Saturday, January 2, 2021

பல வகைகள் கொண்ட வாழைப்பழத்தில் உள்ள மருத்துவப் பயன்.

 மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் இது.

வாழைப்பழத்தில் பல வகைகள் உள்ளன அவை:
பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இன்னமும் பல வகைகள் இப்பழத்தில் உண்டு.
பொதுவாக எல்லா வாழைப்பழங்களிலும் வைட்டமின் ஏ, பி, பி2, சி உய்ர்சத்துக்களும், சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்துக்களும் நிரம்பியுள்ளன.
இப்பழத்திலுள்ள சத்துக்கள்
நீர் (ஈரப்பதம்) - 66.4 கிராம்
நார் - 0.4 கிராம்
கொழுப்பு - 0.3 கிராம்
புரதம் - 1.2 கிராம்
மாவுப்பொருள் - 28.0 கிராம்
சக்தி (எனர்ஜி) - 114.0 கலோரி
பாஸ்பரஸ் - 36.0 மி;.லி
இரும்புச்சத்து - 0.8 மி.கி
சுண்ணாம்புச் சத்து - 16.0 மி.கி
தையாமின் - 0.05 யு.ஜி
கரோட்டின் - 0.78 மி.கி
ரைபோஃபிளேவின் - 0.07 மி.கி
நியாசின் - 0.5 மி.கி
வைட்டமின் ஏ - 12.0 ஐ.கியு
வைட்டமின் பி1 - 0.5 மி.கி
வைட்டமின் பி2 - 0.08 மி.கி
எல்லா வகை பழங்களிலும் மனித உடல் ஆரோக்கியத்திற்கும், அவன் வளர்ச்சிக்கும் பெரும் உதவி செய்கிறது. எல்லா வாழைப் பழங்களும் மருத்துவப் பயன்கள் கொண்டவையே. இனி ஒவ்வொரு வகையான பழத்தின் மருத்துவப் பயன்களைக் காணலாம்.
பூவன் வாழைப்பழம்:
இப்பழம் நல்ல ஜீரண சக்தியை தரக்கூடியது
உடலுக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கக் கூடியது. இரத்த விருத்தியைத் தரும்.
தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன்படக் கூடியது.
மலச்சிக்கலை அகற்றுவதில், மிகவும் அற்புதமாக பயன்படக் கூடிய இப்பழத்தினை தினம் இரவு ஆகாரத்திற்கு பின் சாப்பி;ட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
ஆஸ்துமாக்காரர்கள், அதிக கோழை கட்டிக்கொண்டவர்கள, குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், நீரழிவு நோயாளர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது.
அடிக்கடி அஜீரணக் கோளாறா?
இவர்கள் தினமும் அதிகப்படியாக உணவு உண்பதை தவிர்த்து விட்டு தினமும் ஒரு வேளை மட்டுமே இப்பழத்தை இரண்டு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
வாழைப்பழத்தின் முழுப்பயனையும் பெற வேண்டுமானால் அதன் மேல் லேசாக கரும்புள்ளிகள் விழுந்தபின் வாங்கி சாப்பிடுவது நல்லது.
அதிக விலையுள்ள ரஸ்தாளி, மலை, செவ்வாரைப் பழத்தைவிட பூவன்பழம் குறைந்த விலைக்கு சத்துள்ள பழமாக கிடைக்கும் என்பதை மறவாதீர்.
ரஸ்தாளிப் பழம்:
உண்பதற்கு சுவையாக இருக்கும் இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது என்பார்கள்.
இதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம் மென்று ஆகிவிடும்.
பசியை மந்தப்படுத்தும் இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப்பது நல்லது.
பலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு. உடனே சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
ஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பினும் மந்தத்தை தரும்.
அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து இருப்பதால் நீரழிவுக்காரர்கள் இப்பழத்தை நினைக்காமலிருப்பது நல்லது.
வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த
நன்கு கனிந்த ரஸ்தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து, கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடு;த்து வந்தால, குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பச்சை வாழைப்பழம்:
பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.
பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.
நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. ( அதாவது கால தாமதமாய் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுக்த் தொடங்கிவிடும்.)
இப்பழம் அதிக குளிர்ச்சி தரும் சுபாவம் கொண்டது
குறைந்த அளவே இப்பழத்தை சாப்பிடுவது நல்லது.
அதிக உஷ்ணக்காரர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது.
மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.
பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.
மலை வாழைப்பழம்:
