Thursday, August 6, 2020

ஓம் கருப்பண்ண சாமியே சரணம்.

 கடும் கோடையிலே சொட்டு தண்ணீருக்கே வழி இல்லாத நேரத்திலே வீசுகின்ற அனல் காற்றினிலே வாடுகின்ற பறவையாக இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்ல முடியாமல் தவிக்கின்ற பறவைகள் போல வாடி நிற்கின்றோம் அய்யா.

புலம்பெயர்ந்து நாங்கள் செல்லயில் உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் கடும் வறட்சியில் என் அய்யா உனக்கு நான் செவ் இளநீர் தேடி காடு மேடெல்லாம் சுற்றித் கலைத்து நிற்கின்றேன் ஐயா

பாவி மக்கள் நாங்கள் உனக்கு என்ன செய்ய இயலும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிற பிள்ளைகளை கையில் பிடித்துக்கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கிட்டு கண்ணீரை மட்டும் சிந்திவிட்டு எங்கள் கண்ணீரில் உன் தாகத்தை தனித்து விட்டு உன்னை பிரிய முடியாமல் ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க சென்றோம் அய்யா.

என் பிள்ளைகள் பசியால் வாடி நிற்பதை கண்டு பசியை போக்க நீ இருக்கும் பணை மரத்திலிருந்து பணபழம் ஒன்றைக் கீழே விழ செய்து என் பிள்ளைகள் பசி அடக்கி எங்களை வழி அனுப்பி வைத்தாயே.

அந்த நிமிடத்திலேயே என் குடும்பமே உன் பாதத்தில் விழுந்து கதறி அழுது எவ்வளவு பஞ்சம் வந்தாலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம் ஐயா மீண்டும் உங்களிடமே வந்து சேருவோம் என்று சபதமேற்று சென்றோம் அய்யா.

தன் பிள்ளையின் பசியறிந்து உணவுக்கு படியளக்கும் என் தெய்வமே உன்னை விட்டு நாங்கள் எங்கு சென்றாலும் உன் நினைவாகவே தான் நாங்கள் இருப்போம் என்று எங்கள் கூடவே வந்தாயோ ஐயா.

ஊரைக் காலி செய்து நடைவழி பயணமாய் காடு மலைகளை கடந்து பஞ்சம் பிழைக்க ஒரு இடத்தை கண்டோம் அய்யா. பிள்ளைகள் பசியார எங்களுக்கு கூலி வேலை கிடைத்தது ஐயா.

நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்து வந்த துக்கம் தாங்காமல் எங்களின் பாதுகாப்பிற்காக நீங்களும் எங்களுடன் ஒரு பிடி மண்ணில் பயணித்து வந்துவிட்டீர்கள் அய்யா.

எவ்வளவு பெரிய பாசக்காரன் நீ உன் பிள்ளைகளின் கஷ்டத்திற்காக அவர்களுடனே நீயும் சேர்ந்து கஷ்டப்பட்டு அவர்களை பாதுகாத்து நீ நிற்கிறாய்.

உங்கள் பிரிந்து வந்து உன் திருமுகத்தை காணாத நிற்கையில் இரவு சொப்பனத்தில் உன் வெள்ளை குதிரையுடன் வீச்சருவாள் உடன் கையில் சாட்டை உடன் காட்சி கொடுத்தது ஆசீர்வதிப்பாய்

அந்த வருடமே மழை மும்மாரி பொழிந்து ஊரில் நல்ல செழுமை நிலையை ஏற்படுத்தி விட்டு அனைவரின் சொப்பனத்தில் ஊருக்கு திரும்ப உத்தரவிட்டு எங்கோ இருக்கும் எங்களை ஊருக்கு வர செய்தாய்.

வந்து பார்த்தால் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தை கண்டு வியந்தோம் நிரம்பாத ஏரி நிரம்பி வழிகிறது வற்றி கிடந்த கிணறுகள் நீரில் மூழ்கி கிடக்கிறது.

