Thursday, August 6, 2020

#அயோத்தியா...

 அயோத்தியாவில் இருந்து 7 கிமீ தூரத்தில் இருக்கும் Faizabad ல் நிலம் இந்துக்களால் ஆக்ரமிக்கப்பட்டதாக எழுதுகிறார்கள்.

அயோத்தியில் கோயிலை கட்டி
அந்த இடத்தை வியாபார ஸ்தலமாக்க நடக்கும் முயற்சியே இந்த கோயில் என எழுதுகிறார்கள்.

அங்கிருக்கும் நிலம் இந்துக்களால் விலைக்கு வாங்கப்பட்டதாக வருத்தப்படுகிறார்கள்.

Faizabad ன் பெயர் SAKET - means heaven!!

கோசல நாட்டின் முக்கிய இடமாக இருந்தது முன்பு Saket எனப்பட்ட Faizabad.

Awadh ன் நவாப் Faiz Baksh இறந்த பின் தான் இந்த இடம் Faizabad என பெயர் மாற்றம் ஆனது.

1722 ல் Sadat Ali khan 1 தலைமையில் அவுத் Faizabad தலைநகரால் முகலாயர்கள் காலத்தில் ஆளப்பட்டது.
முகலாயர்களின் அவுரங்கசிப் காலத்தில் இருந்து அந்த ஊரில் இருந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன.

அயோத்தியாவின் பக்கத்தில் அரண்மனை கட்டினான் Sadat Ali Khan . இவனின் தாத்தா ஈரானில் இருந்து ஷாஜஹான் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பணக்கார வியாபாரி!!

இந்த நவாப் காலத்தில் தான் நாதிர்ஷா என்னும் ஈரானிய மன்னன் டில்லி வரை வந்து முகலாயரை தோற்கடித்து 1739 ல் Faizabad ன் நவாப்பை கொன்றான்.

எத்தனை முறை இந்த Faizabad ன் நிலம் முகலாயர்களால், ஈரானியர்களால் பறிக்கப்பட்டன.

எத்தனை இந்து மக்கள் கொல்லப்பட்டனர்?? எத்தனை இந்துக்களின் நிலங்கள் கால காலமாக முகலாயர்களால் ஆளப்பட்டன??

HISTORY REPEAT ITSELF!!

இழந்தவனுக்கு எத்தனை ஆண்டுகளாயினும் இழந்தவை திரும்ப கிடைக்கும். அது தான் கர்மா.

கர்மாவிற்கு மன்னராட்சி, மக்களாட்சி என்ற வித்யாசம் தேவையில்லை!!!

2018 நவம்பரில் யோகியின் அரசு Faizabad மாவட்டத்தை அயோத்தி மாவட்டம் என பெயர் மாற்றம் செய்தது.

பல வருடங்களாக இந்துக்கள் இழந்த நிலங்களை, உயிர்களை பற்றி யார் எழுதுவது??

உயிருக்கு உத்ரவாதம் இல்லாத நிலையிலும் அத்தனை அட்டூழியர்களையும் மீறி உயிர் பிழைத்து இருப்பவன் தான் இன்றைய இந்து.

இப்ப Faizabad ல், அயோத்தியாவில் கோயில் சார்ந்த வியாபாரத்திற்கு நிலம் பணம் கொடுத்து தான் வாங்கி இருக்கான். யாரிடமும் இருந்து பிடுங்கவில்லை.

எந்த மதம் தான் வியாபாரம் செய்யவில்லை!!
ஆமாம், கோயில்களுக்கான பூஜை சாமான் விற்பவர் இந்துக்கள் மட்டுமா??
அயோத்தியில் அனைத்து மத வியாபாரிகளும் உண்டு!!!

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான கோயில்களை சுற்றி கோயில் சார்ந்த வியாபாரிகள் அனைத்து மதத்தையும் சார்ந்தவர்களே.

இந்துக்களின் உரிமையை, உணர்வை கிண்டல் செய்வது அளவுக்கு அதிகமான நடுநிலையை பொது வெளியில் காட்ட நினைப்பவர்களே.

இதன் பெயர் நடு நிலைமையாம்!! அதே நடுநிலையோடு மற்ற மதத்தையும் கிண்டல் செய்து பாருங்களேன்!!
பிற மத வியாபாரத்தையும், அது சார்ந்த வெளிநாட்டு பயணத்தையும் பற்றி யாராவது பேசுவார்களா??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...