Friday, January 1, 2021

குழந்தைகளிடம் உணவைத் திணிக்காதீர்கள்....

 சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது.

குழந்தை திட உணவை புறக்கணித்தால் அதனைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறுபடுவதாலும் விழுங்கும் முறை வழக்கமான உறிஞ்சிக்குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்கக்கூடும்.
குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயப்படுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்கூழ் போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டித்தன்மையையும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும்.
குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள். அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள். அவர் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கு ஏற்ப கொடுங்கள்.
குழந்தையை பெருக்க வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள். உதாரணமாக, அதிகபடியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த தின்பண்ட வகை இவைகள் குழந்தையை பெருக்க வைக்கும். எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக பின்பு தடித்த குழந்தையாகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான்.
புளிக்காத பிரிட்ஜில் வைக்காத தயிர் சாதம் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.
தினம் தோறும் நான்கு அல்லது ஐந்து முறையாவது குழந்தைகளுக்கு காய்கறி உணவுகளையும், பழங்களையும் கொடுங்கள். குழந்தைகளுக்கு நார்ச் சத்து மிகவும் முக்கியம். அவை அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுங்கள்.
சில குழந்தைகள் கையில் எது கிடைத்தாலும் வாயில் போட்டுக்கொள்ளும். இது போன்ற குழந்தைகளுக்கு கையில் பிடித்துக்கொள்ளும் வகையிலான ரொட்டி, அப்பம் அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரட் போன்றவற்றை கொடுக்கலாம்.
அதிகமான கடின உணவை கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவி புரிகின்றது. குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது சௌகரியமாக அமையும்.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
குழந்தைகளுக்கு நிறைய கலர்புல்லான காய்கறிகள், பழங்கள் என்று அதிகமாக கொடுக்கலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், பி புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச் சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத் தவிர சிக்கன் சூப், வேக வைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புச் சாதம் கொடுக்கலாம். வளர வளர குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்களும் மாறும் அதற்கேற்ப கவனித்து குழந்தைகளுக்கு உணவளியுங்கள்.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...