சற்று விலை அதிகமான பழம். சாமானிய மக்களுக்கு எட்டாத பழம்
வாத நோய்க்காரர்களை தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம்.
நல்ல ருசியும்,
அருமையான
வாசனையும் கொண்ட பழம்.
இதிலே சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும்.
சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.
இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும்.
தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் ;சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
பசினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல மலமிளக்கியாக உதவும்.
நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
அஜீரண கோளாறு நீங்க
ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும். பயப்பட வேண்டாம்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது.
பொதுவாக இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.
பேயன் வாழைப்பழம்:
தமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம்
அதிக உஷ்ணமான தேகத்தை பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். அதாவது சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது பேயன்.
குழந்தைகளுக்கு ஏற்படும் கணைச் சூட்டை தணிக்கும் இயல்பு கொண்டது
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
மலச்சிக்கலை நீக்கும்
தேகத்தில் அதிக குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் இது நுரையீரலில் கோழையை கட்ட வைத்து நுரையீரல் கோளாறுகளுக்கு தள்ளிவிடும். வாரத்திற்கு இரண்டோ மூன்றோ சாப்பிடலாம்.
கற்பூர வாழைப்பழம்
சிறிது அளவில் இருக்கும்
இனிப்புச் சுவை கொண்டது. நல்ல ருசியாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நன்கு பயன்படுகிறது.
தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆற உதவுகிறது
தலைபாரம் நீங்கப் பயன்படும்.
இளைஞர்களுக்கு சுறுசுறுப்பை தரும் இனிய பழம்
கற்பூரத்தில் நெருப்பு பட்டவுடன் ஒளிவிட்டு பிரசாகிப்பதைப் போல, இப்பழத்தை சாப்பிட்டதும், தேகத்தில் உடனே ஒருவித தெம்பு ஏற்படுவதால்தான் அதற்கு இப்பெயர் ஏற்பட்டது போலும்.
நேந்திரன் வாழைப்பழம்:
கேரளத்தில் அபரிமிதமாக விளையும் பழம் இது. கோலையிலும் விளைவிக்கிறார்கள். நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது.
மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம்.
நல்ல சத்துக்கள் நிரம்பியதாக இருக்கும்.
உடம்புக்கு குளிர்ச்சியை தருவது.
இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும்
வற்றல், சிப்ஸ், ஜாம் செய்து விற்கிறார்கள்.
உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.அடுப்பை மூட்டி இட்லி பானையை வைத்து இட்லி தட்டில். இட்லிவேக வைப்பதுபோல அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து. 40 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் சாண்டோ வாக திகழ்வார்கள்.
நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள். இதனால் தான் கேரளியர் படிப்பில் சிறந்து விளங்குகிறார்களோ?
சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும். எனவே பழமாக சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுங்கள்.
நவரை வாழைப்பழம்:
மிகவும் குளிர்ச்சி தரக்கூடியது
அதிகமாக எவரும் விரும்பாத பழம் இது. உடல் ஆரோக்கயத்திற்கு உதவாதது.
சொறி, சிரங்கு உள்ளவர்கள் சாப்பிடக் கூடாகு இதைச் சாப்பிட்டால் புண் அதிகமாகும்.
வாத நோய்க்காரர்களுக்க ஆகவே ஆகாது.
பசியை மந்தப்படுத்தி விடும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.
நிறைய சாப்பிட்டால் சோம்பலை உருவாக்கம். அதாவது மந்தமாகவே இருக்கும்.
அடுக்க வாழைப்பழம்:
நவரைப் பழத்திற்குள்ள குணங்கள் அனைத்தும் இதற்கும் உண்டு.
இந்தப்பழத்திற்குள்ள நல்ல குணம், எந்த நோயும் இல்லாதவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் எந்த கெடுதியம் செய்யாது. அதாவது நல்லவனுக்கு நல்லவன் அவ்வளவுதான். எனவே நோயுள்ளவர்கள். இப்பழத்தை தொடபமல் இருப்பது நல்லது.
மொந்தன் வாழைப்பழம்:
இப்பழத்தை பொந்தன் வாழை என்றும் கூறுவார்.