அப்போதுதான் புரிந்தது தன் பிள்ளையின் பாசத்தை கண்டு ஐயா கருப்பன் அனைத்தையும் செய்துள்ளான் என்று கருப்பன் பாசத்தை அளந்து பார்க்க முடியாது என்பது உண்மைதான்.

Image may contain: one or more people and people standing

இன்று சங்கடஹர சதுர்த்தி.

 விநாயகரை வழிபட உகந்தது சதுர்த்தி தினம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் சதுர்த்தி திதி வரும். இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று போற்றப்படுகிறது.

வாழ்க எல்லா வளங்களுடன்.

No photo description available.

தமிழக அரசு தவறாக பாதையில் செல்லுகிறது.

 திமுக ஏன் இந்த மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது. எது வந்தாலும் எதிர்ப்பது என்பது அவர்கள் நிலை.

ஆனால் அதிமுக?? அடுத்த தேர்தலை மனதில் கொண்டு முட்டாள்தனமாக திமுகவின் வீரியத்தை முனை மழுங்க செய்வதாக நினைத்து கொண்டு தவறு செய்து விட்டது.

திமுக வை முந்திக் கொண்டு செயல்பட்டு தான் அதற்கு பயப்படுவடுவதை ஒத்துக் கொண்டு விட்டது.

இப்போது என்ன நடக்கும்? திமுக வழக்கம் போல் "பார்த்தியா!! பயந்துட்டாங்க!" என்று மார் தட்டும்.

எவனாவது இதற்காக ஒட்டை மாத்தி அதிமுகவுக்கு குத்த போறானா?

வாய்ப்பேயில்ல ராசா!
எப்படியும் ஜாதி பார்த்து காசு வாங்கிட்டு குத்த போறானுங்க

ஆக தோற்றாலும் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் வகையில் இது ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பு இல்லை, மாறி வரும் உலகுக்கு ஏற்ப தமிழக அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் திட்டம் இது என்ற உண்மையை உரத்து கூறி செல்லும் வாய்ப்பை இழந்து நிற்கிறது.

அது சரி! அதுக்கெல்லாம் முதுகெலும்பு வேணுமே!

நெல்லி மரம் வளர்த்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

 செல்வாதிபதி '#குபேரனே #வறுமையில்_வாடிய_போது_மீண்டும்_பணக்காரனாக_செய்த_பரிகாரம்_என்னன்னு_நீங்களும்_தெரிஞ்சிக்கனுமா?

சிவ பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர் குபேரன். அவரின் பக்தியை மெச்சிய ஈசன் அவரை செல்வதிற்கு அதிபதியாக நியமித்தார். செல்வத்திற்கு அதிபதியாக இருப்பது குபேரன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! அப்படி இருக்கும் பொழுது அந்த குபேரனுக்கு கூட ஒரு முறை வறுமை ஏற்பட்டது என்று சொன்னால் அதிர்ச்சியாக தானே இருக்கும்? அவருக்கு ஏன் இந்த நிலைமை? குபேரனுக்கு எப்படி வறுமை ஏற்பட்டது? அதற்காக அவர் என்ன செய்தார்? மீண்டும் அவருக்கு எப்படி பணக்காரன் ஆகும் வாய்ப்பு கிட்டியது? இது போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

ஸ்ரீமன் நாராயணருக்கே திருமண உதவி செய்ய குபேரன் கடன் கொடுத்ததாக புராண குறிப்புகள் உள்ளன. திருப்பதியில் இருக்கும் ஏழுமலையான் கோவிலில் இருக்கும் உண்டியலுக்கு குபேர காணிக்கை என்பது தான் பெயர். கலியுகம் முடியும் வரை அதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை குபேரனுக்கு வட்டியாக மகாவிஷ்ணு செலுத்தப்படுவது என்பது நிபந்தனை. இதில் அதர்ம வழியில் சம்பாதிப்பவர்கள் பணமெல்லாம் வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதித்து காணிக்கை செலுத்துபவர்களின் பணமெல்லாம் அசலின் ஒரு பகுதியாகவும் ஏழுமலையான் நம்மிடம் வசூலிக்கிறார். இவ்வாறு இருக்கும் பொழுது அந்த குபேரனுக்கு எப்படி வறுமை ஏற்பட்டு இருக்கும்? என்கிற கதையை பார்ப்போம்.

