Tuesday, December 3, 2019

*சுந்தர்பிச்சை சொல்லும் 'கரப்பான்பூச்சி' கோட்பாடு*

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார்.
அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது.
மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது.
இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.
இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார்.
அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.
நான் என் காபியைப் பருகிக் கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது.
அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான்பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்தப் பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதி இழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி அதை நேர்த்தியாகக் கையாண்டார்.
எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான்பூச்சி ஏற்படுத்தும் தொந்தரவைக் கையாள முடியாத அவர்களின் இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்குக் காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது மனைவி அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்கச் செய்யவில்லை,
அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது. சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை.
*ஆனால், அந்த நெரிசல்களைக் கையாள முடியாத என் இயலாமை தான் என்னைத் தொந்தரவு செய்கிறது.
* என் வாழ்வில் எந்தவொரு குழப்பத்தையும் எந்தவொரு சிக்கலும் உருவாக்குவதில்லை, அந்த குழப்பங்களுக்கு நான் செய்யும் எதிர்வினைகள் தான் சிக்கல்களை உருவாக்குகிறது. இதன் மூலம் நான் கற்றது வாழ்வில் நான் எதிர்வினை ஆற்றக் கூடாது,
பதிலளிக்க வேண்டும் (I should not react in life, I should always respond). நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக் கூடும் ஒன்றைத் தவிர.
அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம். வாழ்வில் நமக்கு நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எத்தனைத் தெளிவான பாடமாக அமைந்திருக்கிறது.
*கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட இந்தக் கதையை ஆழ்ந்து வாசித்து பயன்படுத்தினால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வாழ்க்கையை கொண்டாட துவங்குவீர்கள்! நம் வெற்றியும், தோல்வியும் நம் கைகளில் தான் என்பதை உணர்வீர்கள்!... அட! வெற்றி, தோல்விகளை விட வாழ்க்கையை அனுபவித்து வாழக் கற்றுக் கொள்வீர்கள்!*

சோதனை_மேல்_சோதனை_போதும்டா_சாமி....!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செய்தி தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்திக்கும், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறினார். அவ்வப்போது டி.டி.வி.தினகரன் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், அமமுக தொடர்ந்து கட்சியை நடத்தினால் வழக்கு தொடருவோம். கட்சியை நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். எங்களைக் கேட்காமல் அமமுகவை அங்கீகரிக்க கூடாது தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமமுக கட்சியை பதிவு செய்வதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள டிடிவி.தினகரன் அந்த கட்சியை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்துடன் பிரமாண பத்திரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இருந்து விலகி விட்டனர். இந்த பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என புகழேந்தி தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் விதிபடி ஒருகட்சியை பதிவு செய்ய அந்த கட்சியை சேர்ந்த 100 தனிநபர்கள் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் புகழேந்தி உள்ளிட்ட 100 பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தன. பின்னர், தினகரன் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக புகழேந்தி முன்னாள் அமைச்சர் உட்பட பலரும் அமமுக கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
எனவே கட்சியை பதிவு செய்த விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்பதே அந்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்காமலும் டிடிவி.தினகரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிவிட்டதாகவும் தன்னை பொதுச்செயலாளர் என பிரகடணம் செய்து கொண்டதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை தான் கொடுத்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சியை பதிவு செய்ய தற்போது தினகரன் பல்வேறு வகையில் முயற்சி செய்து வருவதால் அமமுகவை பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு வரும் திங்கள் இன்று விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*முடியைப் பிளக்கும் ஏ.சி... சேர்த்து வைக்கும் கடுக்காய் .