சமையலுக்கு உபயோகப்படுத்தும் வாழைக்காயைப் பழுக்க வைத்த பின் எடுக்கும் பழத்தைத்தான் மொந்தன் பழம் என்ற கூறுவார்கள்.
கனிந்த பழம் சாப்பிட சுவையாக இருக்கும்.
மிதமாக அளவாகத்தான் இப்பழத்தை சாப்பிட வேண்டும்.
ஒரே நேரத்தில் மூன்று நான்கென்று உள்ளே தள்ளினால் பசியை மந்தப்படுத்தும்.
அளவாக தினம் ஒன்றோ இரண்டோ உணவுக்கு பின் சாப்பிட்டால் உஷ்ணத்தை தணிக்கும்.
வாந்தியை நிறுத்தும்.
காமாலை வியாதியை சுகப்படுத்தும் குணம் உண்டு.
கரு வாழைப்பழம்:
அதிகமாய் விற்பனைக்கு வராத பழம்
மலைப் பிரதேசங்களில் அதிகமாய் விளையும் பழம்
வாத நோய்க்காரர்களுக்கு ஆகாது
எவருக்கும் கெடுதல் தராது
உடலுக்கு ஊட்டத்தைத் தருதம் நல்ல பழம் இது.
குழந்தைகள் வளர்ச்சியை துரிதப்படுத்தும் இயல்பு கொண்டது. இப்பழம் கிடைத்தால் வாரத்திற்கு மும்முறை கொடுங்கள்.
செவ்வாழைப் பழம்:
வாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது இப்பழம்
சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருப்பது
கேரளாவில் அதிகம் விளையும் இப்பழம் சாப்பிட ருசியாகவும் இருக்கும்.
சற்று விலை அதிகமானது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம்.
செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்ப ஆற்றல் பெருகும். தொற்றுநோய்கள் இவர்களிடம் தோற்று ஓடும்.
மலச்சிக்கல் நீங்க:
மலச்சிக்கல் வந்தாலே நமது உடலில் பலவித சிக்கல் வந்து விடுகிறது. கூடவே மனச் சிக்கலும் ஏற்பட்டு விடு;ம். மலச்சிக்கலை செவ்வாழை தீர்த்துவிடும்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் இரவில் ஆகாரத்திற்கு பின, பாலுடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீர்ந்துவிடும்.
மலடு நீங்க:
மலடு நீங்க ஆயிரக்கணக்கில் செலவு செய்கு தீராது. இதனால் கணவன்-மனைவிக்குள் தினச் சண்டைகள் குடும்ப வாழ்க்கையை குலைத்துவிடும். நெடுங்காலம் குழந்தையில்லாத ஆணும், பெண்ணும் செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும். கர்ப்பத் தொடர்பான சிறுதடைகள், நோய்கள் நீங்கி, பிள்ளை பாக்கியம் கிடைக்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க:
நரம்புத் தளர்ச்சி மனிதனை நடைப்pணமாக்கி விடும். நரம்புகள் நன்றாக இருந்தால் தான் நாம் எந்தச் செயலையும் நன்கு செய்ய முடியும். சுறுசுறுப்பாய் செயலாற்ற முடியும். நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களின் கை, கால்களில் நடுக்கமேற்படும். ஆண்களுக்கு ஆண்மை தன்மை இருக்காது. தாம்பத்ய வாழ்வில் சுகமிருக்காது. உற்சாகமில்லாத இவர்கள் உற்சாகம் கொள்ள உதவுவது செவ்வாழைப் பழமே!
தினமும் இரவு ஆகாரத்திற்கு பின் பாலுடன் செவ்வாழைப் பழத்தை முப்பது நாட்களுக்கு விடாமல் சாப்பிட்டு வந்தால் உடம்பில் புது இரத்தம் ஏறும். நரம்புகளுக்கு நல்ல வலு ஏறிஇ நரம்புத்தளர்ச்சி நீங்கிவிடும்.
செவ்வாழையிலுள்ள உயிர்சத்துக்கள் நரம்புத் தளர்ச்சிக்க ஊட்ட மருந்தாக செயல்படுகிறது.
மாலைக்கண்ணுக்கு:
பகலில் நன்றாக கண்கள் தெரியும். சூரியன் மறைந்தபின் சிலருக்கு கண் பார்வை மங்கலாகிக் கொண்டேயிருக்கும். இந்த நோய்க்கு மாலைக்கண் என்று கூறுவார்கள், வைட்டமின் ஏ சத்து குறைந்தால் கண் பார்வை மங்கும். செவ்வாழையில் ஏ சத்து மற்றும் நரம்புகளுக்க ஊட்டம் தரும் சத்துக்களும் மிகுதி.
எனவே மாலைக்கண் நோய் உள்ளவர்கள், தினமும் காலை ஆகாரத்திற்கு பின்னம், மாலையும் ஒவ்வொன்றென தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர, மாலைக்கண் நோய் நீங்கும்.
சிறுவர்களாய் இருப்பின் அரைப் பழமும் முதியவர்களாயிருப்பின் அரைப் பழமும் அவரவர் வயதிற்கும், ஜீரணத்திற்கும் தக்கபடி சாப்பிட்டு வாருங்கள்.
இன்னும் செவ்வாழைப்பழத்தால் பல பயன்கள் உள்ளன.
பல் சம்பந்தமான நோய்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போகும்.
இருதயம் பலப்படும்
பல்வேறு வகையான தொற்றுநோய்களை செவ்வாழை அண்ட விடாது.
பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.
வாழைப்பழத்தில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றின் எந்தப் பழம், தங்கள் உடம்புக்கு ஏற்றது என்பதை அறிந்து உண்டு ஆரோக்கியத்தோடு வாழ்வீர்.
Image may contain: ‎food, ‎text that says '‎எந்த வாழைப்பழம் என்ன பயன்.. Imע ANSWASOR am தெரியுமா?‎'‎‎