ஒரு முறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் நாடு, நகரங்களை எல்லாம் பெரும்பாலானோர் இழந்து நிற்கதியாய் நின்றனர். அவர்களில் ஒருவர் குபேரன். போரின் பொழுது இழந்த தன்னுடைய நாடு, நகரமெல்லாம் திரும்ப கிடைக்க என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் குபேரர்.

அந்த சமயத்தில் தீவிர சிவபக்தரான குபேரர் சிவபெருமானிடம் சென்று ஆலோசனை கேட்டார். அதற்கு சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா? ‘நீர் உமது வீட்டில் நெல்லி மரங்களை வளர்த்து வருவாயாக’ என்று கூறினாராம். சிவபெருமான் வாக்கை வேதவாக்காக எண்ணிய குபேரனும் அப்படியே வளர்த்து வந்தாராம்.

நெல்லி மரங்கள் அனைத்தும் நெடு நெடுவென வளர்ந்து பூக்கள் பூத்து, காய்க்க துவங்கியது. பின்னர் காய்கள் அனைத்தும் கனிகளாக மாறி நெல்லி மரங்கள் செழித்து பசுமையாக வளர்ந்து நின்றன. இந்த நெல்லி மரங்கள் எந்த அளவிற்கு பசுமையாக வளர்ந்து வந்ததோ அதே போல குபேரன் இழந்த நாடு நகரம் எல்லாம் இழந்தது இழந்த படியே திரும்பவும் அவருக்கு கிடைத்ததாம். இதனால் மனம் மகிழ்ந்த குபேரன் சிவபெருமானிடம் ஓடிச்சென்று தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்கு முனைந்தார்.

ஈசனே நீங்கள் கூறியபடி நான் வளர்த்த நெல்லி மரங்கள் வளர வளர என்னுடைய செல்வ வளமும் விரைவாக வளர்ந்து வந்தது. அது எப்படி சாத்தியமானது இறைவா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே என்று கேட்டாராம். அதற்கு பதிலளித்த சிவபெருமான் கூறியது இது தான்.

நெல்லி மரம் என்பது மகாலட்சுமியின் சொரூபம். நீ தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தது நெல்லிமரங்களை அல்ல, லக்ஷ்மி தேவிகளை தான் என்றாராம். எந்த அளவிற்கு லக்ஷ்மி தேவிகள் வளர்ந்து உன் வீட்டில் நெல்லி மரங்களாக கனிகளை கொடுத்து பெருகி நின்றதோ அதே போல் உன்னுடைய செல்வ வளமும் பெருகியது. மகாலட்சுமி இருக்கும் இடத்தில் வறுமைக்கு இடம் இல்லை அல்லவா? அதனால் தான் இந்த பரிகாரத்தை உனக்கு உபதேசித்தேன் என்றாராம்.

எனவே நெல்லி மரம் வளர்த்து வந்தால் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுவது உண்மையே. செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் குபேரனுக்கு வறுமை ஏற்பட்ட பொழுது சிவபெருமான் பரிகாரமாக செய்ய சொன்னது நெல்லி மரங்களை வளர்த்தால் தான். அது குபேரனுக்கு மட்டும் அல்ல. மனிதர்களாகிய நமக்கும் கூறப்பட்ட எளிய பரிகாரம் தான். ஒவ்வொரு வீட்டிலும் நெல்லி மரம் வளர்ப்பது மகா லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது ஆரோக்கியம் சார்ந்த விஷயம். நெல்லி மரத்தை வளர்த்தால் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் கிடைக்கும். செல்வதற்கு செல்வமும் பெருகும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.