நன்றாக முடி வளர ஆரம்பிக்கும் காலம் என்பதே டீன்-ஏஜ் பருவத்தில்தான். அதேபோல... அதிகமாக முடி உதிர ஆரம்பிப்பதும் இந்தப் பருவத்தில்தான். சத்தான உணவு, சரியான கூந்தல் பராமரிப்பு என்று அக்கறையோடு இல்லாவிட்டால் ஆறடி கூந்தல்கூட... அரையடிக்கும் குறைவாக வந்து நின்றுவிடும்.
கறிவேப்பிலையை துவையல், பொடி என்று உணவில் சேர்ப்பதன் மூலம், இரும்புச் சத்து உடலில் சேர்ந்து, முடியை வலுவாக்கும். 'எந்த உணவில் கறிவேப்பிலை இருந்தாலும், தூக்கி வீசாமல் சாப்பிட வேண்டும்.
வாரத்துக்கு ஒருமுறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண்சிமிட்ட வைக்கும்.
முடி உதிர்வதை உடனடியாக கவனிக்காமல் விட்டால்..முழுதும் உதிரும் நிலை ஏற்படும்.
நல்ல முற்றிய தேங்காயின் துருவல் ஒரு கப் எடுத்து, அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இதுதான் கலப்படமில்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய். இதைத் தினமும் தலைக்கு தேய்த்து வந் தால், முடி உதிர்வது நின்று, வளர்ச்சியும் துரிதப்படும்.
இளவயதில் வரும் முடி கொட்டுதல், வழுக்கை, நரை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க... 100 மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்துவிடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு பேக்’ போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்து ஷாம்பூ (அ) சீயக்காயினால் அலசுங்கள்.
வாரத்துக்கு இரண்டு முறை சின்ன வெங்காயம் இரண்டுடன், தேங்காய் துண்டு இரண்டு சேர்த்து அரைத்து வழுக்¬கயின் மீது பூசுங்கள். பிறகு, கடலை மாவைத் தேய்த்து அலசினால், மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.
ஸ்டெரெயிட்டனிங்’ (முடியை நேராக்குதல்) செய்வதால், முடியானது ஆறே மாதத்தில் சுருங்கி, வலுவிழந்துவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதைத் தடுக்க... கொதிக்கும் டீ டிகாஷனில் டர்க்கி டவலை நனைத்துப் பிழிந்து, தலை முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம்.
ஏ.சி-யிலேயே இருப்பவர்களுக்கு கூந்தல் வறட்சி, நுனி முடி பிளவு போன்றவை ஏற்படும். ஓமம், சீரகம், உடைத்த கடுக்காய் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து விழுதாக அரைத்து அதனுடன் கடலைமாவு, பயத்த மாவு கலந்து தலைக்கு தேய்த்து அலசும் போது, இந்தப் பிரச்னைகள் தீரும்.

பானிபூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்??

உங்களுக்கான #எச்சரிக்கை…!
பானிபூரிக்குப் பயன்படும் முக்கிய மூலப்பொருள்கள் மைதா மற்றும் #பேக்கிங்சோடா. இது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். நாம் இவற்றைத் தொடர்ச்சியாக உணவில் சேர்த்துவந்தால் #உடல்பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், சப்புகொட்டி உண்ணவேண்டுமென பல செயற்கை #சுவையூட்டிகளை (அஜினோமோட்டோ) சால்னாக்களில் செக்கப்படுவதால், வயிற்று உபாதைகளை ஏற்படுத்ததுவதோடு #அல்சரை உண்டுபண்ணுகிறது...
புளி தண்ணீரில் ஒருவித கலர் #ரசாயனங்களை சேர்ப்பதோடு, அதிகளவு பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கப்படுகிறது....
இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு வேகவைத்த #உருளைக்கிழங்கு மற்றும் #முட்டைகளை உபயோகப்படுத்துகின்றனர் என்பதனை பலர் அறிவதில்லை....
இதனை தொடர்ந்து உண்ணுவதால் பல #உபாதைகளை உடலில் உண்டுபண்ணுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்...

மனரீதியாகத் தயாராக வேண்டும்!