ஒருகைஓசையாகக்கொச்சைப்படுத்தப்பட்டது வேதனை.

 தமிழருவி மணியன் அரசியலில் ஈடுபட்டு இதுவரை என்ன செய்தார்? என்பது ஒரு வாசகரின் விவரமறியாத விடலைக் கேள்வி. கடந்த கால அரசியல் வரலாற்றை ஒரு பருந்துப் பார்வையில்கூடப் பார்க்கத் தெரியாத கழுகார் ‘ இதே கேள்வி அவருக்கும் எழுந்ததாலோ என்னமோ போகிறேன்.. வரமாட்டேன்

என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்’என்று எள்ளல் தன்மையோடு பதில் அளித்திருக்கிறார்.
ஐம்பதாண்டுகளுக்கு மேல் சில மேலான இலட்சியங்களுக்காக ஒரு முழு வாழ்க்கையையும் வீணாக்கிவிட்டவனின் வலி கழுகறிய வாய்ப்பில்லை. வானத்தில் வட்டமிட்டாலும் கழுகின் பார்வை மண்ணில் கிடக்கும் அழுகிப்போன மாமிசத்தின் மீதுதான் படிந்து கிடக்கும்.
ஐம்பதாண்டுகளுக்கு மேல் அரசியலில் தமிழருவி மணியன் என்ன செய்தான்?
கல்லூரிப் பருவத்திலேயே படிப்பில் சிந்தை செலுத்தாமல் இந்தி எதிர்ப்பு வேள்வியில் மிகத் தீவிரமாகக் களமாடியவன் தமிழருவி மணியன். இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தபோது இளம் பருவத்தில் மாநிலம் முழுவதும் ஒற்றை மனிதனாக நெருக்கடி காலக் கொடுமைகளை
எதிர்த்து நான்கு சுவர்களுக்கு நடுவில் எந்த அச்சமுமின்றி நாக்கு யாகம் நடத்தியவன் தமிழருவி மணியன்.
ஜனநாயகம் பெற்றுத் தந்த அடிப்படை உரிமைகள் அனைத்தையும் 42வது சட்ட திருத்தத்தின் மூலம் இந்திராகாந்தி பறித்தெடுத்தபோது அதை எதிர்க்க அனைவரும் தயங்கியநிலையில் , ‘அச்சமே கீழ்களது ஆசாரம்’என்று ஆண்மையுடன் கருத்தரங்கத் தலைமையேற்று மிகக் கடுமையாகப் போர்க்குரல் கொடுத்தவன் தமிழருவி மணியன். அப்போது கேள்வி கேட்ட வாசகரும், நையாண்டி செய்த கழுகாரும் பிறந்திருக்க வாய்ப்பில்லை.
அண்ணாவின் மறைவுக்குப் பின்பு சுயநலத்தில் சுருங்கி, பொதுவாழ்க்கைப் பண்பு நலன்களைப் பாழ்படுத்தி, எவ்வித சமூகக் கூச்சமுமின்றி மக்கள்
சொத்தைக் கொள்ளை அடிப்பதையே வாழ்வியலாகக் கொண்டு வலம் வரும் இரண்டு திராவிட கட்சிகளின் சுயமுகங்களைத் தொடர்ந்து தோலுரித்துக் காட்டி மக்களை விழிப்படையச் செய்ய முயன்று பார்ப்பதே அரசியலில் ஆக்கபூர்வமான பங்களிப்பு இல்லையா?
வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்கு ஒரு நாள் தி.மு.கவிலும் மறுநாள் அ.தி.மு.க. விலும் மாறிமாறிப் பயணிக்காமல் ஐம்பதாண்டுகளுக்கு மேல் சுதர்மத்தையும், சுயாபிமானத்தையும் இழந்துவிடாமல் ஒரு சிறிய வாடகை வீட்டில் வறுமையோடு வாழ்க்கை நடத்துவது மக்கள் நலன் சார்ந்த அரசியல் தவம் இல்லையா?
உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் எள்ளளவும் பழுதுபடாமல் சேற்றில் மலர்ந்தாலும் அந்தச் சேறுபடாமல் தன்னைக் காத்துக்கொள்ளும் தாமரையைப்போல் வாழ்வதே அரசியலில் ஒரு பெருமைக்குரிய சிறப்பில்லையா?
இலக்கிய மேடைகளில் பேசுவதற்கு வழங்கப்படும் பணத்தைத் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் கல்விக்கும், வறுமையில் வாடும் இளம்பெண்களின் திருமணத்திற்கும் பயன்படுத்துவது ஓர் உயரிய சமூகப் பங்களிப்பில்லையா?
மதுவிலக்கிற்காக மாநிலம் முழுவதும் என்னுடைய காந்திய மக்கள் இயக்கம் நடத்திய போராட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், வருவாய் இழப்பை ஈடு
செய்ய முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்ப்பித்த நிதியாதாரம் பெருக்கும் மாற்றுத் திட்டம் பற்றி ஏதாவது உங்கள் இருவருக்கும் தெரியுமா?
மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற கொள்கைப் பதாகைகளைச் சுமந்தபடி நாங்கள் தொடர்ந்து நடத்திய வேள்வியை அறியாமல் நீங்கள் இதுவரை வானத்துத் தேவர்களாய் வாழ்ந்து வந்தீர்களா?
இப்போதைய கழுகார் விகடன் குழுமத்திற்குப் புதியவரா? உங்கள் இதழில் 'எங்கே போகிறோம் நாம்?' என்று தொடர் கட்டுரைகளையும், அரசியல் திறனாய்வுக் கட்டுரைகளையும், ஒவ்வொரு தலைவர்களின் முரண்பாடுகளையும் பகிரங்க மடல்களின் வடிவில் அறச்சீற்றத்துடன் வெளிப்படுத்திய கட்டுரைகளையும்
தமிழருவி மணியன் எழுதியதெல்லாம் நேரிய அரசியலுக்கான பங்களிப்பு இல்லையா?
கஜா புயலில் கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட போது ஒற்றை மனிதனாய்க் கல்லூரிகளில் பேசித் துண்டேந்தி 16 லட்சம் ரூபாய்க்குமேல் ஆனந்த விகடன் அறக்கட்டளைக்கு வழங்கிய தமிழருவி மணியனைப் பற்றி உங்களுக்கு என்னதான் தெரியும்?
கலைஞரின் அழைப்பை ஏற்றுத் திட்டக் குழுவில் பணியாற்றியதும், வைகோவை ஆதரித்ததும், 2014இல் நாடாளுமன்றத் தேர்தலில் இரு திராவிட கட்சிகளுக்கு எதிராகக் கூட்டணியமைத்ததும் விமர்சிக்கப்படலாம். ரஜினியைத் தேர்தல் களத்தில் முன் நிறுத்த முயன்றது கொச்சைப் படுத்தப்படலாம். ஆனால், இவற்றின் மூலம் பழியையும் பகையையும் அன்றி வேறெந்தப் பயனையும் தமிழருவி மணியன் பெற்றுவிடவில்லை. சுய ஆதாயத்திற்காக எந்த நிலையிலும் செயற்பட்டவனில்லை தமிழருவி மணியன். உங்கள் இருவர் அகராதியில் அமைச்சர்களாக வலம் வருவதும், சாதியைச் சொல்லிக் கட்டப் பஞ்சாயத்து செய்வதும், மதத்தைக் காட்டி மக்களைப் பிரிப்பதும், இனம், மொழி என்று இளைஞர்களை ஏமாற்றுவதும்,கொள்கை பேசிக் கொள்ளை அடிப்பதும் மட்டுமே அரசியல் பங்களிப்பு என்றால் அதைத் தமிழருவி மணியன் எந்நாளும் செயததில்லை என்பது உண்மைதான்.

உங்களைப் புண்படுத்துவது_என்_தொழில்_அல்ல......

 கிருஷ்தவ இஸ்லாமிய அன்பர்களே......நண்பர்களே......எனது பதிவுகள் அனைத்தும் உங்களை புண்படுத்துவதாக அமைந்திருந்தால்..... உலகின் உயரிய இந்துமதத்தின் கோட்பாடுகளை மதிப்பவன் என்பதால்... அதற்கு மன்னிப்பு கேட்க கடமைப்பட்டுளளேன்...