Image may contain: 1 person

#அயோத்தியா...

 அயோத்தியாவில் இருந்து 7 கிமீ தூரத்தில் இருக்கும் Faizabad ல் நிலம் இந்துக்களால் ஆக்ரமிக்கப்பட்டதாக எழுதுகிறார்கள்.

அயோத்தியில் கோயிலை கட்டி
அந்த இடத்தை வியாபார ஸ்தலமாக்க நடக்கும் முயற்சியே இந்த கோயில் என எழுதுகிறார்கள்.

அங்கிருக்கும் நிலம் இந்துக்களால் விலைக்கு வாங்கப்பட்டதாக வருத்தப்படுகிறார்கள்.

Faizabad ன் பெயர் SAKET - means heaven!!

கோசல நாட்டின் முக்கிய இடமாக இருந்தது முன்பு Saket எனப்பட்ட Faizabad.

Awadh ன் நவாப் Faiz Baksh இறந்த பின் தான் இந்த இடம் Faizabad என பெயர் மாற்றம் ஆனது.

1722 ல் Sadat Ali khan 1 தலைமையில் அவுத் Faizabad தலைநகரால் முகலாயர்கள் காலத்தில் ஆளப்பட்டது.
முகலாயர்களின் அவுரங்கசிப் காலத்தில் இருந்து அந்த ஊரில் இருந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன.

அயோத்தியாவின் பக்கத்தில் அரண்மனை கட்டினான் Sadat Ali Khan . இவனின் தாத்தா ஈரானில் இருந்து ஷாஜஹான் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பணக்கார வியாபாரி!!

இந்த நவாப் காலத்தில் தான் நாதிர்ஷா என்னும் ஈரானிய மன்னன் டில்லி வரை வந்து முகலாயரை தோற்கடித்து 1739 ல் Faizabad ன் நவாப்பை கொன்றான்.

எத்தனை முறை இந்த Faizabad ன் நிலம் முகலாயர்களால், ஈரானியர்களால் பறிக்கப்பட்டன.

எத்தனை இந்து மக்கள் கொல்லப்பட்டனர்?? எத்தனை இந்துக்களின் நிலங்கள் கால காலமாக முகலாயர்களால் ஆளப்பட்டன??

HISTORY REPEAT ITSELF!!

இழந்தவனுக்கு எத்தனை ஆண்டுகளாயினும் இழந்தவை திரும்ப கிடைக்கும். அது தான் கர்மா.

கர்மாவிற்கு மன்னராட்சி, மக்களாட்சி என்ற வித்யாசம் தேவையில்லை!!!

2018 நவம்பரில் யோகியின் அரசு Faizabad மாவட்டத்தை அயோத்தி மாவட்டம் என பெயர் மாற்றம் செய்தது.

பல வருடங்களாக இந்துக்கள் இழந்த நிலங்களை, உயிர்களை பற்றி யார் எழுதுவது??

உயிருக்கு உத்ரவாதம் இல்லாத நிலையிலும் அத்தனை அட்டூழியர்களையும் மீறி உயிர் பிழைத்து இருப்பவன் தான் இன்றைய இந்து.

இப்ப Faizabad ல், அயோத்தியாவில் கோயில் சார்ந்த வியாபாரத்திற்கு நிலம் பணம் கொடுத்து தான் வாங்கி இருக்கான். யாரிடமும் இருந்து பிடுங்கவில்லை.

எந்த மதம் தான் வியாபாரம் செய்யவில்லை!!
ஆமாம், கோயில்களுக்கான பூஜை சாமான் விற்பவர் இந்துக்கள் மட்டுமா??
அயோத்தியில் அனைத்து மத வியாபாரிகளும் உண்டு!!!