ஒரு நடிகைதானே என ஏளனம் பேசிய சினிமா கதாசிரியரின் ரசிகர்கள் கடைசிவரை அந்த முன்னாள் நடிகையிடம் தோற்றுப்போனார்கள்!
ஆணாதிக்கம் மிக்க அரசியலில் ஒரு பெண் அவ்வளவு சுலபத்தில் அரியணை ஏறிட முடியுமா?
"ஜெ.ஜெயலலிதா எனும் நான். . . . . " என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்திருப்பது அவமானங்கள், சூழ்ச்சிகள், துரோகங்கள், பெண்ணடிமைத்தனம் என அனைத்தையும் தாண்டி வந்த உழைப்பும் தைரியமும்.
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றியை எட்டும் ஒவ்வொரு பெண்ணும் ஜெ.ஜெயலலிதாதான்!

‘ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு’ திட்டம் ஜூன் மாதம் முதல் அமல் - ராம்விலாஸ் பஸ்வான் தகவல்.

‘ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு’ திட்டம் ஜூன் மாதம் முதல் அமல் - ராம்விலாஸ் பஸ்வான் தகவல்
மத்திய உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான்


















மத்திய உணவு, பொது வினியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் மக்களவையில் நேற்று இதுபற்றி கூறியதாவது:-

‘ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு’ திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி தகுதியுள்ள பயனாளிகள் தங்களுக்குரிய உணவுப்பொருட்களை இந்தியா முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் அதே ரே‌‌ஷன் கார்டு மூலம் வாங்க முடியும். இதனால் இடம்பெயரும் தொழிலாளர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள் அதிக பலன் அடைவார்கள்.

ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள மின்னணு கையடக்க விற்பனை கருவிகளில் (பி.ஓ.எஸ்.) இணைத்த பின்னரே இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

எனவே இதற்கு வசதியாக மாநிலங்களில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளுக்கும் கையடக்க விற்பனை கருவிகள் வழங்கப்படுவதுடன், அந்த கடை முழுமையாக மின்னணு மயமாக்கப்பட வேண்டும். இந்த திட்டம் நாடு முழுவதும் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

தங்கள் வேலை மற்றும் இதர காரணங்களுக்காக நாடு முழுவதும் அடிக்கடி இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு இது பயனளிக்கும். குறிப்பாக கட்டுமானம், எண்ணெய் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகளில் அதிகளவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதுதவிர ‘ஒரே நாடு, ஒரே தரம்’ என்ற திட்டத்தையும் கொண்டுவரும் முனைப்பில் அரசு ஈடுபட்டு வருகிறது. நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் இதனை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டத்தை தயாரிக்கும்படி இந்திய தர அமைப்பை (பி.ஐ.எஸ்.) கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வாய்ப்புள்ள தயாரிப்புகளில் இந்திய தரம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும். இந்திய தர அமைப்பு 20 ஆயிரம் பொருட்களுக்கு இந்திய தரத்தை முறைப்படுத்தி உள்ளது. அதோடு 51 நாடுகளில் உள்ள நிறுவனங்களின் பல்வேறு தயாரிப்புகள் இந்திய தரத்துக்கு இருப்பதாக அனுமதி வழங்கி உள்ளது.

இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

இன்று அஷ்டமி:

அருள்மிகு கோட்டை பைரவர்
திருக்கோயில். திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம்.
சுவாமி : பைரவர்.
மூர்த்தி : ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர். இங்கு உள்ள சத்தியகிரீசுவர் தலமும், சத்திய மூர்த்திப் பெருமாள் தலமும் மிகவும் புகழ் பெற்ற தலங்களாகும். இரண்டுமே பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் கொண்டுள்ள தலம் ஆகும். "உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள்" இங்கு தான் வீற்றிருக்கிறார். திருமுகத்தை ஒரு சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கி உள்ளனர். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. மறவன் கோட்டை எனப்படும் கோட்டையும் கோட்டை உள்ளேயும் வெளியேயும் வாழும் சகல ஜீவராசிகளும் உய்யும் வண்ணம் கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும். அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து விரிந்து காணப்படுகின்றது பாம்பாறு. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக ஸ்ரீ பைரவர் விளங்குகிறார். சகல தோஷ பரிகார தளமாகவும் இது விளங்குகிறது. விசாகம் நச்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு தலம் ஆகும்.Image may contain: 1 person, smiling, standing

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...