ஆனால் அதற்கு முன் உங்களிடம் சில கேள்விகளும்.....அதற்கான பதில்களும்...... தரவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்...
பொறுமையாகப் படித்துப் பாருங்கள் ......
இதன் தலைப்பு.............................................. #பிற மதத்தவரால் காயம்பட்ட இந்து உணர்(வாளர்)வுகள்# என்று கொள்வோம்.... சொல்லுவோம்......
#ஐயா........
1. நீங்கள் எங்கள் புனித நூலான மகாபாரதத்தில் வரும் குந்தி தேவி மணமுடிக்காமல் எப்படி கர்ணன் பிறந்தான் என்று கிண்டலடித்து....கேட்டால் தப்பில்லை......ஆனால்...... நான் கன்னி மேரிக்கு ஏசு எப்படி பிறந்தார் என்று கேட்டால் உங்கள் மனம் புண்படுகின்றதா..?
2.ஐயா.... நீங்கள் கிருஷ்ணனுக்கு ஏன் 16000ம் மனைவிமார்கள் என்று கட்டுக் கதையைச் சொல்லி எம்மிடம் கேட்கும் போது.... நான் முகமது நபி அவர்கள் ஏன் 19 மணம் செய்தார் என்று கேட்டால் உங்கள் மனம் புண்படுகின்றதா...?
3. ஐயா.......... நீங்களும் உங்கள் மதபோதகர்களும் நாங்கள் வணஙகும் தெய்வத்தை பிசாசு சாத்தான் என்று இகழ்ந்தபோது... அதை பொறுமையாக கேட்டுவிட்டு நான்...... தன்னையே காத்துக்கொள்ள முடியாத ஏசு உங்களை எப்படி காப்பாற்றுவார் என்று கேட்டால் உங்கள் மனம் புண்படுகின்றதா....?
4.ஐயா...... நீங்கள் நாங்கள் வணங்கும் சிவலிங்கத்தை உங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் இகழ்ந்து பேசினால் நான் மௌனமாக இருக்க வேண்டும்...ஆனால் மெக்கா கௌபாவில் உள்ள கல்லை நீங்கள் ஏன் முகர்ந்து பார்க்கின்றீர்கள் என்றால் உடனே..... உங்கள் மனம் புண்பட்டுவிட்டதா.....?
5. ஐயா.... நீங்கள் இந்துக்களின் வீடுகளுக்கு மட்டும் சென்று மதம் மாறு மனம் மாறு என்று பிரச்சாரம் செய்யும் போது.... என்னிடமே வந்து மதம் மாறு என்று சொன்னபோது .....நான் ஏசு எல்லோருக்கும் பொதுவானவர் தானே..... இஸ்லாமிய வீட்டிலும் உங்கள் பிரச்சாரத்தை செய்து மனம் மாற்றுங்கள் என்று சொன்னால் உங்கள் மனம் புண்பட்டுவிடுமா......?
இது என்ன நியாயம் .....?
நாங்கள் யாராவது உங்கள் வீடுகளுக்கு வந்து நீங்கள் நம்பிக்கையோடு வணங்கும் ஏசுவையோ அல்லாவையோ இகழ்ந்து பேசி மதம் மாறு மனம் மாறு என்று சொல்கின்றோமா...?
போனது போகட்டும் .....பெரும்பான்மை சமூகம் என்ற பெயரில் புழுவை விட கேவலமாக......கோழைகளைப் போல்.....இதுவரை ஆண்டவர்களாலும்....அரசியல் தலைவர்களாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட .....இந்துக்களுக்கு..... அநீதி என்றால்....இந்துக்களுக்காகப் போராடும் அமைப்புகள்....கட்சிகள்......தனியார்களைக் கூச்சமின்றி மதவெறி அமைப்புகள் என்கிறீர்களே.....தமிழகத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்ட கிறித்தவ அமைப்புகள்.....70க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள்.....20க்கும் மேற்பட்ட முஸ்லீம் கட்சிகள்.... இவையெல்லாம் மதவெறி அமைப்புகள் இல்லையா?....எங்கே போனது உங்கள் செக்யூலரிசம்?......எங்கே போனது உங்கள் சகோதரத்துவம்?....எங்கே மதச்சார்பின்மை?...........இந்துக்களைக் காக்க.... மீதமுள்ளதையாவது நன்நெறிப்படுத்துவோம்..... ஒன்றுபடுவோம்..... என்று எங்களுக்கு நாங்களே போதனைகள் செய்து ஒன்றுசேர்வதைப் பார்த்து....இத்தனைநாள் நீங்கள் செய்தது போல்....அப்பாவி இந்துக்களை ஏமாற்றி .... மதம் மாற்ற முடியவில்லையே.... என்று உங்கள் மனம் புண்ணாகின்றதா...?
உங்களை போல் இந்துக்களாகிய நாங்களும் ரத்தம் சதை எலும்பு ஆகியவற்றில் படைக்கப்பட்ட பிறப்புகள் தான் .......எங்களுக்கும் மனம் நோகும்..... எங்களுக்கும் எங்கள் மதத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் உண்டு... என்பதை உணருங்கள் நல்வழிப்படலாம்... நலமுடன் வாழலாம்..... இவைகள் நியாயம் என்றால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக உள்ளேன்.....
கடைசியாக ஒன்று.....
# உங்களைப் புண்படுத்துவது_என்_தொழில்_அல்ல........_ இது_என்_இந்துமதத்தின் உயரிய கோட்பாடுகளுக்காக......இந்து என்ற உயரிய ஆத்ம_திருப்திக்காக_........நான்_செய்ய விரும்பும்..._என்_ஆதங்கத்தின்_வெளிப்பாடு.......
#என் உடல் உயிர்....செயல்....ஆற்றல்.... திறமை எல்லாம்...._நான்_வணங்கும்_ஈசனால்......வெங்கடேசப் பெருமாளால்......_எனக்கு_வழங்கப்பட்ட_பிறவிக்கொடை....அதை சோற்றுக்கும்...பொன், பெண், வாளுக்காக பயந்து மதம் மாறிய ......
எவராலும் #அழிக்க முடியாது......எல்லாம் நன்மைக்கே....வாழ்க வையகம்.... வாழ்க வளமுடன்.

