப்தங்களை
கிரகித்து லோகத்துக்கு தர முடிகிறது.
லோக ஷேமார்த்தமான இந்த சப்த கோவைகளே வேத மந்திரங்களாகும்.
இவற்றை யாரும் உண்டாக்கவில்லை.
ஒவ்வொரு வேத மந்திரமும் ஒரு ரிஷியின் பேரில் இருந்தாலும்,
உண்மையில்
அந்த ரிஷி அந்த மந்திரத்தை
இயற்றவில்லை.ஒரு
மந்திரத்துக்கு இன்னார் ரிஷி என்கிற போது,ஆகாசத்தில்
அநாதியாக உள்ள மந்திரத்தை அந்த ரிஷியே முதலில் கண்டுக்
கொண்டு உலகுக்கு வெளியிட்டார் என்றே அர்த்தம்.
"ரிஷி' என்றால் "மந்த்ர த்ரஷ்டா"
(மந்திரத்தை கண்டுபிடித்தவர்)
என்று தான் சொல்லியிருக்கிறது.
"மந்த்ரகர்த்தா"
(மந்திரத்தை
செய்தவர்) என்றல்ல.நம்
உடம்புக்குள் சுவாஸம் பல
வீதமாக அசைந்து கொடுத்தே. நம் வாழ்க்கை நடப்பது போல்,
இந்த சப்த அசைவுகளாலேயே
பிரபஞ்ச வாழ்க்கை நடப்பதால்
பரமாத்மாவின் மூச்சே வேத மந்திரங்களாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...