Friday, January 1, 2021

அம்மா நினைவிடம் .

 #புரட்சித்தலைவி_அம்மா

#ஜனவரி முதல் வாரம் #அரசிடம் ஒப்படைப்பு - #பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது #அதிகாரிகள் தகவல்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து இரவு, பகலாக ஒப்பந்தக்காரர்களுடன், பொதுப்பணித்துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வந்தது. கொரோனா மற்றும் மழை காரணமாக திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிப்பதில் சற்று காலதாமதம் ஆனது. இருந்தாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார். இந்தநிலையில் தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஜெயலலிதா நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது கட்டுமானத்திற்கு உதவிகரமாக இருந்த மரக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவிடம்,அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் போன்றவை 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப்பகுதி முழுவதும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகளால் தோட்டம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் நினைவிட வளாகத்தில் ரூ.12 கோடி மதிப்பில் அருங்காட்சியகம் கட்டும் பணி நிறைவடைந்து உள்ளது. இங்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், மக்களுக்கு செய்த பணிகள் உள்ளிட்டவை டிஜிட்டல் முறையில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்தில் இந்தப்பணிகள் நிறைவடையும். ஜனவரி முதல் வாரத்தில் நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்.
இந்தியாவில் மறைந்த அரசியல் தலைவர்களுக்கு நினைவிடங்கள் உள்ளன. இருந்தாலும் நவீன தொழில்நுட்பங்களுடன் நினைவிடம் அமைக்கப்பட்டு, அதில் டிஜிட்டல் முறையில் அவருடைய வாழ்க்கை முறைகள், அவர் செய்த சாதனைகள், தியாகங்கள், மக்களுக்கு செய்த உயர்ந்த சேவைகள், வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள், அவர் படித்த நூல்கள் போன்றவை அடங்கிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருப்பது இதுவே முதன் முறையாகும்.
இது சென்னைக்கு மேலும் பெருமையை சேர்க்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நினைவிடத்தை பராமரிக்க அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பொதுமக்கள் பார்வைக்கு திறப்பது குறித்து அரசு முடிவெடுத்து அறிவிக்கும்.
Image may contain: outdoor

சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் 80 ஊழியர்களுக்கு கொரோனா.

 சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டலில் 80 ஊழியர்களுக்கு கொரோனா
கொரோனா வைரஸ்


















தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.   சென்னை மாநகராட்சி   பகுதியிலும் 300-க்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கிண்டி ஐ.ஐ.டி.யில் ஒரே நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நடத்திய கொரோனா பரிசோதனையில் 80 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று இருந்ததால் 80 பேரும் கிண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த நட்சத்திர ஓட்டலில் நடக்க இருந்த விழாக்கள் அனைத்தும் வருகிற 10-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

நட்சத்திர ஓட்டலில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால்   சென்னை மாநகராட்சி   எல்லையில் உள்ள மற்ற ஓட்டல் ஊழியர்களுக்கும்   கொரோனா பரிசோதனை   செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கடன் சுமையை குறைக்கும் நரசிம்மர் விரதம்.

 லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட்டால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கடன் சுமையை குறைக்கும் நரசிம்மர் விரதம்
லட்சுமி நரசிம்மர்


















அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை விரதமிருந்து வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து 'ஓம் நமோ நாராயணாய' எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார்.

அவரது படத்தை பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு விரதமிருந்து நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

'நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்'.

இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது.

இதை முறையாக விரதமிருந்த கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும். இதனால் கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும்.

எண்வகை விரதங்களும்... அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்களும்.

 விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும்.

எண்வகை விரதங்களும்... அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்களும்
வீட்டில் பூஜை


















இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதிச் செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். 

விரதம் என்பது ஒரு வகையான விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும். 

எண்வகை விரதங்கள்

சந்தாபண விரதம்
மஹாசந்தாபண விரதம்
பிரசமத்திய (அ) கிரிச்சா விரதம்
அதிகிரிச்சா விரதம்
பராக விரதம்
தப்த கிரிச்சா விரதம்
பதகிரிச்ச விரதம்
சாந்தாராயன விரதம்

இளையராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்.

 இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இளையராஜாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்
இளையராஜா


















இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால் அவரது அறையிலிருந்த பொருட்கள், விருதுகள், இசைக்கருவிகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்து, அங்கு செல்லவில்லை.

இதுகுறித்து, இளையராஜா மன அழுத்ததில் இருப்பதாகவும் அதனால் அவர் பிரசாத் ஸ்டுடியோ செல்லவில்லை எனவும் தகவல் வெளியானது. பின்னர் இளையராஜாவின் பொருட்கள் மொத்தமும் பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து ஒரு லாரியின் மூலம் இல்லத்திற்கு அவரது உதவியாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.

இந்நிலையில் இளையராஜாவின் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

அதில், தமிழக அரசே இசைகடவுள் இளையராஜா அவர்களின் இசைச் சொத்துகளை சூறையாடிய பிரசாத் ஸ்டுடியோ கும்பலைக் கைது செய்! 40 ஆண்டுகாலமாக இசைஞானி பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோவை அரசுடைமையாக்கி இசை மியூசியத்தை உருவாக்கி என்று கூறிக் கீழே இசைஞானி பக்தர்கள் இசைஞானி இசையால் இணைந்தோம் - வாட்ஸ் ஆப் குரூப் சென்னை என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளிடம் உணவைத் திணிக்காதீர்கள்....

 சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது.

குழந்தை திட உணவை புறக்கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறுபடுவதாலும் விழுங்கும் முறை வழக்கமான உறிஞ்சிக்குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்கக்கூடும்.
குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயப்படுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்கூழ் போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டித்தன்மையையும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும்.
குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள். அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கு ஏற்ப கொடுங்கள்.
குழந்தையை பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள். உதாரணமாக, அதிகபடியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த தின்பண்ட வகை இவைகள் குழந்தையை பெருக்க வைக்கும். எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக பின்பு தடித்த குழந்தையாகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான்.
புளிக்காத பிரிட்ஜில் வைக்காத தயிர் சாதம் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
தினம் தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாவது குழந்தைகளுக்கு காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச் சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
சில குழந்தைகள் கையில் எது கிடைத்தாலும் வாயில் போட்டுக்கொள்ளும். இது போன்ற குழந்தைகளுக்கு கையில் பிடித்துக்கொள்ளும் வகையிலான ரொட்டி, அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரட் போன்றவற்றை கொடுக்கலாம்.
அதிகமான கடின உணவை கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகரியமாக அமையும்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
குழந்தைகளுக்கு நிறைய கலர்புல்லான காய்கறிகள், பழங்கள் என்று அதிகமாக கொடுக்கலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச் சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத் தவிர சிக்கன் சூப், வேக வைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புச் சாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களும் மாறும் அதற்கேற்ப கவனித்து குழந்தைகளுக்கு உணவளியுங்கள்.
Image may contain: 1 person

தோஷங்களை நீக்கும் மயில் இறகு.

 மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும்.

சனி தோஷம்: மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
*வாஸ்து தோஷம்:*
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
*அலுமாரி:*
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யுமாம்.
*எதிர்மறை ஆற்றல்கள்:*
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
*அலுவலக இடம்:*
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
*பூச்சிகள் வராது:*
மயில் இறகு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதுவும் இதனை வீட்டின் சுற்றில் வைத்தால், பல்லிகள் மற்றும் இதர பூச்சிகள் வருவதைத் தடுக்கலாம்.
*அன்யோன்யம் மற்றும் புரிதல்:*
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.
இதுப்போன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி. 🙏
*ஓம் நமசிவாய*

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...