அலுவலகத்தில் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது. இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? இதோ சில பயனுள்ள ஆலோசனைகள்!
* உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.
* உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.
* அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே. மற்ற உங்களது தனிபட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சினைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.
* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம். ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.
* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல். இவையெல்லாம் நம் அக்கம்பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!
* ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு, மனமெச்சூரிட்டி போன்றவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம். ஆனால் பொதுவான ஆண்கள் சமூகம் என்பது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட சதைப் பிண்டம் என்றே நினைக்கிறது. ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்கிறானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
* ஆபிஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.
* ஜல் ஜல் என்று அதிக மணியோசைக் கொண்ட கொலுசைத் தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே.
* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது "நன்றி" என்று ஸ்ட்ரெய்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிருங்கள்
Image may contain: 2 people, people standing and outdoor

பெண்ணின் கேள்வியால் ஸ்டாலின் கூட்டத்தில் சலசலப்பு.

 தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடத்திய, மக்கள் கிராம சபை கூட்டத்தில், நேற்று திடீர் சலசலப்பு ஏற்பட்டது. கோவை பெண் கேட்ட கேள்வியால், கடும் கோபம் அடைந்த ஸ்டாலின், 'அ.தி.மு.க., அனுப்பிய ஆள் நீ' என, சாடினார். அங்கிருந்த தி.மு.க.,வினர், அப்பெண்ணை சூழ்ந்து தாக்கியதால், வன்முறையை தடுக்க, போலீசார் களமிறங்கினர்.

ஆத்திரமடைந்த ஸ்டாலின், ''உங்கள் கொட்டத்தை நிறுத்துங்கள்; இல்லையேல், அ.தி.மு.க.,வினரால், எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம்,'' என, சவால் விட்டார். 'மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அ.தி.மு.க.,வை குற்றம் சொல்வதா' என, ஆளும் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.


latest tamil news



கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அருகே, தேவராயபுரம் ஊராட்சி, பரமேஸ்வரன் பாளையம், கொங்கு திருப்பதி கோவில் எதிரே உள்ள மைதானத்தில், தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. ஸ்டாலின் பேசுகையில், ''இங்கு வந்திருக்கும் அனைவரும் பேசுவதாக இருந்தால், 10 நாட்களாகி விடும். நாங்களே, 10 பேரை தேர்வு செய்திருக்கிறோம். ஒவ்வொருவராக அழைக்கிறேன்; சுருக்கமாக பேசுங்கள்,'' என்றார்.

என்ன பேச வேண்டும் என, ஏற்கனவே சொல்லிக் கொடுத்ததை, ஒவ்வொருவராக ஒப்பித்தனர். ஆறாவதாக, ஒருவரை அழைத்த போது, ஸ்டாலின் முன், தரையில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து, 'என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். எதற்காக, கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்' என, கேள்வி எழுப்பினார். அதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


latest tamil news



அருகில் அமர்ந்திருந்த கட்சியினர் எழுந்து, அவரை சூழ்ந்தனர்.அந்த பெண்ணை பார்த்து,''எங்கிருந்து வருகிறீர்கள்,'' என, ஸ்டாலின் கேட்டார்.'மைல்கல்' என, பதிலளித்ததும், 'இந்த ஊராட்சியா' என, மீண்டும் ஸ்டாலின் கேட்க, 'அதெல்லாம் தெரியாமல், எதற்கு கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்' என, அப்பெண் கேட்டார். கட்சியினர் ஆவேசமடைந்து, ஸ்டாலின் முன்னிலையிலேயே, அவரை தாக்க முயன்றனர்; கையை பிடித்து இழுக்க முயன்றனர்.
அதை கவனித்த ஸ்டாலின், ''யாரும் கை வைக்காதீங்க,'' என, கட்சியினரை கட்டுப்படுத்தி விட்டு, ''அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள்... மேடம், உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. கூட்டத்தை விட்டு, வெளியே போங்க... போலீஸ் வரட்டும்,'' என்றார்.


latest tamil news




கட்சியினரே, அப்பெண்ணை அழைத்து சென்று, அரங்கிற்கு வெளியே அனுப்பினர். அப்போது, 'கொரோனா பரவிய காலத்தில், எங்கே போனீர்கள்; இப்போது, கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன்' என, அப்பெண் கோஷமிட்டவாறு சென்றார். போலீசார் அழைத்து சென்றபோது, தகாத வார்த்தைகளால் வசைபாடிய கட்சியினர், அவரை தாக்கினர். போலீசாருக்கும், அப்பெண்ணுக்கும், உடன் வந்த இன்னொருவருக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் ஜீப்பில் ஏற்றிய பின்னரும், கட்சிக்காரர் ஒருவர், காலால் எட்டி உதைத்தார்.போலீஸ் விசாரணையில், அப்பெண்ணின் பெயர் பூங்கொடி, உடன் வந்தவர் ராஜன் என்பது தெரிந்தது. அவர்களை, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின், கோவை அரசு மருத்துவமனையில், அப்பெண் அனுமதிக்கப்பட்டார்.