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான கோயில்களை சுற்றி கோயில் சார்ந்த வியாபாரிகள் அனைத்து மதத்தையும் சார்ந்தவர்களே.

இந்துக்களின் உரிமையை, உணர்வை கிண்டல் செய்வது அளவுக்கு அதிகமான நடுநிலையை பொது வெளியில் காட்ட நினைப்பவர்களே.

இதன் பெயர் நடு நிலைமையாம்!! அதே நடுநிலையோடு மற்ற மதத்தையும் கிண்டல் செய்து பாருங்களேன்!!
பிற மத வியாபாரத்தையும், அது சார்ந்த வெளிநாட்டு பயணத்தையும் பற்றி யாராவது பேசுவார்களா??

உள்குத்தோ??

 ஸ்டாலின் திமுக வில் இருக்கும் 90% (!) இந்துக்களை சமாதானப் படுத்த முயலும் போது... ஆ.ராசா சட்டென்று வந்து ஆட்டதை ஏன் கலைக்கிறாரு?

அக்கா கனிமொழி ஏவி விட்டுச்சோ,? உள்குத்தோ??

குத்துனது நண்பனா இருந்தா உயிரே போனாலும் வெளியே சொல்ல கூடாதுப்பா. ... 

Image may contain: 2 people, people sitting

புத்தகம் எப்போது வெளியீடு !

 நிகழ்கால தமிழகத்தை கட்டியமைத்த கடவுள் கருணாநிதி என்று ஒரு கூட்டம் சொல்லி திரிகிறது.

இது எத்தனை பெரிய பம்மாத்து?

இதற்கு பதில் சொல்லலாம் என்று எழுத உட்கார்ந்த பிறகுதான் நான் ஒரு புத்தகம் எழுத வேண்டியுள்ளது என்று உணர்கிறேன்.

இதான் திமுக வின் டெக்னிக். போகிற போக்கில் ஒரு பெரும் பொய்யை சொல்லி செல்வார்கள்.
அவர்கள் எழுதுவது வெறும் இரண்டு வரிகளே!

ஆனால் அது பொய் என்று நிறுவ நாம் ஒரு புத்தகமே எழுத வேண்டும்.

அவ்வளவு கஷ்டப்பட்டு ராவும் பகலுமாக எழுதி முன்னே கொண்டு வைத்தால் இதெல்லாம் ஜாதி காழ்ப்புணர்வில் சொல்கிறீர்கள் என்று ஒற்றை அடியில் சொல்லி நகர்ந்து விடும் மூடர்களை கொண்ட கூட்டம் இந்த திமுக.

ஒரே ஒரு உதாரணம். கடந்த 4 மாதங்களில் மட்டும் பாருங்கள். இவர்கள் மீது வைக்கப்படும் எந்த குற்றசாட்டுக்கும் பதிலே சொல்ல மாட்டார்கள்.
மேலே மேலே சம்பந்தமில்லாமல் விஷயங்களில் தாவி தொடர்ந்து பொய்களை சொல்லிக் கொண்டே செல்வார்கள்.

தமிழக மக்களில் 70% மக்களின் மூடத்தனத்தின், சுயநலத்தில் ஜாதி அபிமானத்தின் மீது வைத்திருக்கும் அசாத்தியமான நம்பிக்கை !

இது ஒன்றே இவர்களை இத்தனை நாள் வாழ வைத்திருக்கிறது. வளர வைத்திருக்கிறது.
ஒரு நல்லாட்சி எப்படி இருக்கும் என்பதை மறந்தே போன ஒரு கூட்டம் நாம். மறக்கடித்த கூட்டம் இவர்கள்.

ஒரு 50 ஆண்டுகால தவறுகளை களைய சரியான தலைமை இல்லையென்றால் இன்னும் 100 வருடங்கள் ஆகலாம்.

Image may contain: one or more people

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...