உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இருக்கும் சபையில், ...
பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ், மத்திய அரசை விமர்சிக்க தனியார் நிறுவனங்களிடையே போதுமான தைரியம் இல்லையென்று கூறினார்.
மும்பையில், சனிக்கிழமை(நேற்று) மாலை எக்கனாமிக் டைம்ஸ் என்கிற ஆங்கில நாளிதழ் நடத்திய விழாவில் பேசிய ராகுல் பஜாஜ்,
பசு பாதுகாவல் என்ற பெயரில் அடக்கும் கும்பல் கொலை,
போபால் பாராளுமன்ற உறுப்பினர் பிரக்யா சிங் தாக்கூர் நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்து நாடாளுமன்றத்தில் பேசியதை
விமர்சிக்க தனியார் நிறுவனங்கள தயங்குகின்றனர் என்றும் தெரிவித்தார்.
ராகுல் பஜாஜ் "எனது நண்பர்களான தொழிலதிபர்கள் யாரும் இந்த அரசை விமர்சிக்கும் வகையில் பேச மாட்டார்கள்,
இதை நான் வெளிப்படையாகச் சொல்வேன் .....
ஐக்கிய முற்போக்கு கூட்டணி II ஆட்சியில் இருந்தபோது, நாங்கள் யாரையும் விமர்சிக்க எங்களுக்கு வாய்ப்பு இருந்தது ...
தற்போதைய அரசாங்கம் நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும்,
தொழில் முனைவோர் உங்களை வெளிப்படையாக விமர்சித்தால், நீங்கள் அவற்றை மதிப்பளித்து பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு சுத்தமாக இல்லை" என்று அந்த விருது வழங்கும் விழாவில் பேசினார்.
No comments:
Post a Comment