'கொட்டத்தை அடக்குங்கள்'



கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது: எனக்கு நேற்றே தெரியும். கூட்டம் நடக்காமல் தடுக்க, திட்டமிட்டு, இக்காரியத்தை செய்திருக்கின்றனர். நீங்கள் நடத்தும், எந்த கூட்டத்தையும், நாங்களும் நடத்த விட மாட்டோம். கட்டுப்பாடான இயக்கம் என்பதால், எந்த பிரச்னையுமின்றி, அனுப்பி வைத்திருக்கிறோம். அமைச்சர் வேலுமணி அவர்களே... இதோடு உங்கள் கொட்டத்தை அடக்குங்கள். இதுமாதிரி நடந்தால், நீங்கள் மட்டுமல்ல; உங்கள் முதல்வரும் எங்கும் கூட்டம் நடத்த முடியாது. நாங்கள் இறங்கினால், என்னாகும் என, எங்களுக்கு தெரியும். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.நாளைக்கு நீங்கள் கூட்டம் போடுகிறீர்களே; நடிகை கூட்டிட்டு வர்றீங்க; 'ரிக்கார்டு டான்ஸ்' போடுவீங்க. அது, உங்கள் பண்பாடு; கலாசாரம்; நடத்துங்க; வேண்டாமென சொல்லலை.

இந்த கூட்டத்தில், தி.மு.க., தொப்பியை அணிந்து ஏன் வரணும்; தைரியமிருந்தால், அ.தி.மு.க., என சொல்லிட்டு உட்கார்ந்திருக்கணும். தி.மு.க., என கூறி அமர்ந்திருப்பது, கலவரத்தை ஏற்படுத்துவதற்கானமுயற்சி.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


கே.பி.முனுசாமி பதிலடி



latest tamil news



இதற்கு பதிலளித்த, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், ''இதுபோன்ற கூட்டங்களில், மக்கள் என்ன சொல்கின்றனர் என்பதை தான், ஸ்டாலின் கேட்க வேண்டும்; அவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல வேண்டும்.
''அதை செய்ய முடியாத ஸ்டாலின், ஆளும் கட்சி வேலை என்பதும், கூட்டம் நடத்த விட மாட்டோம் என எச்சரிப்பதும் ஏன்,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.


சாலை மறியல்


ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்ட பெண்ணை, தி.மு.க.,வினர் தாக்கிய தகவல் அறிந்ததும், தொண்டாமுத்துாரில், அ.தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் தடுத்து, அவர்களை கைது செய்தனர். இத்தகவல், மக்கள் கிராம சபை கூட்டம் நடந்த இடத்துக்கு தெரிய வந்தது. ஸ்டாலின் செல்லும் வாகனத்தை மறிக்க, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு, தொண்டாமுத்துாரில் சாலை மறியல் செய்வதாக, 'மைக்'கில் அறிவிக்கப்பட்டது. இதனால், தி.மு.க.,வினரும் மறியல் போராட்டத்தில் இறங்க, போலீசார் கைது செய்து, தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


'கெடுதல் வந்திடும்'



ஸ்டாலின் மேலும் பேசுகையில், ''பத்திரிகை நிருபர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்பவாவது, செய்தி போடுவர் என நினைக்கிறேன். 'இதுதான் நல்ல நிகழ்ச்சி. மக்களுக்கான நிகழ்ச்சி' என, நிற்கிறீர்கள். அமைச்சர் வேலுமணி பற்றி, செய்தி வெளியிடுங்கள். இல்லேன்னா, உங்களுக்கு கெடுதல் வந்துடும். ஏன்னா, நீங்கள் செய்தி போட்டாலும், போடாவிட்டாலும், சமூக வலைதளங்களில் வரப் போகுது,'' என்றார்.

தமிழக காங்கிரசை நிர்வகிக்க 400 பேர்.

 தமிழக காங்கிரஸ் கட்சியில், ஏகப்பட்டவர்களுக்கு பதவிகள் அளிக்கப்பட்டுள்ள, புதிய கூத்து அரங்கேறியுள்ளது. துணை தலைவர் பதவிக்கு, 32; பொதுச் செயலர் பதவிக்கு, 57; செயலர் பதவிக்கு, 104 பேர் என, புதிய நிர்வாகிகளாக, 400க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதவி கிடைக்காத கோபத்தில், 'இதனால், எந்த பயனும் இல்லை; அதிகாரமும் இல்லை' என, கார்த்தி சிதம்பரம் கொதிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக இருந்து வந்தது. ஞானதேசிகன் தலைவராக இருந்த போது நியமிக்கப்பட்ட, நிர்வாகிகளே தற்போதும் நீடிக்கின்றனர். இடையில், இளங்கோவனும், திருநாவுக்கரசரும், தலைவர்களாக வந்து சென்று விட்டனர்.


