அருள்மிகு கோட்டை பைரவர்
திருக்கோயில். திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம்.
திருக்கோயில். திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம்.
சுவாமி : பைரவர்.
மூர்த்தி : ஸ்ரீசக்தி விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர். இங்கு உள்ள சத்தியகிரீசுவர் தலமும், சத்திய மூர்த்திப் பெருமாள் தலமும் மிகவும் புகழ் பெற்ற தலங்களாகும். இரண்டுமே பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து பாறைகளைச் செதுக்கி குடைவரையாய் உருவாக்கப்பட்டவை. பல்வேறு அற்புதங்களையும், சுரங்கப் பாதைகளையும் கொண்டுள்ள தலம் ஆகும். "உலகத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளி கொண்ட பெருமாள்" இங்கு தான் வீற்றிருக்கிறார். திருமுகத்தை ஒரு சாளரம் வழியாகவும், திருப்பாதத்தை மற்றொரு சாளரம் வழியாகவும் காணும் அளவிற்கு நீளமான, ஒரே கல்லால், பாறையைக் குடைந்து உருவாக்கி உள்ளனர். திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. மறவன் கோட்டை எனப்படும் கோட்டையும் கோட்டை உள்ளேயும் வெளியேயும் வாழும் சகல ஜீவராசிகளும் உய்யும் வண்ணம் கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி தனி கோவில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும். அவர் தம் கண்ணுக்கு முன்னால் பரந்து விரிந்து காணப்படுகின்றது பாம்பாறு. பாம்பு போல வளைந்து, நெளிந்து காணப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாக ஸ்ரீ பைரவர் விளங்குகிறார். சகல தோஷ பரிகார தளமாகவும் இது விளங்குகிறது. விசாகம் நச்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய சிறப்பு தலம் ஆகும்.
No comments:
Post a Comment