கடும் கோடையிலே சொட்டு தண்ணீருக்கே வழி இல்லாத நேரத்திலே வீசுகின்ற அனல் காற்றினிலே வாடுகின்ற பறவையாக இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்ல முடியாமல் தவிக்கின்ற பறவைகள் போல வாடி நிற்கின்றோம் அய்யா.
புலம்பெயர்ந்து நாங்கள் செல்லயில் உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் கடும் வறட்சியில் என் அய்யா உனக்கு நான் செவ் இளநீர் தேடி காடு மேடெல்லாம் சுற்றித் கலைத்து நிற்கின்றேன் ஐயா
பாவி மக்கள் நாங்கள் உனக்கு என்ன செய்ய இயலும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிற பிள்ளைகளை கையில் பிடித்துக்கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கிட்டு கண்ணீரை மட்டும் சிந்திவிட்டு எங்கள் கண்ணீரில் உன் தாகத்தை தனித்து விட்டு உன்னை பிரிய முடியாமல் ஒரு பிடி மண்ணை எடுத்துக் கொண்டு பஞ்சம் பிழைக்க சென்றோம் அய்யா.
என் பிள்ளைகள் பசியால் வாடி நிற்பதை கண்டு பசியை போக்க நீ இருக்கும் பணை மரத்திலிருந்து பணபழம் ஒன்றைக் கீழே விழ செய்து என் பிள்ளைகள் பசி அடக்கி எங்களை வழி அனுப்பி வைத்தாயே.
அந்த நிமிடத்திலேயே என் குடும்பமே உன் பாதத்தில் விழுந்து கதறி அழுது எவ்வளவு பஞ்சம் வந்தாலும் உன்னை விட்டுப் பிரிய மாட்டோம் ஐயா மீண்டும் உங்களிடமே வந்து சேருவோம் என்று சபதமேற்று சென்றோம் அய்யா.
தன் பிள்ளையின் பசியறிந்து உணவுக்கு படியளக்கும் என் தெய்வமே உன்னை விட்டு நாங்கள் எங்கு சென்றாலும் உன் நினைவாகவே தான் நாங்கள் இருப்போம் என்று எங்கள் கூடவே வந்தாயோ ஐயா.
ஊரைக் காலி செய்து நடைவழி பயணமாய் காடு மலைகளை கடந்து பஞ்சம் பிழைக்க ஒரு இடத்தை கண்டோம் அய்யா. பிள்ளைகள் பசியார எங்களுக்கு கூலி வேலை கிடைத்தது ஐயா.
நாங்கள் உங்களை விட்டுப் பிரிந்து வந்த துக்கம் தாங்காமல் எங்களின் பாதுகாப்பிற்காக நீங்களும் எங்களுடன் ஒரு பிடி மண்ணில் பயணித்து வந்துவிட்டீர்கள் அய்யா.
எவ்வளவு பெரிய பாசக்காரன் நீ உன் பிள்ளைகளின் கஷ்டத்திற்காக அவர்களுடனே நீயும் சேர்ந்து கஷ்டப்பட்டு அவர்களை பாதுகாத்து நீ நிற்கிறாய்.
உங்கள் பிரிந்து வந்து உன் திருமுகத்தை காணாத நிற்கையில் இரவு சொப்பனத்தில் உன் வெள்ளை குதிரையுடன் வீச்சருவாள் உடன் கையில் சாட்டை உடன் காட்சி கொடுத்தது ஆசீர்வதிப்பாய்
அந்த வருடமே மழை மும்மாரி பொழிந்து ஊரில் நல்ல செழுமை நிலையை ஏற்படுத்தி விட்டு அனைவரின் சொப்பனத்தில் ஊருக்கு திரும்ப உத்தரவிட்டு எங்கோ இருக்கும் எங்களை ஊருக்கு வர செய்தாய்.
வந்து பார்த்தால் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியத்தை கண்டு வியந்தோம் நிரம்பாத ஏரி நிரம்பி வழிகிறது வற்றி கிடந்த கிணறுகள் நீரில் மூழ்கி கிடக்கிறது.
அப்போதுதான் புரிந்தது தன் பிள்ளையின் பாசத்தை கண்டு ஐயா கருப்பன் அனைத்தையும் செய்துள்ளான் என்று கருப்பன் பாசத்தை அளந்து பார்க்க முடியாது என்பது உண்மைதான்.
No comments:
Post a Comment