தீவிர முயற்சி



தற்போது, தலைவராக உள்ள அழகிரி, தனக்கான நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த, தீவிர முயற்சி எடுத்தார். அதன் பலனாக, 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அடங்கிய, 'ஜம்போ' பட்டியலுக்கு, காங்கிரஸ் மேலிடம், நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தமிழக காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர்களாக, மாநில தலைவர் அழகிரி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், செல்லக்குமார், எஸ்.டி.நெடுஞ்செழியன் உட்பட, 56 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஏற்கனவே பொருளாளராக இருந்த நாசே ராமச்சந்திரன் மாற்றப்பட்டு, ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய துணை தலைவர்களாக, நாசே ராமச்சந்திரன், பலராமன், கோபண்ணா, டி.என்.முருகானந்தம், சொர்ணா சேதுராமன், தாமோதரன், விஜயன் உட்பட, 32 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பொதுச் செயலர்களாக செல்வம், சிரஞ்சீவி, தணிகாசலம், ரங்கபாஷ்யம், வசந்தராஜ், ஜான்சிராணி, கோபி, காண்டீபன் உட்பட, 57 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், தங்கபாலு மகன் கார்த்தி, இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா, மறைந்த வசந்தகுமார் மகன் நடிகர் விஜய்வசந்த், திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாநில செயலர்களாக, முனீஸ்வர கணேஷ், கடல் தமிழ்வாணன், ஏ.வி.எம்.செரீப், மோகன்காந்தி, ராமசாமி உட்பட, 104 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தலைவர்கள் பட்டியலில், திரவியம், டில்லிபாபு, சிவராஜசேகரன், ரஞ்சன்குமார், துரை, முத்தழகன், நாஞ்சில் பிரசாத், ஊர்வசி அமிர்தராஜ் உட்பட, 32 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், மாநில தேர்தல் குழு உறுப்பினர்களாக, மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லபிரசாத், கேரள மாநில பொறுப்பாளர் விஸ்வநாதன், ஜே.எம்.ஆரூண், ராணி உட்பட, 34 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.


இடம் கிடைக்கவில்லை



தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், 19 பேர்; தேர்தல் பிரசார குழுவில், 38; விளம்பர குழுவில், 31; தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில், 24; ஊடக ஒருங்கிணைப்பு குழுவில், 16; தேர்தல் நிர்வாக குழுவில், ஆறு பேர் என, மொத்தம், 400க்கும் மேற்பட்டோருக்கு பதவிகள் தரப்பட்டு உள்ளன.
துணை தலைவர், பொதுச்செயலர் உள்ளிட்ட, மாநில நிர்வாகிகள் பட்டியலில், கார்த்தி சிதம்பரத்துக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், கோபம் அடைந்த அவர், தன் எதிர்ப்பை, 'டுவிட்டர்' பக்கத்தில் காட்டியுள்ளார்.

'இவ்வளவு பெரிய கமிட்டியால், எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள் என, நியமிக்கப்பட்ட யாருக்கும், எந்த அதிகாரமும் இருக்காது; அதிகாரம் இல்லாததால், யாருக்கும் பொறுப்பு என்பதும் இருக்காது' என, கூறியுள்ளார்.
சோனியா, ராகுல் ஒப்புதலுடன், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலுக்கு, கார்த்தி சிதம்பரம் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், காங்கிரசில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Friday, January 1, 2021

வாழ்வின் முக்கியமான வருடம் 2020!

 இன்னொரு தடவை இப்படி ஒரு

அருமையான
வருடம் அமையுமான்னா கஷ்டம் தான்!
"நான்" என்னும் திமிரை சுக்குநூறாக்கிய வருடம்.
பாக்கெட்ல 2000 ரூபாய் நோட்டு எத்தனை இருக்குன்னு தெரியாமல் இருந்த என்னை, 20 ரூபாய்க்கு பாப்பா உண்டியலை உடைக்க வெச்சது இந்த ஆண்டின் சிறப்பு!
எத்தனை கோடி லோன் தேவைன்னு கூப்பிட்டு கூப்பிட்டு குடுத்த வங்கிகள் இ.எம்.ஐ கட்டச்சொல்லி காறிதுப்பிய வருடம்.
எதிர்காலத்தில் ஆறுமாசம் நான் படுக்கையில் இருந்தால் என் குடும்பம் என்னவாகும் என உணர்த்திய வருடம்.
இந்தனை நாள் என்னை சுற்றியிருந்து சுரண்டிக்கொண்டிருந்த உறவுகள், நட்புகளில் உண்மையான உறவுகள், நட்புகள் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் தான் என அடையாளம் காட்டிய வருடம்.
என்னுடைய ஆரம்பபுள்ளிக்கே சென்றுவிட வைத்த வருடம்.
உங்களது விஞ்ஞானமும், நீங்களும் இயற்க்கையின் முன் தூசுடான்னு செவுள்ல ஒரு அப்பு அப்பிய வருடம்.
எதிர்வரும் ஆண்டுகளில் எப்படி வாழணும்ன்னு என்னையே எனக்கு கண்ணாடியாய் காட்டிய வருடம்.
வாழ்க்கை ஓட்டத்தில் ஓட்டமாய் ஓடி, வெற்றிக்களிப்பில் கால்மேல் கால்போட்டு உக்கார்ந்த தருணத்தில்,
உன்னுடைய இலக்கினை அடைய நீ ஓட வேண்டிய தூரம் இன்னும் நெடுந்தூரத்தில் உள்ளது என உணர்த்திய வருடம்.
ஆயிரம் ஆன்மீகவாதிகள், வழிகாட்டிகளால் புரியவைக்க முடியாததை ஆறே மாதத்தில் ஆணி அடிச்ச மாதிரி பதிய வைத்த வருடம்.
ஆண்டின் துவக்கத்தில் எந்த நிலையில் இருந்தேனோ , ஆண்டின் இறுதியிலும் அதே இடத்தில் தான் இருக்கின்றேன்!
தொலைத்தது அதிகம், எடுத்தது எதுவும் இல்லை!
ஆனால் இடைப்பட்ட காலங்களில் ஒரு கீதா உபதேசமே நடத்திவிட்டாய்!
2020ம் வருடமே நீயே என் வாழ்வின் புதிய அடித்தளமாகி விட்டாய்.
மீண்டும் ஒருமுறை என்னை பிறக்க வைத்து விட்டாய்!
நீ வசந்த காலமல்ல!
சோதனைகளை தந்த வேதனை காலம்தான்.
ஆனாலும் நான் தலைவணங்க வேண்டிய என் வருங்காலம்.
Image may contain: text that says '2020 நன்றி!'

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...